தொடக்கம்
மந்திரிமார் முதலியோர் பரதனை அடைதல்
2332.
வரன்முறை தரெிந்து உணர் மறையின் மாதவத்து
அரு மறை முனிவனும் ஆண்டையான் என
விரைவின் வந்து ஈண்டினர்; விரகின் எய்தினர்;
பரதனை வணங்கினர்; பரியும் நெஞ்சினர்.
1
உரை
2333.
மந்திரக் கிழவரும் நகர மாந்தரும்
தந்திரத் தலைவரும் தரணி பாலரும்
அந்தர முனிவரோடு அறிஞர் யாவரும்
சுந்தரக் குரிசிலை மரபில் சுற்றினார்.
2
உரை
சுமந்திரன் வசிட்டன்முகத்தைக் கருத்துடன் நோக்குதல்
2334.
சுற்றினர் இருந்துழிச்
சுமந்திரப் பெயர்ப்
பொன் தடந் தேர்வலான்,
புலமை உள்ளத்தான்,
கொற்றவற்கு உறு பொருள்
குறித்த கொள்கையான்
முற்றுணர் முனிவனை
முகத்து நோக்கினான்.
3
உரை
சுமந்திரன் நோக்கினால் கூறியதை வசிட்டன் வாக்கால்
பரதனுக்கு உரைத்தல் (2335-2342)
2335.
நோக்கினால் சுமந்திரன் நுவலல் உற்றதை
வாக்கினால் அன்றியே உணர்ந்த மாதவன்
காக்குதி உலகு! நின் கடன் அது ஆம் எனக்
கோக் குமரனுக்கு அது தரெியக் கூறுவான்.
4
உரை
2336.
வேதியர் அருந்தவர் விருத்தர் வேந்தர்கள்
ஆதியர் நின் வயின் அடைந்த காரியம்
நீதியும் தருமமும் நிறுவ; நீ இது
கோது அறு குணத்தினாய்! மனத்துள் கோடியால்.
5
உரை
2337.
தருமம் என்று ஒரு பொருள் தந்து நாட்டுதல்
அருமை என்பது பெரிது அறிதி; ஐய! நீ;
இருமையும் தருவதற்கு இயைவது; ஈண்டு இது
தரெுள் மனத்தார் செயும் செயல் இது ஆகுமால்.
6
உரை
2338.
வள் உறு வயிர வாள் அரசு இல் வையகம்
நள் உறு கதிர் இலாப் பகலும் நாெளாடும்
தெள் உறு மதி இலா இரவும் தேர்தரின்
உள் உறை உயிர் இலா உடலும் ஒக்குமே.
7
உரை
2339.
தேவர் தம் உலகினும் தீமை செய்து உழல்
மா வலி அவுணர்கள் வைகும் நாட்டினும்
ஏ எவை உலகம் என்று இசைக்கும் அன்னவை
காவல் செய் தலைவரை இன்மை கண்டிலம்.
8
உரை
2340.
முறை தரெிந்து ஒருவகை முடிய நோக்குறின்
மறையவன் வகுத்தன மண்ணில் வான் இடை
நிறை பெருந்தன்மையின் நிற்ப செல்வன
இறைகளை இல்லன யாவை? காண்கிலம்.
9
உரை
2341.
பூத்த நாள் மலர் அயன் ஆதிப் புண்ணியர்
ஏத்து வான் புகழினர் இன்றுகாறும் கூக்
காத்தனர்; பின் ஒரு களைகண் இன்மையால்
நீத்த நீர் உடைகல நீரது ஆகுமால்.
10
உரை
2342.
உந்தையோ இறந்தனன்; உம்முன் நீத்தனன்;
வந்ததும் அன்னை தன் வரத்தில் மைந்த! நீ
அந்தம் இல் பேர் அரசு அளித்தி; அன்னது
சிந்தனை எமக்கு எனத் தரெிந்து கூறினான்.
11
உரை
வசிட்டன் சொல்லைக் கேட்ட பரதன் நிலை (2343-2344)
2343.
தஞ்சம் இவ் உலகம், நீ
தாங்குவாய் எனச்
செஞ் செவ்வே முனிவரன்
செப்பக் கேட்டலும்,
நஞ்சினை நுகர் என,
நடுங்குவாரினும்
அஞ்சினன் அயர்ந்தனன்
அருவிக் கண்ணினான்.
12
உரை
2344.
நடுங்கினன்; நாத் தடுமாறி நாட்டமும்
இடுங்கினன்; மகளிரின் இரங்கும் நெஞ்சினன்;
ஒடுங்கிய உயிரினன்; உணர்வு கைதரத்
தொடங்கினன் அரச அவைக்கு உள்ளம் சொல்லுவான்.
13
உரை
பரதன் தன் உள்ளம் கருத்தை உரைத்தல் (2345-2349)
2345.
மூன்று உலகினுக்கும் ஓர்
முதல்வன் ஆய் முதல்
தோன்றினன் இருக்க, யான்
மகுடம் சூடுதல்,
சான்றவர் உரைசெயத்
தருமம் ஆதலால்,
ஈன்றவள் செய்கையின்
இழுக்கு உண்டாகுமோ?
14
உரை
2346.
அடைவு அருங் கொடுமை என்
அன்னை செய்கையை
நடை வரும் தன்மை நீர்,
நன்று இது என்றிரேல்,
இடை வரும் காலம் ஈண்டு
இரண்டும் நீத்து இது
கடை வரும் தீ நெறிக்
கலியின் ஆட்சியோ?
15
உரை
2347.
வேந்து அவை இருந்த நீர் விமலன் உந்தியில்
பூத்தவன் முதலிய புவியுள் தோன்றினார்
மூத்தவர் இருக்கவே முறைமையான் நிலம்
காத்தவர் உளர் எனின் காட்டிக் காண்டிரால்.
16
உரை
2348.
நல் நெறி என்னினும்,
நான் இந் நானில
மன் உயிர்ப் பொறை சுமந்து
இருந்து வாழ்கிலேன்;
அன்னவன் தனை கொணர்ந்து,
அலங்கல் மா முடி
தொல் நெறி முறைமையின்
சூட்டக் காண்டிரால்.
17
உரை
2349.
அன்று எனின், அவனொடும்
அரிய கான் இடை
நின்று, இனிது இருந்தவம்
நெறியின் ஆற்றுவென்;
ஒன்று இனி உரைக்கில் என்
உயிரை நீக்குவென்
என்றனன்; என்ற போது,
இருந்த பேர் அவை.
18
உரை
அவையோர் மகிழ்ச்சி (2350-2351)
2350.
ஆன்ற பேர் அரசனும் இருப்ப ஐயனும்
ஏன்றனன் மணி முடி ஏந்த ஏந்தல் நீ
வான் தொடர் திருவினை மறுத்தி; மன் இளந்
தோன்றல்கள் யார் உளர் நின்னின் தோன்றினார்.
19
உரை
2351.
ஆழியை உருட்டியும் அறங்கள் போற்றியும்
வேள்வியை இயற்றியும் வளர்க்க வேண்டுமோ?
ஏழினொடு ஏழ் எனும் உலகும் எஞ்சினும்
வாழிய நின் புகழ்! என்று வாழ்த்தினார்.
20
உரை
பரதன் இராமனை அழைத்துவரல் பற்றி முரசறைவிக்கச்
சத்துருக்கனிடம் கூறல்
2352.
குரிசிலும் தம்பியைக் கூவிக் கொண்டலின்
முரசு அறைந்து இந்நகர் முறைமை வேந்தனைத்
தருதும் ஈண்டு என்பது சாற்றித் தானையை
விரைவினில் எழுக! என விளம்புவாய் என்றான்.
21
உரை
சத்துருக்கன் சொல்லக் கேட்ட மக்கள் மகிழ்ச்சி
2353.
நல்லவன் உரைசெய நம்பி கூறலும்
அல்லலில் அழுங்கிய அன்பின் மா நகர்
ஒல் என ஒலித்ததால்; உயிர் இல் யாக்கையைச்
சொல் எனும் அமிழ்தினால் துளித்தது என்னவே.
22
உரை
கவிக் கூற்று (2354-2355)
2354.
அவித்த ஐம்புலத்தவர் ஆதியாய் உள
புவித்தலை உயிர் எலாம் இராமன் பொன் முடி
கவிக்கும் என்று உரைக்கவே களித்தலால் அது
செவிப்புலம் நுகர்வது ஓர் தயெ்வத் தேன் கொலாம்.
23
உரை
2355.
படு முரசு அறைந்தனர் பரதன் தம்முனைக்
கொடி நகர்த் தரும்; அவன் கொணர சேனையும்
முடுகுக என்ற சொல் மூரி மா நகர்
உடு பதி வேலையின் உதயம் போன்றதே.
24
உரை
படையின் புறப்பாடு
2356.
எழுந்தது பெரும்படை ஏழு வேலையின்
மொழிந்த பேர் ஊழியில் முழங்கி; முந்து எழ
அழிந்தது கேகயன் மடந்தை ஆசை; போய்க்
கழிந்தது துயர் நெடுங் காதல் தூண்டவே.
25
உரை
படையின் செலவு (2357-2384)
2357.
பண்ணின புரவி தேர் பகடு பண்டியும்
மண்ணினை மறைத்தன; வளர்ந்த மாக்கொடி
விண்ணினை மறைத்தன; விரிந்த மாத்துகள்
கண்ணினை மறைத்தன கமலத் தோனையே.
26
உரை
2358.
ஈசன் இவ் உலகினை அழிக்கும் நாள் எழும்
ஓசையின் நிமிர்ந்து உளது ஒல்லென் பேர் ஒலி;
காசையில் கரியவற் காண மூண்டு எழும்
ஆசையின் நிமிர்ந்தது அவ் அனிக ராசியே.
27
உரை
2359.
படியொடு திரு நகர் துறந்து பல் மரம்
செடியொடு தொடர் வனம் நோக்கி சீதையாம்
கொடியொடு நடந்த அக் கொண்டல் ஆம் எனப்
பிடியொடு நடந்தன பெருங்கை வேழமே.
28
உரை
2360.
சேற்று இள மரை மலர் சிறந்த ஆம் எனக்
கால் தளம் பொலிதரு கன்னிமாரொடும்
ஏற்று இளம் பிடிக் குலம் இகலில் மெல் நடை
தோற்று இள மகளிரைச் சுமப்ப போன்றவே.
29
உரை
2361.
வேதனை வெயில் கதிர் தணிக்க மென் மழைச்
சீத நீரொடு நெடுங்கொடியும் சென்றன;
கோதை வெம் சிலையவன் கோலம் காண்கிலா
மாதரின் நுடங்குவ வரம்பு இல் கோடியே.
30
உரை
2362.
வெண் மதி மீச் செல மேகம் ஊர்ந்து என
அண்ணல் வெம் கதிரவன் அளவு இல் மூர்த்தி ஆய்
மண் இடை இழிந்து ஒரு வழிக் கொண்டால் என
எண் அரு மன்னவர் களிற்றின் ஏகினார்.
31
உரை
2363.
தேர் மிசைச் சென்றது ஒர் சிந்து; செம்முகக்
கார் மிசைக் கழிந்தது ஆர்கலி; ஒர் கார்க் கடல்
ஏர் மிசை இவுளிமேல் ஏகிற்று; எங்கணும்
பார் மிசைப் படர்ந்தது பதாதிப் பௌவமே.
32
உரை
2364.
தாரையும் சங்கமும் தாளம் கொம்பொடு
வார் விசி பம்பையும் துடியும் மற்றவும்
பேரியும் இயம்பல சென்ற பேதைமைப்
பூரியர் குழாத்து இடை அறிஞர் போலவே.
33
உரை
2365.
தா அரு நாண் முதல் அணி அலால் தகை
மேவரு கலங்களை வெறுத்த மேனியர்
தேவரும் மருள் கொளத் தரெியும் காட்சியர்
பூ உதிர் கொம்பு என மகளிர் போயினார்.
34
உரை
2366.
அதிர் கடல் வையகம் அனைத்தும் காத்தவன்
விதி வரும் தனிக் குடை மீது இலாப் படை
பொதி பல கவிகை மீன் பூத்தது ஆகிலும்
கதிர் மதி நீங்கிய கங்குல் போன்றதே.
35
உரை
2367.
செல்லிய செலவினால் சிறிய திக்கு எனச்
சொல்லிய சேனையைச் சுமந்ததே எனில்
ஒல்லொலி வேலை நீர் உடுத்த பாரை ஓர்
மெல்லியல் என்றவர் மெய்யரே கொலாம்?
36
உரை
2368.
தங்கு செஞ்சாந்து அகில் கலவை சார்கில
குங்குமம் கோட்டில கோவை முத்து இல
பொங்கு இளங் கொங்கைகள் புதுமை வேறு இல
தஙெ்கு இளநீர் எனத் தரெிந்த காட்சிய.
37
உரை
2369.
இன்இன் துணையவர் முலை எழுது சாந்தினும்
மன்றல் அம் தாரினும் மறைந்து இலாமையால்
துன்று இளங்கொடி முதல் தூறு நீங்கிய
குன்று எனப் பொலிந்தன குவவுத் தோள்களே.
38
உரை
2370.
நறை அறு கோதையர் நாள் செய் கோலத்தின்
துறை அற அஞ்சனம் துறந்த நாட்டங்கள்
குறை அற நிகர்த்தன கொற்றம் முற்றுவான்
கறை அறக் கழுவிய கால வேலையே.
39
உரை
2371.
விரி மணி மேகலை விரவி ஆர்க்கில
தரெிவையர் அல்குல் தார் ஒலி இல் தேர் என;
பரிபுரம் ஆர்க்கில பவளச் சீறடி
அரி இனம் ஆர்க்கிலாக் கமலம் என்னவே.
40
உரை
2372.
மல்கிய கேகயன் மடந்தை வாசகம்
நல்கியது அரிவையர் நடுவிற்கே கொலாம்!
புல்கிய மலர் வடம் பூண்கிலாமையால்
ஒல்கிய ஒருவகைப் பொறை உயிர்த்தவே.
41
உரை
2373.
கோமகன் பிரிதலின் கோலம் நீத்துள
தாமரைச் செல்வியும் தவத்தை மேவினாள்;
காமனும் அருந்துயர்க் கடலில் மூழ்கினான்
ஆம் என நிகழ்ந்தது அவ் அளவில் சேனையே.
42
உரை
2374.
மண்ணையும் வானையும் வயங்கு திக்கையும்
உண்ணிய நிமிர் கடல் ஒக்கும் என்பது என்?
கண்ணினும் மனத்தினும் கமலத்து அண்ணல் தன்
எண்ணினும் நெடிது அவண் எழுந்த சேனையே!
43
உரை
2375.
அலை நெடும் புனல் அறக் குடித்தலால் அகம்
நிலைபெற நிலை நெறி நிறுத்தலால் நெடு
மலையினை மண் உற அழுத்தலால் தமிழ்த்
தலைவனை நிகர்த்தது அத் தயங்கு தானையே.
44
உரை
2376.
அறிஞரும் சிறியரும் ஆதி அந்தமாச்
செறி பெருந் தானையும் திருவும் நீங்கலால்
குறியவன் புனல் எலாம் வயிற்றில் கொண்ட நாள்
மறி கடல் ஒத்தது அவ் அயோத்தி மாநகர்.
45
உரை
2377.
பெருந்திரை நதிகளும் வயலும் பெட்பு உறு
மரங்களும் மலைகளும் மண்ணும் கண் உறத்
திருந்தலில் அயோத்தி ஆம் தயெ்வ மா நகர்
அருந்தரெு ஒத்தது அப்படை செல் ஆறு அரோ!
46
உரை
2378.
தார்கள் தாம், கோதை தாம்,
தாமம், தாம், தகை
ஏர்கள் கதாம், கலவை தாம்,
கமழ்ந்தின்று என்பரால்
கார்கள் தாம் என மிகக்
கடுத்த கைம்மலை
வார் கடாம் அல்லது,
அம்மன்னன் சேனையே.
47
உரை
2379.
ஆள் உலாம் கடலினும்
அகன்ற அக் கடல்,
தோள் உலாம் குண்டலம்
முதல தொல் அணி
கேள் உலாம் மின் ஒளி
கிளர்ந்தது இல்லையால்;
வாள் உலாம் நுதலியர்
மருங்குல் அல்லதே.
48
உரை
2380.
மத்தளம் முதலிய வயங்கு பல் இயம்
ஒத்தன சேறலின் உரை இலாமையின்
சித்திரச் சுவர் நெடுஞ் சேனை தீட்டிய
பத்தியை நிகர்த்தது அப்படையின் ஈட்டமே.
49
உரை
2381.
ஏடு அறு கோதையர் விழியின் எய்த கோல்
ஊடு உற உரம் தொளைத்து உயிர் உணாவகை
ஆடவர்க்கு அரும் பெருங் கவசம் ஆயது
காடு உறை வாழ்க்கை அக் கண்ணன் நண்ணலே.
50
உரை
2382.
கனங்குழைக் கேகயன் மகளின் கண்ணிய
சினம் கிடந்து எரிதலின் தீய்ந்தவே கொலாம்
அனங்கன் ஐங் கொடுங்கணை கடந்த ஆடவர்
மனம் கிடந்து உண்கில மகளிர் கொங்கையே.
51
உரை
2383.
இன்னணம் நெடும்படை ஏக ஏந்தலும்
தன்னுடைத் திரு அரைச் சீரை சாத்தினான்;
பின் இளையவனொடும் பிறந்த துன்பொடும்
நல் நெடுந்தேர் மிசை நடத்தல் மேயினான்.
52
உரை
தாயர் முதலியோர் உடன்வரப் பரதன் செல்லுதல்
2384.
தாயரும் அருந் தவத்தவரும் தந்தையின்
ஆய மந்திரியரும் அளவு இல் சுற்றமும்
தூய அந்தணர்களும் தொடர்ந்து சூழ்வரப்
போயினன் திரு நகர்ப் புரிசை வாயிலே.
53
உரை
சத்துருக்கன் கூனியைக் கொல்ல முயலுதல்
2385.
மந்தரைக் கூற்றமும் வழிச்செல்வாரொடும்
உந்தியே போதல் கண்டு இளவல் ஓடி ஆர்த்து
அந்தரத்து ஏற்றுவான் அழன்று பற்றலும்
சுந்தரத் தோளவன் விலக்கிச் சொல்லுவான்.
54
உரை
பரதன் தடுத்துக் கூறுதல் (2386-2387)
2386.
முன்னையர் முறைகெட
முடித்த பாவியைச்
சின்னபின்னம் செய்து என்
சினத்தைத் தீர்வெனேல்,
என்னை இன்று என் ஐயன்
துறக்கும் என்று அலால்,
அன்னை என்று உணர்ந்திலென்
ஐய! நான் என்றான்.
55
உரை
2387.
ஆதலால், முனியும் இன்று
ஐயன்; அந்தம் இல்
வேதனைக் கூனியை
வெகுண்டும் என்னினும்,
கோது இலா அருமறை
குலவு நூல் வலாய்!
போதும் நாம் என்று கொண்டு
அரிதில் போயினான்.
56
உரை
இராமன் தங்கிய சோலையில் பரதன் தங்குதல்
(2388-2389)
2388.
மொய் பெருஞ் சேனையும் மூரி ஞாலமும்
கை கலந்து அயல் ஒரு கடலின் சுற்றிட
ஐயனும் தேவியும் இளைய ஆளியும்
வைகிய சோலையில் தானும் வைகினான்.
57
உரை
2389.
அல் அணை நெடுங் கண் நீர்
அருவி ஆடினன்,
கல் அணை கிழங்கொடு
கனியும் உண்டிலன்,
வில் அணைத்து உயர்ந்த தோள்
வீரன் வைகிய
புல் அணை மருங்கில், தான்
பொடியின் வைகினான்.
58
உரை
பரதன் ஊர்திகளை விடுத்துக் காலால் நடத்தல்
2390.
ஆண்டு நின்று ஆண் தகை அடியின் ஏகினான்
ஈண்டிய நெறி எனத் தானும் ஏகினான்;
தூண்டிடு தேர்களும் துரக ராசியும்
காண்தகு கரிகளும் தொடரக் காலினே.
59
உரை