வேழங்களினின்றும் மகளிர் இறங்க அவை
பிணிக்கப்படல்

898.கோவை ஆர் வட, கொழும்
    குவடு ஒடிதர, நிவந்த,
ஆவி வேட்டன, வரி சிலை
    அனங்கன் மேல் கொண்ட,
பூவை வாய்ச்சியர் முலை, சிலர்
    புயத்தொடும் பூட்ட,
தேவதாரத்தும் சந்தினும்
    பூட்டின சில மா.
1

உரை
   
 
மதக்களிற்றின் செயல்

899.நேர் ஒடுங்கலில் பகையினை
    நீதியால் வெல்லும்
சோர்வு இடம்பெறா உணர்வினன்
    சூழ்ச்சியே போலக்,
காரொடும் தொடர் கவட்டு
    எழில் மராமரக் குவட்டை
வேரொடும் கொடு கிரி என
    நடந்தது ஓர் வேழம்.
2

உரை
   
 
மதவேழம் கண்ணனை நிகர்த்தல்

900.திரண்ட தாள் நெடுஞ் செறி பணை
    மருது இடை ஒடியப்
புரண்டு பின் வரும் உரலொடு
    போனவன் போல,
உருண்டு கால் தொடர் பிறகிடு
    தறியொடும் ஒருங்கே
இரண்டு மாமரம் இடை இற
    நடந்தது ஓர் யானை.
3

உரை
   
 
ஒரு வேழம் மந்திரிக்கடங்கா மன்னனை நிகர்த்தல்

901.கதம் கொள் சீற்றத்தை ஆற்றுவான்
    இனியன கழறிப்
பதம் கொள் பாகனும் மந்திரி ஒத்தனன்;
    பல நூல்
விதங்களால் அவன் மெல்லென மெல்லென
    விளம்பும்
இதங்கள் கொள்கிலா இறைவனை ஒத்தது
    ஓர் யானை.
4

உரை
   
 
ஓர் மதகளிற்றின் செயல்

902.மாறு காண்கிலதாய் நின்று,
    மழை என முழங்கும்,
தாறு பாய் கரி வன கரி
    தண்டத்தைத் தடவிப்,
பாறு பின் செலக் கால் எனச்
    செல்வது, பண்டு ஓர்
ஆறு போகிய ஆறு போம்
    ஆறு போன்றதே.
5

உரை
   
 
ஏழிலைப்பாலைமரத்தை ஒரு யானை அழித்தல்

903.பாத்த யானையின் பதங்களில்,
    படு மதம் நாறக்,
காத்த அங்குசம் நிமிர்ந்திடக்,
    கால் பிடித்து ஓடிப்,
பூத்த ஏழ் இலைப் பாலையைப்
    பொடிப் பொடி யாகக்
காத்திரங்களால் தலத்தொடும்
    தேய்த்தது ஓர் களிறு.
6

உரை
   
 
மலை யூதத் தலைவனை ஒத்தல்

904.அலகு இல் யானைகள் அனேகமும்,
    அவற்றிடை மிடைந்த
திலக வாள் நுதல் பிடிகளும்,
    குருளையும், செறிந்த
உலவை நீள் வனத்து,
    ஊதமே ஒத்த; அவ் ஊதத்
தலைவனே ஒத்துப்
    பொலிந்தது சந்திர சயிலம்.
7

உரை
   
 
தேரின் வருணனை

905.தரெுண்ட மேலவர் சிறியவர்ச் சேரினும்
    அவர்தம்
மருண்ட தன்மையை மாற்றுவர் எனும்
    இது வழக்கே!
உருண்ட வாய் தொறும் பொன் உருள்
    உரைத்து உரைத்து ஓடி,
இருண்ட கல்லையும் தம் நிறம்
    ஆக்கிய இரதம்.
8

உரை
   
 
மகளிரின் சிவந்த வாய்கள்

906.கொவ்வை நோக்கிய வாய்களை
    இந்திரகோபம்
கவ்வி நோக்கின என்று கொல்!
    காட்டு இனமயில்கள்
நவ்வி நோக்கியர் நலம் கொள் மேகலை
    பொலம் சாயல்
செவ்வி நோக்கின, திரிவன
    போல்வன திரிந்த.
9

உரை
   
 
மகளிர் மரநிழலில் தங்குதல்

907.உய்க்கும் வாசிகள் இழிந்து,
    இள அன்னத்தின் ஒதுங்கி,
மெய்க் கலாபமும் குழைகளும்
    இழைகளும் விளங்கத்,
தொக்க மெல் மர நிழல்படத்
    துவன்றிய சூழல்
புக்க மங்கையர், பூத்த கொம்பு
    ஆம் எனப் பொலிந்தார்.
10

உரை
   
 
மகளிர் பளிக்குப் பாறையில் உறங்குதல்

908.தளம் கொள் தாமரை எனத்
    தளிர் அடியினும் முகத்தும்
வளம் கொள் மாலைவண்டு அலமர,
    வழி வருந்தினராய்,
விளங்கு தம் உருப் பளிங்கு இடை
    வெளிப்பட, வேறு ஓர்
துளங்கு பாறையில், தோழியர் அயிர்த்திடத்,
    துயின்றார்.
11

உரை
   
 
மகளிர் குடில்களிற் புகுதல்

909.பிடிபுக்கு, ஆயிடை, மின்னொடும்
    பிறங்கிய மேகம்
படி புக்கால் எனப் படிதரப்,
    பரிபுரம் புலம்பத்,
துடி புக்கு ஆ இடைத் திருமகள்
    தாமரை துறந்து
குடி புக்கால் எனக், குடில் புக்கார்
    கொடி அன்ன மடவார்.
12

உரை
   
 
குதிரைகளைக் கூடத்திற் கட்டுதல்

910.உண் அமுதம் ஊட்டி
    இளையோர் நகர் கொணர்ந்த,
துண் எனும் முழக்கின,
    துருக்கர் தர வந்த,
மண்மகள் தன் மார்பின்
    அணி வன்ன சரம் என்னப்
பண் இயல் வயப் பரிகள்,
    பந்தியின் நிரைத்தார்.
13

உரை
   
 
சேனைகட்கு வேண்டுவன செய்யப்படுதல்

911.நீர் திரை நிரைத்த என
    நீள் திரை நிரைத்தார்;
ஆர்கலி நிரைத்த என
    ஆவணம் நிரைத்தார்;
கார் நிரை எனக் களிறு
    கா இடை நிரைத்தார்;
மாருதம் நிரைத்த என
    வாசிகள் நிரைத்தார்.
14

உரை
   
 
அரசமாளிகையை அறிந்து சேர்தல்

912.நடிக்கும் மயில் என்ன வரும்
    நவ்வி விழியாரும்,
வடிக்கும் அயில் வீரரும்,
    மயங்கினர் திரிந்தார்;
இடிக்கும் முரசக் குரலின்,
    எங்கும் முரல் சங்கின்,
கொடிக்களின், உணர்ந்து, அரசர்
    கோநகர் அடைந்தார்.
15

உரை
   
 
தூசியைத் துடைத்தல்

913.மிதிக்க நிமிர் தூளியின்
    விளக்கம் அறும் மெய்யைச்,
சுதைக்கண் நுரையைப் பொருவும்
    தூசு கொடு தூய்தாய்
உதிர்த்தனர் இளங்குமரர்;
    ஒவியரின் ஓவம்
புதுக்கினர் எனத் தருண
    மங்கையர் பொலிந்தார்.
16

உரை
   
 
அரசர்கள் படமாடஞ் சேர்தல்

914.தாள் உயர் தடக் கிரி இழிந்து
    தரை சேரும்
கோளரி எனக், கரிகள்
    கொற்றவர் இழிந்தார்,
பாளை விரி ஒத்து உலவு சாமரை
    படப் போய்,
வாள் எழ நிரைத்த பட
    மாடம் அவை புக்கார்.
17

உரை
   
 
படமாடத்தில் மங்கையர் முகங்களின் காட்சி

915.தூசினொடு வெண் படம்
    உடைக் குடில்கள் தோறும்,
வாச மலர் மங்கையர்
    முகங்கள், மழை வானின்
மாசு இல் மதியின்
    கதிர் வழங்கு நிழல் எங்கும்
வீசு திரை வெண் புனல்
    விழுங்கியது போலும்.
18

உரை
   
 
புழுதியாடிய யானையின் தோற்றம்

916.மண் உற விழுந்து
    நெடு வான் உற எழுந்து,
கண்நுதல் பொருந்தவரு
    கண்ணனில் வரும்; கார்
உண்நிறம் நறும் பொடியை
    வீசி, ஒரு பாகம்
வெண்நிற நறும் பொடி
    புனைந்த மத வேழம்.
19

உரை
   
 
புழுதியை உதறிவிட்ட குதிரைகள்

917.தீயவரொடு ஒன்றிய
    திறத்து அரு நலத்தோர்
ஆயவரை அந்நிலை
    அறிந்தனர் துறந்தாங்கு,
ஏய வரும் நுண் பொடி
    படிந்து உடன் எழுந்து ஒண்
பாய் பரி விரைந்து
    உதறி நின்றன பரந்தே,
20

உரை
   
 
கட்டை யறுத்துச் சென்ற குதிரைகள்

918.மும்மை புரி வன் கயிறு
    கொய்து, செயல் மொய்ம்பால்,
தம்மையும் உணர்ந்து,
    தரை கண்டு, விரைகின்ற
அம்மையினொடு இம்மையை
    அறிந்து நெறி செல்லும்,
செம்மையவர் என்ன,
    நனி சென்றன துரங்கம்.
21

உரை
   
 
திரைகளினிடையே மகளிர் கண்கள் பிறழ்தல்

919.விழுந்த பனி அன்ன திரை
    வீசுபுரை தோறும்,
கழங்கு பயில் மங்கையர்
    கருங்கண் மிளிர்கின்ற;
தழங்கு கழி சிந்திய
    தரம் பயில் தரங்கத்து
எழுந்து இடை பிறழ்ந்து
    ஒளிர் கொழும் கயல்கள் என்ன.
22

உரை
   
 
ஆற்றில் ஊற்றுநீர் தோன்றுதல்

920.வெள்ளம் நெடு வாரி உற
    வீசி இலவேனும்,
கிள்ள எழுகின்ற புனல்,
    கேளிரின் விரும்பித்
தெள்ளு புனல் ஆறு
    சிறிதே உதவுகின்ற,
உள்ளது மறாது உதவும்
    வள்ளலையும் ஒத்த.
23

உரை
   
 
ஆடவர் படமாடங்களிற் புகுதல்

921.துன்றி நெறி பங்கிகள்
    துளங்க, அழலோடும்
மின் திரிவ என்ன
    மணி ஆரம் மிளிர் மார்பர்,
மன்றல் மணம் நாறு பட
    மாடம் நுழைகின்றார்,
குன்றின் முழை தோறும் நுழை
    கோளரிகள் ஒத்தார்.
24

உரை
   
 
யானைகள் நீரைக் கலக்குதல்

922.நெருங்கு அயில் எயிறு இணைய,
    செம்மயிரின் நெற்றிப்,
பொரும் குலிகம் அப்பியன,
    போர் மணிகள் ஆர்ப்ப,
பெருங் களிறு அலைப்
    புனல் கலக்குவன, பெட்கும்
கருங் கடல் கலக்கும்
    மதுகைடவரை ஒத்த.
25

உரை
   
 
மதயானைகள் நீர்நிலைகளை விடாமை

923.ஒக்க நெறி உய்ப்பவர்
    உரைத்த குறி கொள்ளா,
பக்கம் இனம் மொய்த்து
    அயல் அலைக்க நனி பாரா,
மைக் கரி மதத்த,
    விலைமாதர் கலை அல்குல்
புக்கவரை ஒத்தன,
    புனல் சிறைகள் ஏறா.
26

உரை
   
 
பாடிநகர் கடலை ஒத்திருத்தல்

924.துகில் இடை மடந்தையரொடு
    ஆடவர் துவன்றிப்,
பகல் இடைய, அட்டிலில் மடுத்து,
    எரி பரப்பும்
அகில் இடு கொழும்புகை
    அழுங்கலின், முழங்கா
முகில் படு நெடும் கடலை
    ஒத்து உளது அம் மூதூர்.
27

உரை
   
 
பாடிநகர் அமரர் நாடு போன்றிருத்தல்

925.கமர் உறு பொருப்பின் வாழும்
    விஞ்சையர் காண வந்தார்,
தமரையும் அறியார் நின்று
    திகைப்பு உறு தகைமை சான்ற
குமரரும் மங்கைமாரும் குழுமலால்,
    வழுவி விண் நின்று
அமரர் நாடு இழிந்தது என்னப்
    பொலிந்தது அவ் னீக வெள்ளம்.
28

உரை
   
 
மகளிர் திரிதல்

926.வெயில் நிறம் குறையச் சோதி
    மின் நிழல் பரப்ப, முன்னம்
துயில் உணர் செவ்வியாரும்,
    துனியுறு முனிவினாரும்,
குயிலொடும் இனிது பேசிச்,
    சிலம்பொடும் இனிது கூவி,
மயிலினம் திரிவ என்னத்,
    திரிந்தனர் மகளிர் எல்லாம்.
29

உரை
   
 
ஆடவர் திரிதல்

927.தாள் இணை கழல்கள் ஆர்ப்பத்,
    தார் இடை அளிகள் ஆர்ப்ப,
வாள் புடை இலங்கச், செங் கேழ்
    மணி அணி வலயம் மின்னத்,
தோள் என உயர்ந்த குன்றின்
    சூழல்கள் இனிது நோக்கி,
வாள் அரி திரிவ என்னத்
    திரிந்தனர் மைந்தர் எல்லாம்.
30

உரை
   
 
கவிக்கூற்று

928.சுற்றிய கடல்கள் எல்லாம்
    சுடர் மணிக் கனகக் குன்றைப்
பற்றிய வளைந்த என்னப்,
    பரந்துவந்து இறுத்த சேனை,
கொற்றவர், தேவிமார்கள், மைந்தர்கள்,
    கொம்பு அனார், வந்து,
உற்றவர் காணல் உற்ற
    மலை நிலை உரைத்தும் அன்றே.
31

உரை
   
 
சந்திரசைலத்தின் வருணனை ((929-942))

929.பம்பு தேன், மிஞிறு, தும்பி,
    பரந்து இசை பாடி ஆட
உம்பர் வானகத்து நின்ற
    ஒளி தரு தருவின் ஓங்கும்
கொம்புகள், பனைக் கை நீட்டிக்,
    குழையொடும் ஒடித்துக், கோட்டுத்
தும்பிகள், உயிரே அன்ன
    துணை மடப் பிடிக்கு நல்கும்.
32

உரை
   
 
930.பண் மலர் பவளச் செவ்வாய்ப்
    பனி மலர்க் குவளை அன்ன,
கண் மலர், கொடிச்சிமார்க்குக்
    கணித் தொழில் புரியும் வேங்கை
உண் மலர் வெறுத்த தும்பி,
    புதிய தேன் உதவும் நாகத்
தண் மலர் என்று வானத்
    தாரகை தாவும் அன்றே.
33

உரை
   
 
931.மீன் எனும் பிடிகேளாடும், விளங்கும்
    வெண்மதி நல் வேழம்,
கூனல் வான் கோடு நீட்டிக்
    குத்திடக், குமுறிப் பாயும்
தேன் உகு மடையை மாற்றிச்,
    செந்தினைக் குறவர் முந்தி
வான நீர் ஆறு பாய்ச்சி, ஐவனம்
    வளர்ப்பர் மாதோ!
34

உரை
   
 
932.குப்புறற்கு அருமையால் அக்
    குலம் வரை சாரல் வைகி
ஒப்புறத் துளங்குகின்ற
    உடுபதி ஆடியின்கண்,
இப்புறத்தேயும் காண்பார் குறத்தியர்
    இயைந்த கோலம்,
அப்புறத்தேயும் காண்பார் அரம்பையர்
    அழகு மாதோ.
35

உரை
   
 
933.உதி உறு துருத்தி ஊதும் உலை
    உறு தீயும், வாயின்
அதி விட நீரும், நெய்யும், உண்கிலாது,
    ஆவி உண்ணும்
கொதி நுனை வேல் கண் மாதர்
    குறத்தியர் நுதலினோடு,
மதியினை வாங்கி ஒப்புக் காண்குவர்
    குறவர் மன்னோ!
36

உரை
   
 
934.பேணுதற்கு அரிய கோலக்
    குருளை அம், பிடிகள் ஈன்ற
காணுதற்கு இனிய வேழக்
    கன்றொடு களிக்கும் முன்றில்
கோணுதற்கு உரிய திங்கள்
    குழவியும், குறவர் தங்கள்
வாள் நுதல் கொடிச்சி மாதர்
    மகவொடு தவழும் மாதோ!
37

உரை
   
 
935.அஞ்சனக் கிரியின் அன்ன
    அழி கவுள் யானை கொன்ற
வெஞ்சினத்து அரியின் திண் கால்
    சுவட்டொடு, விஞ்சை வேந்தர்
குஞ்சி அம் தலத்தும், நீலக்
    குல மணித் தலத்தும், மாதர்
பஞ்சி அம் கமலம் பூத்த
    பசுஞ் சுவடு உடைத்து மன்னோ!
38

உரை
   
 
936.செங்கயல் அனைய நாட்டம்
    செவி உறா, முறுவல் தோன்றா,
பொங்கு இருங் கூந்தல், சோரா,
    புருவங்கள் நெரியா, பூவின்
அங்கையும் மிடறும் கூட்டி,
    நரம்பு உளர்ந்து, அமுதம் ஊறும்
மங்கையர் பாடல் கேட்டுக்,
    கின்னரம் மயங்கும் மாதோ!
39

உரை
   
 
937.கள் அவிழ் கோதை மாதர்
    காதொடும் உறவு செய்யும்
கொள்ளை வாள் கண்ணினார் தம்
    குங்குமக் குழம்பு தங்கும்
தெள்ளிய பளிக்குப் பாறைத்
    தெளி சுனை, மணியில் செய்த
வள்ளமும் நறவும் என்ன
    வரம்பு இல பொலியும் மன்னோ!
40

உரை
   
 
938.ஆடவர், ஆவி சோர,
    அஞ்சனம் வாரி சோர,
ஊடலில் சிவந்த நாட்டத்து
    உம்பர்தம் அரம்பை மாதர்,
தோடு அவிழ் கோதை நின்றும்
    துறந்த மந்தார மாலை,
வாடல நறவு அறாது வயின் வயின்
    வயங்கும் மாதோ!
41

உரை
   
 
939.மாந்தளிர் அனைய மேனிக்
    குறத்தியர் மாலை சூட்டிக்
கூந்தல் அம் கமுகின் பாளை
    குழலினோடு ஒப்புக் காண்பார்;
ஏந்திழை அரம்பை மாதர்
    எரி மணிக் கடகம் வாங்கிக்
காந்தள் அம் போதில் பெய்து
    கைகேளாடு ஒப்புக் காண்பார்.
42

உரை
   
 
940.சரம் பயில் சாபம் அன்ன
    புருவங்கள் தம்மின் ஆட,
நரம்பினோடு இனிது பாடி
    நாடகம் மயிலொடு ஆடும்,
அரம்பையர் வெறுத்து நீத்த,
    அவிர் மணி கோவை ஆரம்,
மரம் பயில் கடுவன் பூண,
    மந்தி கண்டு உவக்கும் மாதோ.
43

உரை
   
 
941.சாந்து உயர் தடங்கள் தோறும்,
    தாதுராகத்தில் சார்ந்த
கூந்தல் அம் பிடிகள் எல்லாம்
    குங்குமம் அணிந்த போலும்;
காந்து இன மணியின் சோதி
    கதிரொடும் கலந்து வீசச்
சேந்து வானகம் எப்போதும்
    செக்கரை ஒக்கும் அன்றே!
44

உரை
   
 
942.நில மகட்கு அணிகள் என்ன
    நிரை கதிர் முத்தம் சிந்தி,
மலைமகள் கொழுநன் சென்னி
    வந்து வீழ் கங்கை மான,
அலகில் பொன் அலம்பி ஓடிச்
    சாந்து சேர் அருவி மாலை,
உலகு அளந்தவன் தன் மார்பின்
    உத்தரீகத்தை ஒத்த.
45

உரை
   
 
அம்மலையிற் கண்ட பல நிகழ்ச்சிகள் (943-951)

943.கோடு உலாம் நாகப் போதோடு
    இலவங்க மலரும் கூட்டிச்
சூடு வார், களி வண்டு ஓச்சித்
    தூ நறும் தேறல் கொள்வார்,
கேடு இல மகரம் யாழின்
    கின்னரமிதுனம் பாடும்
பாடலால் ஊடல் நீங்கும்
    பரிமுகமாக்கள் கண்டார்.
46

உரை
   
 
944.பெருங் களிப்பு உற்ற மைந்தர்
    பேர் எழில் ஆகத்தோடும்
பொரும் துணைக் கொங்கை அன்ன
    பொருவு இல் கோங்கு அரும்பின் மாடே,
மருங்கு எனக் குழையும் கொம்பின்
    மடப் பெடை வண்டும், தங்கள்
கருங்குழல் களிக்கும் வண்டும்,
    கடிமணம் புணரக் கண்டார்.
47

உரை
   
 
945.படிகத்தின் தலம் என்று எண்ணிப்,
    படர் சுனை முடுகிப் புக்க
சுடிகைப் பூங்கமலம் அன்ன
    சுடர் மதி முகத்தினார் தம்
வடகத்தோடு உடுத்த தூசும்
    மாசு இல் நீர் நனைப்ப, நோக்கி
கடகக் கை மறித்துத் தம்மில்,
    கருங்கழல் வீரர் நக்கார்.
48

உரை
   
 
946.பூ அணை பலவும் கண்டார்;
    பொன் அரி மாலை கண்டார்;
மேவரும் கோபம் அன்ன
    வெள் இலைத் தம்பல் கண்டார்;
ஆவியின் இனிய கொண்கர்ப் பிரிந்து
    அறிவு அழிந்த விஞ்சைப்;
பாவையர் வைகத் தீய்ந்த
    பல்லவ சயனம் கண்டார்.
49

உரை
   
 
947.பானல் அம் கண்கள் ஆடப்,
    பவளம் வாய் முறுவல் ஆடப்,
பீன வெம் முலையின் இட்ட
    பெருவிலை ஆரம் ஆடத்,
தேன் முரன்று அளகத்து ஆடத்,
    திரு மணிக் குழைகள் ஆட,
வானவர் மகளிர் ஆடும்
    வாசம் நாறு ஊசல் கண்டார்.
50

உரை
   
 
948.சுந்தர வான மாதர்
    துவர் இதழ்ப் பவள வாயும்,
அந்தம் இல் சுரும்பும், தேனும்,
    மிஞிறும், உண்டு, அல்குல் விற்கும்
பைந்தொடி மகளிர் கைத்து ஓர்
    பசை இல்லை என்ன விட்ட
மைந்தரின் நீத்த, தீம் தேன்
    வள்ளங்கள் பலவும் கண்டார்.
51

உரை
   
 
949.அல் பகல் ஆக்கும் சோதிப்
    பளிங்கு அறை அமளிப் பாங்கர்,
மல் பக மலர்ந்த திண் தோள்
    வானவர் மணந்த கோல
வில் பகை நுதலினார், தம்
    கலவியின் வெறுத்து நீத்த
கற்பகம் ஈன்ற மாலை
    கலனொடும் கிடப்பக் கண்டார்.
52

உரை
   
 
950.கை என மலரவேண்டி அரும்பிய
    காந்தள் நோக்கிப்,
‘பை அரவு இது ‘என்று அஞ்சிப்
    படைக் கண்கள் புதைக்கின்றாரும்,
நெய் தவழ் வயிரப் பாறை
    நிழல் இடைத் தோன்றும் போதைக்,
‘கொய்து இவை தருதிர் ‘என்று
    கொழுநரைத் தொழுகின்றாரும்.
53

உரை
   
 
951.பின்னங்கள் உகிரிற் செய்து,
    பிண்டி அம் தளிர் கைக் கொண்ட
சின்னங்கள் முலையின் அப்பித்,
    தேன் மலர் கொய்கின்றாரும் :
வன்னங்கள் பலவும் தோன்ற
    மணி ஒளிர் மலையில் நில்லா
அன்னங்கள் புகுந்த என்ன,
    அகன் சுனை குடைகின்றாரும்.
54

உரை
   
 
அம் மலையின் வருணனை ((952-960))

952.ஈனும் மாழை இளம் தளிர் ஏய் ஒளி
ஈனும் மாழை இளந்தளிர் ஏ இடை
மானும் வேழமும் நாகமும் மாதர் தோள்
மானும் வேழமும் நாகமும் மாடு எலாம்.
55

உரை
   
 
953.திமிர மா உடல் குங்குமச் சேதகம்
திமிர மா ஒடும் சந்து ஒடும் தேய்க்குமால்;
அமர மாதரை ஒத்து ஒளிர் அம் சொலார்
அமர மாதரை ஒத்தது அவ் வானமே.
56

உரை
   
 
954.பேர் அவாவொடு மாசுணம் பேரவே
பேர ஆவொடு மாசுணம் பேரவே
ஆர வாரத்தினோடு மருவியே
ஆர ஆரத்தின் ஓடும் அருவியே.
57

உரை
   
 
955.புகலும் வாள் அரிக் கண்ணியர் பொன் புயம்
புகலும் வாள் அரிக் கண்ணியர் பூண் முலை
அகிலும் ஆரமும் ஆர அங்கு ஓங்குமே
அகிலும் ஆரமும் மாரவம் கோங்குமே.
58

உரை
   
 
956.துன் அரம்பை நிரம்பிய தொல்வரை
துன் அரம்பையர் ஊருவில் தோன்றுமால்;
கின்னரம் பயில் கீதங்கள் என்னலாம்
கின்னரம் பயில்கின்றனர் ஏழைமார்.
59

உரை
   
 
957.ஊறு மாகட மா உற ஊங்கு எலாம்
ஊறு மாகட மாமதம் ஓடுமே;
ஆறு சேர்வன மா வரை ஆடுமே
ஆறு சேர்வன மாவரை ஆடுமே.
60

உரை
   
 
958.கல் இயங்கு கரும் குறமங்கையர்
கல்லி அங்கு அகழ் காமர் கிழங்கு எடா
வல்லியங்கள் நெருங்கும் மருங்கு எலாம்
வல் இயங்கள் நெருங்கி மயங்குமே.
61

உரை
   
 
959.கோள் இபம் கயம் மூழ்கக் குளிர் கயம்
கோளி பங்கயம் ஊழ்கக் குலைந்த ஆல்;
ஆளி பொங்கும் மரம் பையர் ஓதியே
ஆளி பொங்கும் அரம்பையர் ஓதியே.
62

உரை
   
 
960.ஆகம் ஆலையம் ஆக உளாள் பொலிவு
ஆக மால் அயல் நின்று எனல் ஆகுமால்;
மேக மாலை மிடைந்தன மேல் எலாம்
ஏக மாலை கிடந்தது கீழ் எலாம்.
63

உரை
   
 
ஆடவரும் பெண்டிரும் விளையாடுதல்

961.பொங்கு தேன் நுகர் பூ மிஞிறு ஆம் என
எங்கும் மாதரும் மைந்தரும் ஈண்டி அத்
துங்க மால் வரைச் சூழல்கள் யாவையும்
தங்கி நீங்கலர் தாம் இனிது ஆடுவார்.
64

உரை
   
 
அனைவரும் மலைவளத்தில் ஈடுபட்டிருத்தல்

962.இறக்கம் என்பதை எண்ணிலர் எண்ணுங்கால்
பிறக்கும் என்பதோர் பீழையது ஆதலால்;
துறக்கம் எய்திய தூயவரே என
மறக்ககிற்றிலர் அன்னதன் மாண்பு எலாம்.
65

உரை
   
 
அந்தி மாலை வருணணை

963.மஞ்சு ஆர் மலை வாரணம்
    ஒத்தது; வானின் ஓடும்
வெம் சாயை உடைக் கதிர் அங்கு
    அதன் மீது பாயும்
பஞ்சானனம் ஒத்தது; மற்று
    அது பாய ஏறும்
செஞ்சோரி எனப் பொலிவுற்றது
    செக்கர் வானம்.
66

உரை
   
 
அந்தியில் சந்திர சைலத்தின் தோற்றம் (964-965)

964.திணி ஆர் சினை மா மரம்
    யாவையும், செக்கர் பாயத்,
தணியாத நறும் தளிர் ஈன்றன
    போன்று தாழ,
அணி ஆர் ஒளி வந்து நிரம்பலின்,
    அங்கம் எங்கும்
மணியால் இயன்ற மலை ஒத்தது அம்
    மாசு இல் குன்றம்.
67

உரை
   
 
965.கண்ணுக்கு இனிது ஆகி
    விளங்கிய காட்சியாலும்,
எண்ணற்கு அரிது ஆகி
    இலங்கு சிரங்களாலும்,
வண்ணம் கொழும் சந்தனச்
    சேதகம் மார்பு அணிந்த
அண்ணல் கரியோன்தனை ஒத்தது
    அவ் ஆசு இல் குன்றம்.
68

உரை
   
 
சேனைகள் மலையடிவாரத்தில் தங்குதல்

966.ஊனும் உயிரும் அனையார்
    ஒருவர்க்கு ஒருவர்
தேனும் மிஞிறும் சிறு தும்பியும்
    பம்பி ஆர்ப்ப,
யானை இனமும் பிடியும்,
    இகல் ஆளி ஏறும்,
மானும் கலையும் என மால் வரை
    வந்து இழிந்தார்.
69

உரை
   
 
இருள் பரத்தல்

967.கால் வானகத் தேர் உடை வெய்யவன்
    காய் கடும் கண்,
கோல் மாய் கதிர்ப் புல் உளைக் கொல் சினக்
    கோளரி மா
மேல்பால் மலையில் புக, வீங்கு இருள்
    வேறு இருந்த
மால் யானை ஈட்டம் என வந்து
    பரந்தது அன்றே.
70

உரை
   
 
விளக்கேற்றல்

968.மந்தாரம் உந்து மகரந்த
    மணம் குலாவும்
அம் தார் அரசர்க்கு அரசன்தன்
    அனீக வெள்ளம்,
நந்தாது ஒலிக்கும் நரலைப் பெரு
    வேலை எல்லாம்
செந்தாமரை பூத்தது எனத், தீபம்
    எடுத்தது அன்றே.
71

உரை
   
 
சந்திரன் தோற்றம்

969.தண் நல் கடலில் தளி சிந்து
    தரங்கம் நீங்கி,
விண்ணில் சுடர் வெண்மதி வந்தது,
    மீன்கள் சூழ,
வண்ணக் கதிர் வெண் நிலவின் திரள்
    வாலுகத்து ஊடு
ஒள் நித்திலம் ஈன்று ஒளிர் வால் வளை
    ஊர்வது ஒத்தே.
72

உரை
   
 
நிலவில் மகளிர் மகிழ்தல்

970.மீன் நாறு வேலை ஒரு வெண் மதி
    ஈனும் வேலை,
நோனாது அதனை, நுவலற்கு அருங்
    கோடி வெள்ளம்
வான் நாடியரில் பொலி மாதர்
    முகங்கள் என்னும்
ஆனா மதியங்கள் மலர்ந்தது
    அனீக வேலை.
73

உரை
   
 
பல்வகைப் பண்ணொலிகல்

971.மண்ணும் முழவின் ஒலி, மங்கையர்
    பாடல் ஓதை;
பண்ணும் நரம்பில் பகையா இயல்
    பாணி ஓதை,
கண்ணும் உடை வேய் இசை, கண் உளர்
    ஆடல் தோறும்,
விண்ணும் மருளும்படி, விம்மி
    எழுந்த அன்றே.
74

உரை
   
 
மாதர் கோலங் கொள்ளல்

972.மணியின் அணி நீக்கி, வயங்கு ஒளி
    முத்தம் வாங்கி
அணியும் முலையார், அகில் ஆவி
    புலர்த்தும் நல்லார்,
தணியும் மது மல்லிகைத் தாமம்
    வெறுத்து, வாசம்
திணியும் இதழ்ப் பித்திகைக் கத்திகை
    சேர்த்துவாரும்.
75

உரை
   
 
பல்வகையொலி மிகல்

973.புதுக் கொண்ட வேழம் பிணிப்போர் புனை
    பாடல் ஓதை,
மதுக் கொண்ட மாந்தர் மடவாரின்
    மிழற்றும் ஓதை,
பொது பெண்டிர் அல்குல் புனை மேகலைப்
    பூசல் ஓதை,
கதம் கொண்ட யானை களியால்
    களிக்கின்ற ஓதை.
76

உரை
   
 
இரவு நீங்கல்

974.உண்ணா அமுது அன்ன கலைப் பொருள்
    உள்ளது உண்டும்,
பெண் ஆர் அமுதம் அனையார் மனத்து
    ஊடல் பேர்த்தும்,
பண் ஆர்ந்த பாடல் செவி மாந்திப்,
    பயன் கொள் ஆடல்
கண்ணால் நனி துய்க்கவும், கங்குல்
    கழிந்தது அன்றே.
77

உரை