கோசிகன் தவம் புரியச் செல்லுதல்

1349.தான், ஆவது ஒர் வகையே,
    நனி சனகன் தரு தயலும்
நானாவித வருபோகமும்
    நுகர்கின்ற அந்நாள்வாய்,
ஆனா மறை நெறி ஆசிகள்
    முனி கோசிகன் அருளிப்,
போனான், வடதிசைவாய் உயர்
    பொன் மால் வரை புக்கான்.
1

உரை
   
 
தயரதன் தன் நகர்க்குப் பயணமாதல்

1350.அப்போதினில் முடி மன்னவன்
    அணி மா நகர் செலவே,
‘இப்போது நம் அனிகம் தனை எழுக ‘
    என்று இனிது இசையாக்,
கைப் போதகம் நிகர் காவலர்
    குழு வந்து அடி கதுவ,
ஒப்பு ஓது அரு தேர் மீதினில்
    இனிது ஏறினன் உரவோன்.
2

உரை
   
 
தயரதன் அயோத்தி நோக்கிச் செல்லுதல்

1351.தன் மக்களும் மருமக்களும் நனி
    தன் கழல் தழுவ,
மன் மக்களும் அயல் மக்களும்
    வயின் மொய்த்திட, மிதிலைத்
தொல் மக்களும் மனம் உக்கு
    உயிர் பிரிவு என்பது ஒர் துயரின்
வன்மக் கடல் புக, உய்ப்பது ஒர்
    வழி புக்கனன் மறவோன்.
3

உரை
   
 
இராமன் பிராட்டியொடும் தம்பியருடனும் செல்லுதல்

1352.முன்னே நெடு முடி மன்னவன்
    முறையில் செல, மிதிலை
நன் மா நகர் உறைவார் மனம்
    நனி பின் செல, நடுவே
தன் நேர் புரைதரு தம்பியர்
    தழுவிச் செல, மழை வாழ்
மின் நேர் புரை இடையாெளாடும்
    இனிது ஏகினன் வீரன்.
4

உரை
   
 
தயரதன் கெட்ட நிமித்தங்கள் கண்டு நிற்றல்

1353.ஏகும் அளவையின், வந்தன
    வலமும் மயில், இடமும்
காகம் முதலிய முந்திய
    தடை செய்வன கண்டான்,
நாகம் அனன், இடை இங்கு உளது
    இடையூறு என நடவான்,
மாகம் அணி அணி தேரொடு
    நின்றான் நெறி வந்தான்.
5

உரை
   
 
நிமித்திகன் இடையூறு நிகழ்ந்து நீங்குமெனல்

1354.நின்றே நெறி உணர்வான் ஒரு
    நினைவாளனை அழையா,
‘நன்றோ? பழுது உளதோ?
    நடு உரை நீ நயம் ‘என்னக்,
குன்றே புரை தோளான் எதிர்,
    புள்ளின் குறி கொள்வான் ‘
‘இன்றே வரும் இடையூறு, அது
    நன்றாய்விடும் ‘என்றான்.
6

உரை
   
 
பரசுராமனது வரவு ((1355-1363))

1355.என்னும் அளவினில், வானகம்
    இருள் கீறிட, ஒளியாய்
மின்னும்படி புடை வீசிய சடையான்,
    மழு உடையான்,
பொன்னின் மலை வருகின்றது
    போல்வான், அனல் கால்வான்,
உன்னும் தழல் விழியான்,
    உரும் அதிர்கின்றது ஒர் உரையான்.
7

உரை
   
 
1356.கம்பித்து அலை எறி நீர் உறு
    கலம் ஒத்து உலகு உலையத்
தம்பித்து, உயர் திசை யானைகள்
    தளரக், கடல் சலியா
வெம்பித் திரிதர, வானவர்
    வெரு உற்று இரிதர, ஓர்
செம் பொன் சிலை தறெியா, அயில்
    முக வாளிகள் தரெிவான்.
8

உரை
   
 
1357.‘விண் கீழ் உற என்றோ? படி
    மேல் கீழ் உற என்றோ?
எண் கீறிய உயிர் யாவையும்
    யமன் வாய் இட என்றோ?
புண் கீறிய குருதிப் புனல்
    பொழிகின்றன புரையக்,
கண் கீறிய கனலான் முனிவு
    யாது? ‘என்று அயல் கருத.
9

உரை
   
 
1358.போரின் மிசை எழுகின்றது ஒர்
    மழுவின் சிகை புகையத்,
தேரின் மிசை மலை சூழ்வரு
    கதிரும் திசை திரிய,
நீரின் மிசை வடவை கனல்
    நெடுவான் உற முடுகிப்,
பாரின் மிசை வருகின்றது ஒர்,
    படி வெம் சுடர் படர,
10

உரை
   
 
1359.பாழிப் புயம் உயர் திக்கு இடை
    அடையப் புடை படர் அச்
சூழிச் சடை முடி விண் தொட,
    அயல் வெண் மதி தோற்ற,
ஆழிப் புனல் எரி கால் நிலம்
    ஆகாயமும் அழியும்
ஊழிக் கடை முடிவில் திரி
    உமை கேள்வனை ஒப்ப.
11

உரை
   
 
1360.அயிர் துற்றிய கடல் மா நிலம்
    அடையத் தனி படரும்
செயிர் சுற்றிய படையான்,
    அடல் மற மன்னவர் திலகன்,
உயிர் உற்றது ஒர் மரம் ஆம் என,
    ஓர் ஆயிரம் உயர் தோள்
வயிரப் பணை துணியத் தொடு
    வடிவாய் மழு உடையான்.
12

உரை
   
 
1361.நிருபர்க்கு ஒரு பழி பற்றிட,
    நில மன்னவர் குலமும்
கரு அற்றிட, மழு வாள் கொடு
    களை கட்டு, உயிர் கவரா,
இருபத்தொரு படிகால், எழு கடல்
    ஒத்து அலை எறியும்
குருதிக் குரை புனலில் புக
    முழுகித் தனி குடைவான்.
13

உரை
   
 
1362.கமை ஒப்பது ஒர் தவமும்,
    சுடு கனல் ஒப்பது ஒர் சினமும்,
சமையப் பெரிது உடையான்
    எதிர் தள்ளுற்று, இடை தளரும்
அமையத்து, உயர் பறவைக்கு இனிது
    ஆறு ஆம் வகை சீறாச்
சிமையக் கிரி உருவத்
    தனி வடி வாளிகள் தரெிவான்.
14

உரை
   
 
1363.சையம் புக, நிமிர் அக்கடல்
    தழுவும்படி சமைவான்,
மையின் உயர் மலை நூறிய
    மழுவாளவன் வந்தான்;
ஐயன் தனை அரிதில் தரும்
    அரசன், அது கண்டான்,
‘வெய்யன் வர நிபம் என்னை கொல்? ‘என
    வெய்துறும் ஏல்வை.
15

உரை
   
 
பரசுராமனை இராமன் யாரெனக் கருதல்

1364.பொங்கும் படை இரியக், கிளர்
    புருவம் கடை நெரிய,
வெம் கண் பொறி சிதறக், கடிது
    உரும் ஏறு என விடையாச்
சிங்கம் என, உயர் தேர்
    வரு குமரன் எதிர் சென்றான்;
அங்கண் அழகனும், ‘இங்கு இவன்
    ஆரோ? ‘எனும் அளவில்
16

உரை
   
 
தயரதன் வணங்குதல்

1365.அரைசன், அவன் இடை வந்து
    இனிது ஆராதனை புரிவான்,
விரைசெய் முடி படி மேல் உற
    அடி மேல் உற விழலும்,
கரை சென்றிலன், அனையான்
    நெடு முடிவின் கனல் கால்வான்,
முரைசின் குரல் பட, வீரனது
    எதிர் நின்று இவை மொழிவான்.
17

உரை
   
 
இராமனிடம் பரசுராமன் கூறியது

1366.‘இற்று ஓடிய சிலையின் திறம் அறிவென்;
    இனி யான் உன்
பொன் தோள் வலி நிலை சோதனை
    புரிவான் நசை உடையேன்,
செற்று ஓடிய திரள் தோள்
    உறு தினவும் சிறிது உடையேன்,
மற்று ஓர் பொருள் இலை, இங்கு இது
    என் வரவு என்றனன் உரவோன்.
18

உரை
   
 
தயரதன் அபயம் வேண்டுதல் ((1367-1371))

1367.அவன் அன்னது பகரும்
    அளவையின், மன்னவன் அயர்வான்,
‘புவனம் முழுவதும் வென்று
    ஒரு முனிவற்கு அருள் புரிவாய்
சிவனும் அயன் அரியும் அலர்,
    சிறு மானிடர் பொருேளா?
இவனும், எனது உயிரும்
    உனது அபயம் இனி ‘என்றான்.
19

உரை
   
 
1368.‘விளிவார் விளிவது தீ வினை விழைவார்
    உழை அன்றே?
களியால் இவன் அயர்கின்றன உளவோ?
    கனல் உமிழும்
ஒளிவாய் மழு உடையாய்! பொர உரியார்
    இடை அல்லால்
எளியார் இடை வலியார் வலி
    என் ஆகுவது? ‘என்றான்.
20

உரை
   
 
1369.“நனி மாதவம் உடையாய்!
    இது பிடி நீ ‘என நல்கும்
தனி நாயகம் உலகு ஏழையும்
    உடையாய்! இது தவிராய்;
பனி வார் கடல் புடை சூழ்
    படி நரபாலரை அருளா,
முனிவு ஆறினை, முனிகின்றது
    முறையோ? “ என மொழியா.
21

உரை
   
 
1370.‘புறம் நின்றவர் இகழும்படி
    நடுவின்தலை புணராத்
திறன் நின்று உயர் வலி என்பது
    ஒர் அறிவின் தரு செயலோ?
அறன் நின்றதன் நிலை நின்று
    உயர் புகழ் ஒன்றுவது அன்றே
மறன் என்பது? மறவோய்!
    இது வலி என்பது வலியோ? ‘
22

உரை
   
 
1371.‘சலத்தோடு இயைவு இலன்
    என் மகன்; அனையான் உயிர் தபுமேல்,
உலத்தோடு எதிர் தோளாய்!
    எனது உறவோடு உயிர் உகுவேன்
நிலத்தோடு, உயர் கதிர்வான் உற;
    நெடியாய்! உனது அடியேன்
குலத்தோடு அற முடியேல்;
    இது குறை கொண்டனன்! என்றான்.
23

உரை
   
 
தயரதன் மனம் வெம்புதல்

1372.என்னா, அடி விழுவானையும்
    இகழா, எரி விழியாப்,
பொன்னார் கலை அணிவான் எதிர்
    புகுவான் நிலை உணராத்,
தன்னால் ஒரு செயல் இன்மையை
    நினையா, உயிர் தளரா,
மின்னால் அயர்வு உறும் வாள் அரவு
    என, வெய்து உறல் உற்றான்.
24

உரை
   
 
பரசுராமன் சிவனார் வில்லின் வரலாறு கூறுதல் ((1373-1379))

1373.மானம் உடை முடி மன்னவன்
    மதி சோர்வு உறல் மதியான்,
தான் அந்நிலை உறுவான்
    உறு வினை உண்டு அது தவிரான்,
‘ஆனம் உடை உமை அண்ணலை,
    அந்நாள் உறு சிலைதான்
ஊனம் உளது, அதன் மேல்
    நிலை கேள் நீ ‘என உரைப்பான்.
25

உரை
   
 
1374.‘ஒரு கால் வரு கதிர் ஆம் என
    ஒளி கால்வன, உலையா
வரு கார் தவழ் வட மேருவின்
    வலி சால்வன, வையம்
அருகா வினை புரிவான் உளன்,
    அவனால் அமைவனவாம்,
இரு கார்முகம் உள, யாவையும்
    ஏலாதன மேல் நாள்.
26

உரை
   
 
1375.‘ஒன்றினை உமையாள் கேள்வன்
    உவந்தனன்; மற்றை ஒன்றை,
நின்று உலகு அளந்த நேமி
    நெடிய மால் நெறியில் கொண்டான்;
என்று இஃது உணர்ந்த விண்ணோர்,
    ‘இரண்டினும் வன்மை எய்தும்
வென்றியது யாவது? ‘என்று,
    விரிஞ்சனை வினவ அந்நாள்.
27

உரை
   
 
1376.“சீரிது தேவர் தங்கள்
    சிந்தனை! ‘என்பது உன்னி,
வேரி அம் கமலத் தோனும்
    இயைவது ஓர் விநயம் தன்னால்,
யாரினும் உயர்ந்த மூலத்து
    ஒருவராம் இருவர் தம்மை,
மூரி வெம் சிலை மேல் இட்டு
    மொய் அமர் மூட்டி விட்டான்.“
28

உரை
   
 
1377.‘இருவரும் இரண்டு வில்லும்
    ஏற்றினர், உலகம் ஏழும்
வெருவரத், திசைகள் பேர,
    வெம் கனல் பொங்க, மேல்மேல்
செரு மலைகின்ற போழ்தில்,
    திரிபுரம் எரித்த தேவன்,
வரிசிலை இற்றது ஆக, மற்று
    அவன் முனிந்து மன்னே. ‘
29

உரை
   
 
1378.‘மீட்டும் போர் தொடங்கும் வேலை,
    விண்ணவர் விலக்க, வல் வில்
நீட்டினன் தேவர் கோன்கை
    நெற்றியில் கண்ணன்; வெற்றி
காட்டிய கரிய மாலும்,
    கார்முகம் அதனைப் பாரில்
ஈட்டிய தவத்தின் மிக்க
    இரிசிகற்கு ஈந்து போனான். ‘
30

உரை
   
 
1379.‘இருசிகன் எந்தைக்கு ஈய,
    எந்தையும் எனக்குத் தந்த
வரி சிலை இது; நீ நொய்தின்
    வாங்குதி ஆயின், மன்ன!
குரிசில்கள் நின்னொடு ஒப்பார்
    இல்லை; யான் குறித்த போரும்
புரிகிலென் நின்னோடு; இன்னும்
    புகல்வது கேட்டி! ‘என்றான்.
31

உரை
   
 
பரசுராமன் தான் வந்த காரணம் கூறுதல் ((1380-1382))

1380.‘ஊன வில் இறுத்த மொய்ம்பை
    நோக்குவது ஊக்கம் அன்றால்,
மானவ மற்றும் கேளாய்,
    வழிப் பகை உடையன் நும்பால்,
ஈனம் இல் எந்தை சீற்றம்
    நீக்கினான் என்ன, முன் ஓர்
தானவன் அனைய மன்னன் கொல்ல,
    யான் சலித்து, மன்னோ,‘
32

உரை
   
 
1381.‘மூ எழு முறைமை பாரில்
    முடி உடை வேந்தை எல்லாம்,
மேவு எழு மழுவின் வாயால்
    வேர் அறக் களைகட்டு அன்னார்
தூ எழு குருதி வெள்ளத்
    துறை இடை, முறையின் எந்தைக்கு
ஆவன கடன்கள் நேர்ந்தேன்,
    அரும் சினம் அடக்கிப் போந்தேன் ‘
33

உரை
   
 
1382.‘உலகு எலாம் முனிவற்கு ஈந்தேன்,
    உறு பகை ஒடுக்கிப் போந்தேன்,
அலகு இல் மா தவங்கள் செய்து,
    ஓர், அருவரை இருந்தேன், ஆண்டைச்
சிலையை நீ இறுத்த ஓசை
    செவி உறச், சீறி வந்தேன்
மலைகுவன், வல்லை ஆயின்,
    வாங்குதி வில்லை ‘என்றான்.
34

உரை
   
 
இராமன் வில்லை வளைத்தது

1383.ன்றனன்; என்ன, நின்ற
    இராமனும் முறுவல் எய்தி,
நன்று ஒளிர் முகத்தன் ஆகி,
    ‘நாரணன் வலியின் ஆண்ட
வென்றி வில் தருக ‘என்னக்
    கொடுத்தனன், வீரன் கொண்டான்!
துன்று இரும் சடையோன் அஞ்சத்
    தோள் உற வாங்கிச் சொல்லும்.
35

உரை
   
 
தன் அம்புக்கு இலக்கு யாது என இராமன் வினாவல்

1384.பூதலத்து அரசை எல்லாம்
    பொன்றுவித்தனை என்றாலும்,
வேத வித்து ஆய மேலோன்
    மைந்தன் நீ, விரதம் பூண்டாய்,
ஆதலில் கொல்லல் ஆகாது;
    அம்பு இது பிழைப்பது அன்றால்,
யாது இதற்கு இலக்கம் ஆவது?
    இயம்புதி விரைவின் ‘என்றான்.
36

உரை
   
 
பரசுராமன் இராமனைத் துதித்தல் ((1385-1386))

1385.நீதியாய்! முனிந்திடேல்;
    நீ இங்கு யாவர்க்கும்
ஆதி, யான் அறிந்தன் என்,
    அலங்கல் நேமியாய்!
வேதியா! இறுவதே அன்றி,
    வெண் மதிப்
பாதியான் பிடித்த வில்
    பற்றப் போதுமோ? ‘
37

உரை
   
 
1386.பொன் உடை வனை கழல்,
    பொலம் கொள் தோளினாய்!
மின் உடை நேமியான் ஆதல்
    மெய்ம்மையால்,
என் உளது உலகினுக்கு
    இடுக்கண்? யான் தந்த
உன்னுடை வில்லும் உன்
    உரத்துக்கு ஈடு அன்றால்.
38

உரை
   
 
பரசுராமனது தவம் இராமன் அம்புக்கு இலக்கமாதல்

1387.‘எய்த அம்பு இடை பழுது எய்திடாமல் என்
செய்தவம் யாவையும் சிதைக்கவே ‘எனக்
கை அவண் நெகிழ்தலும் கணையும் சென்று அவன்
மை அறு தவம் எலாம் வாரி மீண்டதே.
39

உரை
   
 
பரசுராமன் விடைபெற்றுச் செல்லுதல்

1388.‘எண்ணிய பொருள் எலாம் இனிது முற்றுக!
மண்ணிய மணி நிற வண்ண! வண் துழாய்க்
கண்ணிய! யாவர்க்கும் களைகண் ஆகிய
புண்ணிய! விடை ‘எனத் தொழுது போயின் ஆன்.
40

உரை
   
 
இராமன் தயரதன் துயரைத் தீர்த்தல்

1389.அழிந்து அவன் போனபின்,
    அமலன், ஐயுணர்வு
ஒழிந்து, தன் உயிர் உலைந்து,
    உருகும் தாதையைப்
பொழிந்த பேர் அன்பினால்
    தொழுது முன்பு புக்கு,
இழிந்து வான் துயர்க் கடல்
    கரை நின்று ஏற்றினான்.
41

உரை
   
 
தயரதனது பெருமகிழ்ச்சி

1390.வெளிப்படும் உணர்வினன் விழுமம் நீங்கியே
தளிர்ப்புறு மத கரித் தானையான் இடைக்
குளிப்பு அரும் துயர்க் கடல் கோடு கண்டவன்
களிப்பு எனும் கரை இலாக் கடலுள் ஆழ்ந்தனன்.
42

உரை
   
 
தயரதன் ஆனந்தக் கண்ணீர் சொரிதல்

1391.பரிவு அறு சிந்தை அப் பரசுராமன் கை
வரி சிலை வாங்கி ஓர் வசையை நல்கிய
ஒருவனைத் தழுவி நின்று உச்சி மோந்து தன்
அருவி அம் கண் எனும் கலசம் ஆட்டினான்.
43

உரை
   
 
தயரதன் மகிழ்ந்து கூறுதல்

1392.‘பொய்ம்மை இல் சிறுமையில்
    புரிந்த ஆண் தொழில்,
மும்மையின் உலகினால்
    முடிக்கல் ஆவதோ?
மெய்ம்மை இச் சிறுவனே,
    வினை செய்தோர்களுக்கு
இம்மையும் மறுமையும்
    ஈயும்! ‘என்றனன்.
44

உரை
   
 
இராமன் வில்லை வருணனிடம் தந்து அயோத்தியை அடைதல்

1393.பூ மழை பொழிந்தனர் புகுந்த தேவருள்
வாம வேல் வருணனை ‘மான வெம் சிலை
சேமி ‘என்று உதவித் தன் சேனை ஆர்த்து எழ
நாம நீர் அயோத்தி மாநகரம் நண்ணினான்.
45

உரை
   
 
தயரதன் பரதனைக் கேகய நாட்டிற்கு அனுப்புதல் ((1394-1395))

1394.நண்ணினர் இன்பத்து வைகும் நாள் இடை
மண் உறு முரசு இனம் வயங்கு தானையான்
அண்ணல் அப் பரதனை நோக்கி ஆண் தகை
எண் அரும் தகையது ஓர் பொருள் இயம்புவான்.
46

உரை
   
 
1395.‘ஆணை நின் தன் முது தாதை ஐய! நிற்
காணிய விழைவது ஓர் கருத்தன் ஆதலால்
கேணியில் வளை முரல் கேகயம் புகப்
பூண் ஒளிர் மார்ப! நீ போதி ‘என்றனன்.
47

உரை
   
 
பரதன் கேகய நாடு செல்லுதல்

1396.ஏவலும் இறைஞ்சிப் போய்; இராமன் சேவடிப்
பூவினைச் சென்னியில் புனைந்து போயினான்
ஆவி அங்கு அவன் அலது இல்லை ஆதலால்
ஓவலில் உயிர் பிரிந்து உடல் சென்று என்னவே.
48

உரை
   
 
கேகய நாட்டை அடைதல்

1397.உளை விரி புரவித் தேர் உதாசித்து என்று எணும்
வளை முரல் தானையான் மருங்கு போதப் போய்
இளையவன் தன்னொடும் ஏழு நாள் இடை
நளிர் புனல் கேகயநாடு நண்ணினான்.
49

உரை
   
 
கவிக்கூற்று

1398.ஆனவன் போன பின் அரசர் கோமகன்
ஊபனம் இல் பேர் அரசு உய்க்கும் நாள் இடை
வானவர் செய்த மா தவம் உண்டு ஆதலால்
மேல் நனி நிகழ்ந்தன விளம்புவாம் அரோ!
50

உரை