தொடக்கம்
தயரதன் சேனையுடன் கங்கையை அடைதல்
1114.
அடா நெறி அறைதல் செய்யா,
அரு மறை அமைந்த நீதி
விடா நெறிப் புலமைச் செங்கோல்
வெண் குடை வேந்தர் வேந்தன்,
படாம் முக மலையில், தோன்றிப்
பருவம் ஒத்து அருவி பல்கும்,
கடாம் நிறை ஆறு பாயும்
கடலொடும் கங்கை சேர்ந்தான்.
1
உரை
சேனை கங்கை நீரைப் பருகுதல்
1115.
கப்பு உடை நாவின் நாகர் உலகமும்
கண்ணில் தோன்றத்
துப்பு உடை மணலிற்று ஆகிக்
கங்கைநீர் சுருங்கிக் காட்ட,
அப்பு உடை அனீக வேலை
அகன் புனல் முகந்து மாந்த,
உப்பு உடைக் கடலும் தெள் நீர்
உண் நசை உற்றது அன்றே.
2
உரை
தயரதன் மிதிலையை அணுகுதல்
1116.
ஆண்டு நின்று எழுந்து போகி,
அகன் பணை மிதிலை என்னும்,
ஈண்டு நீர் நகரின் பாங்கர்
இரு நிலக் கிழவன் எய்தத்
தாண்டும் மாப் புரவித் தானைத்
தண் அளிச் சனகன் என்னும்,
தூண் தரு வயிரத் தோளான்
செய்தது சொல்லல் உற்றாம்.
3
உரை
சனகன் தயரதனை வரவேற்க எழுதல்
1117.
வந்தனன் அரசன் என்ன
மனத்து எழும் உவகை பொங்கக்,
கந்து அடு களிறும் தேரும்
கலின மாக் கடலும் சூழச்,
சந்திரன் இரவிதன்னைச்
சார்வது ஓர் தன்மை தோன்ற,
இந்திர திருவன் தன்னை
எதிர்கொள்வான் எழுந்து சென்றான்.
4
உரை
மிதிலை மாந்தரும் உடன்வருதல்
1118.
கங்கை நீர் நாடன் சேனை,
மற்று உள கடல்கள் எல்லாம்
சங்கு இனம் ஆர்ப்ப வந்து
சார்வன போலச் சாரப்,
பங்கயத்து அணங்கைத் தந்த
பால் கடல் வருவதே போல்,
மங்கையைப் பயந்த மன்னன்
வளநகர் வந்தது அன்றே.
5
உரை
சனகன் படை வருணனை
1119.
குலாவு அயிலினான்
அனிகம், ஏழ் என உலாம்
நிலை குலாம் மகர நீர்
நெடிய மா கடல் எலாம்,
அலகு இல் மால் களிறு தேர்
புரவி ஆள் என விராய்,
உலகு எலாம் நிமிர்வதே
பொருவும் ஓர் உவமையே.
6
உரை
சேனை தாமரைக் குளத்தை ஒத்தமை
1120.
தொங்கல் வெண் குடை தொகைப்
பிச்சம் உட்பட விராய்,
எங்கும் விண் புதைதரப்,
பகல் மறைந்து இருள் எழப்,
பங்கயம் செய்யவும்
வெளியவும் பல படத்
தங்கு தாமரை உடைத்
தானமே போலுமே.
7
உரை
எங்கும் திருமகளின் விளக்கம்
1121.
கொடி உளாேளா? தனிக்
குடை உளாேளா? குலப்
படி உளாேளா? கடல்
படை உளாேளா? பகர்
மடி இலா அரசன்
மார்பினில் உளாேளா? வளர்
முடி உளாேளா? தரெிந்து
உணர்கிலாம், முளரியாள்.
8
உரை
சனகன் எதிர்கொளவரும் வழியின் காட்சி
1125.
தா இல் மன்னவர் பிரான்
வர, முரண் சனகன் ஆம்
ஏ வரும் சிலையினான்
எதிர் வரும் நெறி எலாம்,
தூவு தண் சுண்ணமும்,
கனக நுண் தூளியும்,
பூவின் மென் தாது உகும்
பொடியுமே, பொடி எலாம்.
12
உரை
வழியில் படர்ந்த சேற்றின் தன்மை
1126.
நறு விரைத் தேனும்,
நானமும், நறும் குங்குமச்
செறி அகில் தேய்வையும்,
மன்மதத்து எக்கரும்,
வெறி உடைக் கலவையும்,
விரவு செஞ்சாந்தமும்,
செறி மதக் கலுழி பாய்
சேறுமே, சேறு எலாம்.
13
உரை
இருவர் சேனையும் சந்தித்தல்
1128.
மாறு இலா மதுகையான்
வரு பெரும் தானை மேல்,
ஊறு பேர் உவகையான்
அனிகம் வந்து உற்ற போது,
ஈறு இல் ஓதையினொடும்
எறி திரைப் பரவை மேல்,
ஆறு பாய்கின்றது ஓர்
அமலை போல் ஆனதே.
15
உரை
தயரதன் சனகனைத் தழுவுதல்
1130.
எய்த, அத் திரு நெடும்
தேர் இழிந்து, இனைய தன்
மொய் கொள் திண் சேனை பின்
நிற்க, முன் சேறலும்,
கையின் வந்து ஏறு எனக்
கடிதின் வந்து ஏறினான்;
ஐயனும் முகம் மலர்ந்து
அகம் உறத் தழுவினான்.
17
உரை
இராமன் தயரதனை எதிர்கொள்ள வருதல்
1132.
இன்ன ஆறு, இருவரும்
இனிய ஆறு ஏக, அத்
துன்னும் மா நகரில் நின்று
எதிர் வரத் துன்னினான்;
தன்னையே அனையவன்,
தழலையே அனையவன்,
பொன்னின் வார் சிலை இறப்
புயம் நிமிர்த்து அருளினான்.
19
உரை
இருவருடன் வந்த சேனையின் பெருக்கம்
1134.
யானையோ பிடிகேளா
இரதமோ இவுளியோ,
ஆன பேர் உறை இலா
நிறைவை யார் அறிகுவார்?
தானை ஏர் சனகன் ஏவலின்,
நெடும் தாதை முன்,
போன பேர் இருவர் தம்
புடை வரும் படையினே.
21
உரை
இராமன் தந்தையை அணுகுதல்
1135.
காவியும் குவளையும்
கடி கொள் காயாவும் ஒத்து,
ஓவியம் சுவை கெடப்
பொலிவது ஓர் உருவெடே,
தேவரும் தொழு கழல்
சிறுவன், முன் பிரிவது ஓர்
ஆவி வந்தது என்ன வந்து,
அரசன் மாடு அணுகினான்.
22
உரை
இலக்குவன் தந்தையை வணங்குதல்
1137.
இளைய பைங் குரிசில் வந்து
அடி பணிந்து எழுதலும்,
தளை வரும் தொடையல்
மார்பு உற, உறத் தழுவினான்;
களைவு அரும் துயர் அறக்,
ககனம் எண் திசை எலாம்
விளைதரும் புகழினான்,
எவரினும் மிகுதியான்.
24
உரை
இராமன் பணியத் தாயர் மகிழ்தல்
1138.
கற்றை வார் சடையினான்
கைக் கொளும் தனு இறக்,
கொற்றம் நீள் புயம் நிமிர்த்து
அருளும் அக் குரிசில், பின்
பெற்ற தாயரையும் அப்
பெற்றியில் தொழுது எழுந்து
உற்ற போது, அவர் மனத்து
உவகை யார் உரைசெய்வார்.
25
உரை
இலக்குமண சத்துருக்கனர் முறையே பரதனையும்
இராமனையும் வணங்குதல்
1140.
கரியவன் பின்பு சென்றவன்,
அரும் காதலில்
பெரியவன் தம்பி, என்று,
இனையது ஓர் பெருமை அப்
பொருவு அரும் குமரர், தம்
புனை நறும் குஞ்சியால்,
இருவர் பைங் கழலும் வந்து
இருவரும் வருடினார்.
27
உரை
குமரர் நால்வரின் சிறப்பு
1141.
கோல் வரும் செம்மையும்
குடை வரும் தண்மையும்
சால் வரும் செல்வம் என்று
உணர் பெருந் தாதை தன்,
மேல் வரும் தன்மையால்,
மிக விளங்கினர்கள் தாம்,
நால்வரும் பொருவு இல்
நான்மறை எனும் நடையினார்.
28
உரை
சேனைகளை நடத்திக்கொண்டு செல்லுமாறு தயரதன்
இராமனிடம் கூறல்
1142.
சான்று எனத் தகைய
செங்கோலினான், உயிர்கள்தாம்
ஈன்ற நற்றாய் எனக்
கருது பேர் அருளினான்,
ஆன்ற இச் செல்வம் இத்தனையும்
மொய்த்து அருகு உறத்,
தோன்றலைக் கொண்டு முன்
செல்க என சொல்லினான்.
29
உரை
அப்போது சேனை அடைந்த மகிழ்ச்சி
1143.
காதலோ அறிகிலம்,
கரிகளைப் பொருவினார்
தீது இலா உவகையும்
சிறிது அரோ, பெரிது அரோ,
கோதை சூழ் குஞ்சி அக்
குமரர் வந்து எய்தலும்,
தாதையோடு ஒத்தது அத்
தானையின் தன்மையே.
30
உரை
இராமன் தேர்மீதேறிச் செல்லுதல்
1144.
தொழுது இரண்டு அருகும் அன்பு
உடைய தம்பியர் தொடர்ந்து,
அழிவு இல் சிந்தையின் உகந்து
ஆடல் மா மிசை வரத்,
தழுவு சங்குடன் நெடும்
பணை தழங்கிட எழுந்து,
எழுத அரும் தகையது ஓர்
தேரின் மேல் ஏகினான்.
31
உரை
மாளிகைகளின் வருணனை
1146.
சூடகம் துயல்வரக்
கோதை சோர்தர மலர்ப்
பாடகம் பரத நூல்
பகர, வெம் கடக்கரி
கோடு அரங்கு இட, எழும்,
குவி தடம் கொங்கையார்,
ஆடு அரங்கு அல்லவே
அணி அரங்கு அயல் எலாம்.
33
உரை