இராமன் முதலியோர் சரபங்கன் தவக்குடிலினின்று போதல் (2722-2723)

2722.அனையவன் இறுதியின் அமைவு நோக்கினர்
இனியவர் இன்னலின் இரங்கும் நெஞ்சினர்
குனிவரு திண்சிலைக் குமரர் கொம்பொடும்
புனிதனது உறையுள் நின்று அரிதில் போயினார்.
1

உரை
   
 
2723.மலைகளும் மரங்களும் மணிக் கற் பாறையும்
அலை புனல் நதிகளும் அருவிச் சாரலும்
இலை செறி பழுவமும் இனிய சூழலும்
நிலை மிகு தடங்களும் இனிது நீங்கினார்.
2

உரை
   
 
தண்டக வனத்து முனிவர் இராமனைக் காண்டல்

2724.பண்டைய அயன் தரு பாலகில்லரும்
முண்டரும் மோனரும் முதலினோர்கள் அத்
தண்டக வனத்து உறை தவத்துேளார் எலாம்
கண்டனர் இராமனைக் களிக்கும் சிந்தையார்.
3

உரை
   
 
தண்டகவனத்து முனிவர் நிலை (2725-2729)

2725.கனை வரு கடுஞ்சினத்து அரக்கர் காய ஓர்
வினை பிறிது இன்மையின் வெதும்புகின்றனர்;
அனல் வரு கானகத்து அமுது அளாவிய
புனல் வர உயிர் வரும் உலவை போல்கின்றார்.
4

உரை
   
 
2726.ஆய் வரும் பெருவலி அரக்கர் நாமமே
வாய் வெரீஇ அலமரும் மறுக்கம் நீங்கினார்;
தீ வரு வனத்திடை இட்டுத் தீர்ந்தது ஓர்
தாய்வர நோக்கிய கன்றின் தன்மையார்.
5

உரை
   
 
2727.கரக்க (அ)ருங் கடுந் தொழில் அரக்கர் காய்தலின்
பொரற்கு இடம் இன்மையின் புழுங்கிச் சோருநர்
அரக்கர் என் கடலிடை ஆழ்கின்றார் ஒரு
மரக்கலம் பெற்றென மறுக்கம் நீங்கினார்.
6

உரை
   
 
2728.தரெிஞ்சு உற நோக்கினர்; செய்த செய்தவம்
அருஞ் சிறப்பு உதவ நல் அறிவு கைதர
விரிஞ்சு உறப் பற்றிய பிறவி வெம் துயர்ப்
பெருஞ்சிறை வீடு பெற்றனைய பெற்றியார்.
7

உரை
   
 
2729.வேண்டின வேண்டினர்க்கு அளிக்கும் மெய்த்தவம்
பூண்டுளர் ஆயினும் பொறையின் ஆற்றலால்
மூண்டு எழு வெகுளியை முதலின் நீக்கினார்;
ஆண்டு உறை அரக்கரால் அலைப்புண்டார் அரோ.
8

உரை
   
 
இராமன் தொழ, முனிவர் வாழ்த்தல்

2730.எழுந்தனர் எய்தினர் இருண்ட மேகத்தின்
கொழுந்தனெ நின்ற அக் குரிசில் வீரனைப்
பொழிந்து எழு காதலின் பொருந்தினார்; அவன்
தொழுந்தொறும் தொழுந்தொறும் ஆசி சொல்லுவார்.
9

உரை
   
 
2731.இனியது ஓர் சாலை கொண்டு ஏகி ‘இவ்வயின்
நனி உறை ‘என்று அவற்கு அமைய நல்கித் தாம்
தனி இடம் சார்ந்தனர் தங்கி மாதவர்
அனைவரும் எய்தினர் அல்லல் சொல்லுவான்.
10

உரை
   
 
முனிவர் இராமனுக்குத் தம் அல்லலைச் சொல்லுதல் (2732-2737)

2732.எய்திய முனிவரை இறைஞ்சி,
    ஏத்து உவந்து,
ஐயனும் இருந்தனன்; ‘அருள் என்? ‘
    என்றலும்,
‘வையகம் காவலன் மைந்த!
    வந்தது ஓர்
வெய்ய வெங் கொடுந்தொழில்
    விளைவு கேள் ‘எனா.
11

உரை
   
 
2733.‘இரக்கம் என்று ஒரு பொருள்
    இலாத நெஞ்சினர்,
அரக்கர் என்று உளர் சிலர்,
    அறத்தின் நீங்கினார்,
நெருக்கவும், யாம் படர்
    நெறி அலா நெறி
துரக்கவும், அருந்தவத்
    துறையுள் நீங்கினேம். ‘
12

உரை
   
 
2734.“வல்லியம் பல திரி வனத்து மான் என
எல்லியும் பகலும் நொந்து இரங்கி ஆற்றலெம்;
சொல்லிய அற நெறித் துறையும் நீங்கினெம்;
வில் இயல் மொய்ம்பினாய்! வீடு காண்குமோ? “
13

உரை
   
 
2735.‘மா தவத்து ஒழுகலெம்; மறைகள் யாவையும்
ஓதலெம்; ஓதுவார்க்கு உதவல் ஆற்றலெம்;
மூது எரி வளர்க்கிலெம்; முறையின் நீங்கினேம்;
ஆதலின் அந்தணரேயும் ஆகிலேம்!
14

உரை
   
 
2736.‘இந்திரன் எனின் அவன் அரக்கர் ஏயின
சிந்தையில் சென்னியில் கொள்ளும் செய்கையான்;
எந்தை! மற்று யார் உளர் இடுக்கண் நீக்குவார்?
வந்தனை யாம் செய்த தவத்தின் மாட்சியால்.‘
15

உரை
   
 
2737.‘உருள் உடை நேமியால் உலகை ஓம்பிய
பொருள் உடை மன்னவன் புதல்வ! போக்கிலா
இருள் உடை வைகலேம்; இரவி தோன்றினாய்!
அருள் உடை வீர! நின் அபயம் யாம் ‘என்றார்.
16

உரை
   
 
இராமன் அபயம் அளித்தல் (2738-2746)

2738.‘புகல் புகுந்திலரேல் புறத்து அண்டத்தின்
அகல்வரேனும் என் அம்பொடு வீழ்வரால்;
தகவு இல் துன்பம் தவிருதிர் நீர் ‘எனப்
பகலவன் குல மைந்தன் பணிக்கின்றான்.
17

உரை
   
 
2739.‘வேந்தன் வீயவும் யாய் துயர் மேவவும்
ஏந்தல் எம்பி வருந்தவும் என் நகர்
மாந்தர் வன் துயர் கூரவும் யான் வனம்
போந்தது என்னுடைப் புண்ணியத்தால் ‘என்றான்.
18

உரை
   
 
2740.‘அறம் தவா நெறி அந்தணர் தன்மையை
மறந்த புல்லர் வலி தொலையேன் எனின்
இறந்து போகினும் நன்று; இது அல்லது
பிறந்து யான் பெறும் பேறு என்பது யாவதோ?
19

உரை
   
 
2741.‘நிவந்த வேதியர் நீவிரும் தீயவர்
கவந்த பந்தக் களி நடம் கண்டிட
அமைந்த வில்லும் அருங்கணைத் தூணியும்
சுமந்த தோளும் பொறைத் துயர் தீருமால்.
20

உரை
   
 
2742.‘ஆவுக்கு ஆயினும் அந்தணர்க்கு ஆயினும்
யாவர்க்கு ஆனும் எளியவர்க்கு ஆயினும்
சாவப் பெற்றவரே தகை வான் உறை
தேவர்க்கும் தொழும் தேவர்கள் ஆகுவார் ‘.
21

உரை
   
 
2743.‘சூர் அறுத்தவனும் சுடர் நேமியும்
ஊர் அறுத்த ஒருவனும் ஓம்பினும்
ஆர் அறத்தினொடு அன்றி நின்றார் அவர்
வேர் அறுப்பென்; வெருவன்மின் நீர் ‘என்றான்.
22

உரை
   
 
2744.உரைத்த வாசகம் கேட்டு உவந்து ஓங்கிட
இரைத்த காதலர் ஏகிய இன்னலர்
திரித்த கோலினர் தேம் மறை பாடினர்;
நிருத்தம் ஆடினர்; நின்று விளம்புவார்.
23

உரை
   
 
2745.தோன்றல்! நீ முனியின் புவனத் தொகை
மூன்று போல்வன முப்பது கோடி வந்து
ஏன்ற போதும் எதிர் அல; என்றலின்
சான்று அரோ எம் தவப் பெரு ஞானமே.
24

உரை
   
 
2746.‘அன்னது ஆகலின் ஏயின ஆண்டு எலாம்
இன்னல் காத்து இங்கு இனிது உறைவாய் ‘எனச்
சொன்ன மாதவர் பாதம் தொழுது உயர்
மன்னர் மன்னவன் மைந்தனும் வைகினான்.
25

உரை
   
 
பத்தாண்டுகள் தண்டகவனத்து இருந்த இராமன் அகத்தியன் குடிலுக்குப் புறப்படுதல்

2747.ஐந்தும் ஐந்தும் அமைதியின் ஆண்டு அவண்
மைந்தர் தீது இலர் வைகினர்; மாதவர்
சிந்தை எண்ணி ‘அகத்தியற் சேர்க ‘என
இந்து நல் நுதல் தன்னொடும் ஏகினார்.
26

உரை
   
 
இடை வழியில் சுதீக்கணன் இராமனை உபசரித்து உரையாடல் (2748-2755)

2748.விட ரகங்களும் வேய் செறி கானமும்
படரும் சில் நெறி பைப்பய நீங்கினார்;
சுடரும் மேனிச் சுதீக்கணன் என்னும் அவ்
இடர் இலான் உறை சோலை சென்று எய்தினார்.
27

உரை
   
 
2749.அருக்கன் அன்ன முனிவனை அவ் வழிச்
செருக்கு இல் சிந்தையர் சேவடி தாழ்தலும்
‘இருக்க ஈண்டு ‘என்று இனியன கூறினான்;
மருக் கொள் சோலையில் மைந்தரும் வைகினார்.
28

உரை
   
 
2750.வைகும் வைகலின் மாதவன் மைந்தன்பால்
செய்கை யாவையும் செய்து ‘இவண் செல்வ! நீ
எய்த யான் செய்தது எத்தவம்? ‘என்றனன்;
ஐயனும் அவற்கு அன்பினன் கூறுவான்.
29

உரை
   
 
2751.‘சொன்ன நான்முகன் தன் வழித் தோன்றினர்
முன்னை யோருள் உயர் தவம் முற்றினார்
உன்னின் யார் உளர்? உன் அருள் எய்திய
என்னின் யார் உளர் இற் பிறந்தார்? ‘என்றான்.
30

உரை
   
 
2752.உவமை நீங்கிய தோன்றல் உரைக்கு எதிர்
நவமை நீங்கிய நற்றவன் சொல்லுவான்;
‘அவம் இலா விருந்து ஆகி என்னால் அமை
தவம் எலாம் கொள்க தக்கணையா ‘என்றான்.
31

உரை
   
 
2753.மறைவலான் எதிர் வள்ளலும் கூறுவான்
‘இறைவ! நின் அருள் எத்தவத்திற்கு எளிது?
அறைவது ஈண்டு ஒன்று; அகத்தியற் காண்பது ஓர்
குறை கிடந்தது இனி ‘எனக் கூறினான்.
32

உரை
   
 
2754.‘நல்லதே நினைந்தாய்; அது நானும் முன்
சொல்லுவான் துணிகின்றது; தோன்றல்! நீ
செல்க ஆண்டு; அவற் சேருதி; சேர்ந்த பின்
இல்லை நின் வயின் எய்த கில்லாதவே.‘
33

உரை
   
 
2755.‘அன்றியும் நின் வரவினை ஆதரித்து
இன்று காறும் நின்று ஏமுறுமால் : அவற்
சென்று சேருதி; சேருதல் செவ்வியோய்!
நன்று தேவர்க்கும் யாவர்க்கும் நன்று ‘எனா.
34

உரை
   
 
இராம இலக்குவர் விடைபெற்றுச் செல்லல்

2756.வழியும் கூறி வரம்பு அகல் ஆசிகள்
மொழியும் மாதவன் மொய்ம் மலர்த் தாள் தொழாப்
பிழியும் தேனின் பிறங்கு அருவித் திரள்
பொழியும் சோலை விரைவினில் போயினார்.
35

உரை
   
 
அகத்தியர் இராமனை எதிர்கொள்ளுதல் (2757-2771)

2757.ஆண் தகையர் அவ் வயின் அடைந்தமை அறிந்தான்
ஈண்டு உவகை வேலை துணை ஏழ் உலகும் எய்த
மாண்ட வரதன் சரண் வணங்க எதிர் வந்தான்;
நீண்ட தமிழால் உலகை நேமியின் அளந்தான்.
36

உரை
   
 
2758.பண்டு, ‘அவுணர் மூழ்கினர்;
    படார்கள் ‘என வானோர்,
‘எண் தவ! எமக்கு அருள்க ‘
    எனக் குறை இரப்பக்
கண்டு, ஒருகை வாரினன்
    முகந்து கடல் எல்லாம்
உண்டு, அவர்கள் பின் ‘உமிழ்க ‘
    என்றலும் உமிழ்ந்தான்.
37

உரை
   
 
2759.தூய கடன் நீர் அடிசில்
    உண்டு அது துரந்தான்
ஆய அதனால் அமரும்
    மெய்யுடைய அன்னான்,
மாய வினை வாள் அவுணன்
    வாதவிதன் வன்மைக்
காயம் இனிது உண்டு உலகின்
    ஆர் இடர் களைந்தான்.
38

உரை
   
 
2760.‘யோகம் உறு பேர் உயிர்கள்
    தாம், உலைவு உறாமல்
ஏகும் நெறி யாது? ‘என,
    மிதித்து அடியின் ஏறி,
மேக நெடு மாலை தவழ்
    விந்தம் எனும் விண் தோய்
நாகமது நாகம் உற,
    நாகம் என நின்றான்.
39

உரை
   
 
2761.மூசு அரவு சூடும்
    முதலோன், உரையின், ‘மூவா
மாசு இல் தவ! ஏகு ‘என,
    வடாது திசை மேல் நாள்
நீசம் உற, வானின்
    நெடு மா மலயம் நேரா,
ஈசன் நிகராய், உலகு
    சீர் பெற இருந்தான்.
40

உரை
   
 
2762.உழக்கும் மறை நாலினும்
    உயர்ந்து, உலகம் ஓதும்
வழக்கினும், மதிக் கவியினும்,
    மரபின் நாடி,
நிழல் பொலி கணிச்சி மணி
    நெற்றி உமிழ் செங்கண்
தழல் புரை சுடர்க் கடவுள்
    தந்த தமிழ் தந்தான்.
41

உரை
   
 
2763.“‘விண்ணினில், நிலத்தினில்,
    விகற்ப உலகில், பேர்
எண்ணினில், இருக்கினில்,
    இருக்கும் ‘‘ என யாரும்
உள் நினை கருத்தினை,
    உறப் பெறுவெனால், என்
கண்ணினில் ‘எனக் கொடு
    களிப்புறும் மனத்தான்.
42

உரை
   
 
2764.‘இரைத்த மறை நான்கினொடு
    இயைந்த பிற யாவும்
நிரைத்த நெடு ஞான நிமிர்
    கல்லில் நெடுநாள் இட்டு
அரைத்தும் அயனாரும் அறியாத
    பொருள், நேர் நின்று
உரைத்து உதவுமால் ‘எனும்
    உணர்ச்சியின் உவப்பான்.
43

உரை
   
 
2765.‘உய்ந்தனர் இமைப்பிலர்;
    உயிர்த்தனர் தவத்தோர்;
அந்தணர் அறத்தின் நெறி
    நின்றனர்கள் ஆனார்;
வெம் திறல் அரக்கர் விட
    வேர் முதல் அறுப்பான்,
வந்தனன் மருத்துவன் ‘எனத்
    தனி வலிப்பான்.
44

உரை
   
 
2766.‘ஏனை உயிராம் உலவை யாவும்
    இடை வேவித்து
ஊன் நுகர் அரக்கர் உருமைச்
    சுடு சினத்தின்
கான அனலைக் கடிது அவித்து
    உலகு அளிப்பான்
வான மழை வந்தது ‘என
    மைந்துறு மனத்தான்.
45

உரை
   
 
2767.கண்டனன் இராமனை வரக்
    கருணை கூரப்
புண்டரிக வாள் நயனம் நீர்
    பொழிய நின்றான்;
எண் திசையும் ஏழ் உலகும்
    எவ் உயிரும் உய்யக்
குண்டிகையினில் பொரு இல்
    காவிரி கொணர்ந்தான்.
46

உரை
   
 
2768.நின்றவனை, வந்த நெடியோன்
    அடி பணிந்தான்;
அன்று, அவனும் அன்பொடு தழீஇ
    அழுத கண்ணான்
‘நன்று வரவு ‘என்று, பல
    நல் உரை பகர்ந்தான்.
என்றும் உள தனெ் தமிழ் இயம்பி
    இசை கொண்டான்.
47

உரை
   
 
2769.வேதியர்கள் வேத மொழி
    வேறு பல கூறக்
காதல் மிக நின்று, எழில்
    கமண்டலுவின் நல் நீர்
மாதவர்கள் வீசி, நெடு
    மா மலர்கள் தூவப்
போது மணம் நாறு குளிர்
    சோலை கொடு புக்கான்.
48

உரை
   
 
2770.பொருந்த அமலன் பொழில் அகத்து
    இனிது புக்கான்;
விருந்து அவண் அமைத்தபின்
    விரும்பி முனி, ‘மேல் நாள்
இருந்தவம் இழைத்த எனது
    இல்லிடையின் வந்து, என்
அருந்தவம் முடித்தனை;
    அருட்கு அரச! ‘என்றான்.
49

உரை
   
 
2771.என்ற முனியைத் தொழுது
    இராமன், ‘இமையோரும்,
நின்ற தவம் முற்றும்
    நெடியோரின் நெடியோரும்,
உன்தன் அருள் பெற்றிலர்கள்,
    உன் அருள் சுமந்தேன்;
வென்றனென் அனைத்துலகும்;
    மேல் இனி என்? ‘என்றான்.
50

உரை
   
 
அகத்தியன் சொல்லுதல் (2772-2774)

2772.“‘தண்டக வனத்து உறைதி “ என்று
    உரை தரக் கொண்டு,
‘உண்டு வரவு இத்திசை ‘எனப்
    பெரிது உவந்தேன்;
எண் தகு குணத்தினை! ‘எனக்
    கொடு உயர் சென்னித்
துண்ட மதி வைத்தவனை
    ஒத்த முனி சொல்லும்.
51

உரை
   
 
2773.‘ஈண்டு உறைதி ஐய! இனி,
    இவ் வயின் இருந்தால்,
வேண்டியன மா தவம்
    விரும்பினை முடிப்பாய்;
தூண்டு சின வாள் நிருதர்
    தோன்றியுளர் என்றால்,
மாண்டு உக மலைந்து, எமர்
    மனத் துயர் துடைப்பாய். ‘
52

உரை
   
 
2774.‘வாழும் மறை; வாழும் மனுநீதி;
    அறம் வாழும்;
தாழும் இமையோர் உயர்வர்;
    தானவர்கள் தாழ்வார்;
ஆழி உழவன் புதல்வ!
    ஐயம் இலை; மெய்யே!
ஏழ் உலகும் வாழும்; இனி,
    இங்கு உறைதி ‘என்றான்.
53

உரை
   
 
இராமன் மறுமொழி

2775.‘செருக்கு அடை அரக்கர் புரி
    தீமை சிதைவு எய்தத்
தருக்கு அழிதரக் கடிது
    கொல்வது சமைந்தேன்;
வருக்க மறையோய்! அவர் வரும்
    திசையில் முந்து உற்று
இருக்கை நலம்; நிற்கு அருள்
    என்? ‘என்றனன் இராமன்.
54

உரை
   
 
அகத்தியன் இராமனுக்குப் படைவழங்கிப் பஞ்சவடிக்கு அனுப்புதல் (2776-2779)

2776.‘விழுமியது சொற்றனை; இவ்
    வில் இது இவண், மேல் நாள்
முழுமுதல்வன் வைத்துளது;
    மூவுலகும், யானும்,
வழிபட இருப்பது; இது
    தன்னை வடி வாளிக்
குழு, வழு இல் புட்டிலொடு
    கோடி ‘என, நல்கி.
55

உரை
   
 
2777.இப்புவனம் முற்றும் ஒரு
    தட்டின் இடை இட்டால்
ஒப்பு வரவிற்று என
    உரைப்பு அரிய வாளும்,
வெப்பு உருவு பெற்ற அரன்
    மேரு வரை வில்லா
முப்புரம் எரித்த தனி
    மொய்க்கணையும், நல்கா.
56

உரை
   
 
2778.ஓங்கும் மரன் ஓங்கி, மலை ஓங்கி,
    மணல் ஓங்கிப்
பூங்குலை குலாவு குளிர்
    சோலை புடை விம்மித்
தூங்கு திரை ஆறு தவழ்
    சூழலது ஒர் குன்றின்
பாங்கர் உளதால், உறையுள்
    பஞ்சவடி; மஞ்ச!
57

உரை
   
 
2779.கன்னி இள வாழை கனி ஈவ,
    கதிர் வாலின்
செந் நெல் உள; தேன் ஒழுகு
    போதும் உள; தயெ்வப்
பொன்னி எனல் ஆய
    புனல் ஆறும் உள; போதா
அன்னம் உள பொன் இவெளாடு
    அன்பின் விளையாட.
58

உரை
   
 
இராமன் விடைபெற்றுச் செல்லுதல்

2780.‘ஏகி, இனி அவ் வயின் இருந்து
    உறைமின் ‘என்றான்;
மேக நிற வண்ணனும் வணங்கி
    விடை கொண்டான்;
பாகு அனைய சொல்லியொடு தம்பி
    பரிவின் பின்
போக, முனி சிந்தை தொடரக்
    கடிது போனான்.
59

உரை