சூர்ப்பணகை வந்தபொழுது இராவணன் இருந்த நிலை (3164-3186)

3164.இரைத்த நெடும் படை அரக்கர் இறந்ததனை
    மறந்தனள், போர் இராமன் துங்க
வரைப் புயத்தின் இடைக் கிடந்த பேர் ஆசை
    மனம் கவற்ற, ஆற்றாள் ஆகித்
“திரைப் பரவைப் பேர் அகழித் திரு
    நகரில் கடிது ஓடிச் சீதை தன்மை
உரைப்பென்‘‘ எனச் சூர்ப்பணகை வர,
    இருந்தான் இருந்த பரிசு உரைத்தும், மன்னோ.
1

உரை
   
 
3165.நிலை இலா உலகினிடை நிற்பனவும்
    நடப்பனவும் நெறியின் ஈந்த
மலரின் மேல் நான்முகற்கும் வகுப்பு அரிது,
    நுனிப்பது ஒரு வரம்பு இல் ஆற்றல்
உலைவு இலா வகை உழந்த தருமம் என,
    நினைந்த எலாம் உதவும் தச்சன்
புலன் எலாம் தரெிப்பது, ஒரு புனை மணி
    மண்டபம் அதனில் பொலிய, மன்னோ.
2

உரை
   
 
3166.புலியின் அதள் உடையானும், பொன் ஆடை
    புனைந்தானும், பூவினானும்
நலியும் வலத்தார் அல்லர்; தேவரின் இங்கு
    யாவர் இனி நாட்டல் ஆவார்?
மெலியும் இடை, தடிக்கும் முலை, வேய் இளந் தோள்,
    சேய் அரிக்கண், வென்றி மாதர்
வலிய நெடும் புலவியினும் வணங்காத
    மகுடம் நிரை வயங்க, மன்னோ.
3

உரை
   
 
3167.பண்டு அலங்கு திசைக் களிற்றின் பணை
    மருப்பின் இணை ஒடியப் படர்ந்த பொன் தோள்
விண் தலங்கள் உற வீங்கி, ஓங்கு உதய
    மால் வரையின் விளங்க, மீதில்
குண்டலங்கள், குல வரையை வலம் வருவான்
    இரவி கொழுங் கதிர் சூழ் கற்றை
மண்டலங்கள் பன்னிரண்டும் நால் ஐந்து ஆய்ப்
    பொலிந்த என வயங்க, மன்னோ.
4

உரை
   
 
3168.வாள் உலாம் முழு மணிகள் வயங்கு ஒளியின்
    தொகை வழங்க, வயிரக் குன்றத்
தோள் எலாம் படி சுமந்த விட அரவின்
    படம் நிரையின் தோன்ற, ஆன்ற
நாள் எலாம் புடை தயங்க, நாம நீர்
    இலங்கையில் தான் நலங்க இட்ட
கோள் எலாம் கிடந்த நெடுஞ் சிறை அன்ன
    நிறை ஆரம் குலவ, மன்னோ.
5

உரை
   
 
3169.ஆய்வு அரும் பெருவலி
    அரக்கர் ஆதியோர்
நாயகர் நளிர் மணி
    மகுடம் நண்ணலால்,
தேய்வு உறத் தேய்வு உறப்
    பெயர்ந்து, செஞ் சுடர்
ஆய் மணிப் பொலன் கழல்
    அடி நின்று ஆர்ப்பவே.
6

உரை
   
 
3170.மூவகை உலகினும் முதல்வர் முந்தையோர்
ஓவலர் உதவிய பரிசின் ஓங்கல் போல்
தேவரும் அவுணரும் முதலினோர் திசை
தூவிய நறுமலர்க் குப்பை துன்னவே.
7

உரை
   
 
3171.இன்ன போது இவ் வழி நோக்கும் என்பதை
உன்னலர் கரம் தலம் சுமந்த உச்சியர்
மின் அவிர் மணி முடி விஞ்சை வேந்தர்கள்
துன்னினர் முறை முறை துறையில் சுற்றவே.
8

உரை
   
 
3172.மங்கையர் திறத்து ஒரு மாற்றம் கூறினும்
தங்களை ஆம் எனத் தாழும் சென்னியர்
அங்கையும் உள்ளமும் குவிந்த ஆக்கையர்
சிங்க ஏறு எனத் திறல் சித்தர் சேரவே.
9

உரை
   
 
3173.அன்னவன் அமைச்சரை நோக்கி ஆண்டு ஒரு
நல் மொழி பகரினும் நடுங்கும் சிந்தையர்
“என்னைகொல் பணி? ” என இறைஞ்சுகின்றனர்
கின்னரர் பெரும் பயம் கிடந்த நெஞ்சினர்.
10

உரை
   
 
3174.பிரகர நெடுந்திசைப் பெருந்தண்டு ஏந்திய
கரதலத்து அண்ணலைக் கண்ணின் நோக்கிய
நரகினர் ஆம் என நடுங்கும் நாவினர்
உரகர்கள் தம் மனம் உலைந்து சூழவே.
11

உரை
   
 
3175.திசை உறு கரிகளைச் செறுத்துத் தேவனும்
வசை உறக் கயிலையை மறித்து வான் எலாம்
அசை உறப் புரந்தரன் அடர்த்த தோள்களின்
இசையினைத் தும்புரு இசையின் ஏத்தவே.
12

உரை
   
 
3176.சேண் உயர் நெறிமுறை திறம்பல் இன்றியே
பாணிகள் பணி செயப் பழுது இல் பண்ணிடை
வீணையின் நரம்பிடை விளைந்த தேமறை
வாணியின் நாரதன் செவியின் வார்க்கவே.
13

உரை
   
 
3177.மேகம் என் துருத்தி கொண்டு,
    விண்ணவர் தருவும் விஞ்சை
நாகமும் சுரந்த தீம் தேன்,
    நறும் புனலோடு அளாவித்
தோகையர் துகிலில் தோயும்
    என்பது ஓர் துணுக்கத்தோடும்,
சீகர மகர வேலை
    காவலன் சிந்த, மன்னோ.
14

உரை
   
 
3178.நறை மலர்த் தாதும், தேனும்
    நளிர் நெடு மகுட கோடி
முறை முறை இறைஞ்சச் சிந்தி
    முரிந்து உகும் மணியும், முத்தும்,
தறையிடை உகாத முன்னம்
    தாங்கினன் தழுவி வாங்கித்
துறை தொறும் தொடர்ந்து நின்று
    சமீரணன் துடைப்ப, மன்னோ.
15

உரை
   
 
3179.மின்னுடை வேத்திரக் கையர் மெய்புகத்
துன் நெடுங் கஞ்சுகத் துகிலர் சோர்வு இலர்
பொன்னொடு வெள்ளியும் புரந்தர ஆதியர்க்கு
இன் இயல் முறை முறை இருக்கை ஈயவே.
16

உரை
   
 
3180.சூலமே முதலிய
    துறந்து, சுற்றிய
சேலையால், செறிய வாய்
    புதைத்த செங்கையன்,
தோல் உடை நெடும் பணை
    துவைக்கும் தோறு எலாம்,
காலன் வந்து இசைக்கும்
    நாள் கடிகை கூறவே.
17

உரை
   
 
3181.நயம் கிளர் நானம் நெய்
    அளாவி, நந்தல் இல்
வியன் கருப்பூரம் மென்
    பஞ்சி மீக் கொளீஇக்
கயங்களில் மரை மலர்க்
    காடு பூத்து என,
வயங்கு எரிக் கடவுளும்
    விளக்கம் மாட்டவே.
18

உரை
   
 
3182.அதிசயம் அளிப்பதற்கு
    அருள் அறிந்து, நல்
புதிது அலர் கற்பகத்
    தருவும், பொய் இலாக்
கதிர்நெடு மணிகளும்,
    கறவை ஆன்களும்,
நிதிகளும், முறை முறை
    நின்று, நீட்டவே.
19

உரை
   
 
3183.குண்டலம் முதலிய குலம்
    கொள் பேர் அணி
மண்டிய பேர் ஒளி
    வயங்க வீசலால்,
“உண்டு கொல் இரவு இனி
    உலகம் ஏழினும்?
எண் திசை மருங்கினும்
    இருள் இன்று ‘‘ என்னவே.
20

உரை
   
 
3184.கங்கையே முதலிய கடவுள் கன்னியர்
கொங்கைகள் சுமந்து இடை கொடியின் ஒல்கிடச்
செங்கையின் அரிசியும் மலரும் சிந்தினர்
மங்கலம் முறை முறை கூறி வாழ்த்தவே.
21

உரை
   
 
3185.ஊருவில் தோன்றிய உயிர்பெய் ஓவியம்
காரினில் செருக்கிய கலாப மஞ்ஞை போல்
வார் விசி கருவியோர் வகுத்த பாணியின்
நாரியர் அருநடம் நடிப்ப நோக்கியே.
22

உரை
   
 
3186.இருந்தனன், உலகங்கள்
    இரண்டும் ஒன்றும், தன்
அருந்தவம் உடைமையின்,
    அளவு இல் ஆற்றலில்
பொருந்திய இராவணன்,
    புருவக் கார்முகக்
கருந் தடங் கண்ணியர்
    கண்ணின் வெள்ளத்தே
23

உரை
   
 
சூர்ப்பணகை இலங்கை நகரின் வடக்கு வாயிலை அடைதல் (3187-3188)

3187.தங்கையும் அவ் வழித் தலையில் தாங்கிய
செங்கையள் சோரியின் தாரை சேர்ந்து இழி
கொங்கையள் மூக்கினள் குழை இல் காதினள்
மங்குலின் ஒலிபடத் திறந்த வாயினள்.
24

உரை
   
 
3188.முடை உடை வாயினால்
    முறையிட்டு, ஆர்த்து எழு
கடை யுகக் கடல் ஒலி
    காட்டக் காந்துவாள்,
குடதிசைச் செக்கரின்
    சேந்த கூந்தலாள்,
வடதிசை வாயிலின்
    வந்து தோன்றினாள்.
25

உரை
   
 
சூர்ப்பணகை தோற்றம் கண்டு இலங்கை நகரமக்கள் துயருறல் (3189-3207)

3189.தோன்றலும் தொல் நகர் அரக்கர் தோகையர்
ஏன்று எதிர் வயிறு அலைத்து இரங்கி ஏங்கினார்;
மூன்று உலகு உடையவன் தங்கை மூக்கு இலள்
தான் தனியவள் வரத் தரிக்க வல்லரோ?
26

உரை
   
 
3190.பொருக்கென நோக்கினர் புகல்வது ஓர்கிலர்
அரக்கரும் இரைத்தனர் அசனி ஆம் எனக்
கரத்தொடு கரங்களைப் புடைத்து கண்களில்
நெருப்பு எழ விழித்து வாய் மடித்து நிற்கின்றார்.
27

உரை
   
 
3191.“இந்திரன் மேலதோ? உலகம் ஈன்ற பேர்
அந்தணன் மேலதோ? ஆழியானதோ?
சந்திர மவுலிபால் தங்குமே கொலோ?
அந்தரம்“ என்று நின்று அழல்கின்றார் சிலர்.
28

உரை
   
 
3192.“செப்புறற்கு உரியவர்
    தவெ்வர் யார் உளர்?
முப்புறத்து உலகமும்
    அடங்க மூடிய
இப்புறத்து அண்டத்தோர்க்கு
    இயைவது அன்று இது;
அப்புறத்து அண்டத்தோர்
    ஆர்?‘‘ என்றார் சிலர்.
29

உரை
   
 
3193.“என்னையே! ‘இராவணன் தங்கை ‘என்ற பின்
‘அன்னையே! ‘என்று அடி வணங்கல் அன்றியே
உன்னவே ஒண்ணுமோ ஒருவரால்? இவள்
தன்னையே அரிந்தனள் தான் “ என்றார் சிலர்.
30

உரை
   
 
3194.“போர் இலான் புரந்தரன் ஏவல் பூண்டனன்;
ஆர் உலாம் நேமியான் ஆற்றல் தோற்றுப் போய்
நீரினான்; நெருப்பினான் பொருப்பினான்; இனி
ஆர் கொல் ஆம் ஈது?“ என அறைகின்றார் சிலர்.
31

உரை
   
 
3195.“சொல் பிறந்தார்க்கு இது
    துணிய ஒண்ணுமே?
இல் பிறந்தார் தமக்கு
    இயைவ செய்திலள்,
கற்பு இறந்தாள் எனக்
    கரன் கொலாம் இவள்
பொற்பு இறந்த ஆக்கினன்
    புகன்று‘‘ என்றார் சிலர
32

உரை
   
 
3196.‘தத்து உறு சிந்தையர்,
    தளரும் தேவர் இப்
பித்து உற வல்லரே?
    பிழைப்பு இல் சூழ்ச்சியார்,
முத்திறத்து உலகையும்
    முடிக்க எண்ணுவார்,
இத்திறம் புணர்த்தனர் ‘
    என்கின்றார் சிலர்.
33

உரை
   
 
3197.“இனி ஒரு கற்பம் உண்டு என்னின் அன்றியே
வனை கழல் வயங்கு வாள் வீரர் வல்லரோ?
பனி வரு கானிடைப் பழிப்பு இல் நோன்பு உடை
முனிவரர் வெகுளியின் முடிபு“ என்றார் சிலர்.
34

உரை
   
 
3198.கரை அறு திருநகர்க்
    கருங்கண் நங்கைமார்
நிரை வளைத் தளிர்களை
    நெரித்து நெக்கனர்,
பிரை உறு பால் என,
    நிலையில் பின்றிய
உரையினர், ஒருவர்முன்
    ஒருவர் முந்தினார்.
35

உரை
   
 
3199.முழவினில், வீணையில்,
    முரல் நல் யாழினில்,
தழுவிய குழலினில்,
    சங்கில், தாரையில்
எழு குரல் இன்றியே,
    என்றும் இல்லது ஓர்
அழு குரல் பிறந்தது அவ்
    இலங்கைக்கு அன்று, அரோ!
36

உரை
   
 
3200.கள்ளுடை வள்ளமும்,
    களித்த தும்பியும்,
உள்ளமும் ஒரு வழிக்
    கிடக்க ஓடினார்,
வெள்ளமும் நாண் உற
    விரிந்த கண்ணினார்,
தள்ளுறும் மருங்கினர்,
    தழீஇக் கொண்டு ஏங்கினார்.
37

உரை
   
 
3201.நாந்தக உழவர்மேல் நாட்டும் தண்டத்தர்
காந்திய மனத்தினர் புலவி கை மிக
சேந்த கண் அதிகமும் சிவந்து நீர் உக
வேந்தனுக்கு இளையவள் தாளின் வீழ்ந்தனர்.
38

உரை
   
 
3202.பொன் தலை மரகதப் பூகம் நேர்வுறச்
சுற்றிய மணி வடம் தூங்கும் ஊசலின்
முற்றிய ஆடலின் முனிவு உற்று ஏங்கினார்
சிற்றிடை அலமரத் தரெுவு சேர்கின்றார்.
39

உரை
   
 
3203.எழு என மலை என எழுந்த தோள்களைத்
தழுவிய வளைத் தளிர் நெகிழத் தாமரை
முழு முகத்து இரு கயல் முத்தின் ஆலிகள்
பொழிதரச் சிலர் உளம் பொருமி விம்முவார்.
40

உரை
   
 
3204.“நெய்ந் நிலைய வேல் அரசன்,
    நேருநரை இல்லான்,
இந்நிலை உணர்ந்தபொழுது
    எந்நிலையன்?‘‘ என்னா,
மைந்நிலை நெடுங்கண் மழை
    வான் நிலையது ஆகப்
பொய்ந்நிலை மருங்கினர்
    புலம்பினர், புரண்டார்.
41

உரை
   
 
3205.மனம் தலைவரும் கனவின்
    இன் சுவை மறந்தார்,
கனம் தலைவரும் குழல்
    சரிந்து, கலை சோர,
நனம் தலைய கொங்கைகள்
    ததும்பிட, நடந்தார்,
அனந்தல் இள மங்கையர்,
    அழுங்கி அயர்கின்றார்.
42

உரை
   
 
3206.“அங்கையின் அரன் கயிலை
    கொண்ட திறல் ஐயன்
தங்கை நிலை இங்கு இது கொல்? ‘‘
    என்று தளர்கின்றார்,
கொங்கை இணை செங்கையின்
    மலைந்து, குலை கோதை
மங்கையர்கள் நங்கை அடி
    வந்து விழுகின்றார்.
43

உரை
   
 
3207.“இலங்கையில் விலங்கும் இவை
    எய்தல் இல என்றும்,
வலம் கையில் இலங்கும் அயில்
    மன்னன் உளன் என்ன,
நலம் கையில் அகன்றதுகொல்,
    நம்மின்?‘‘ என நைந்தார்,
கலங்கல் இல் கருங்கண்
    இணை வாரி கலுழ்கின்றார்.
44

உரை
   
 
சூர்ப்பணகை இராவணன் அடிகளில் விழுந்து புரளுதல்

3208.என்று, இனைய வன் துயர்
    இலங்கை நகர் எய்த,
நின்றவர் இரும் தவரொடு
    ஓடும் நெறி தேடக்
குன்றின் அடி வந்துபடி
    கொண்டல் என, மன்னன்
பொன் திணி கருங்குழல்
    விழுந்தனள், புரண்டாள்.
45

உரை
   
 
இராவணன் வெகுளியின் விளைவு (3209-3211)

3209.மூடினது இருள் படலை
    மூவுலகும் முற்றச்
சேடனும் வெருக்கொடு
    சிரக் குவை நெளித்தான்,
ஆடின குலக் கிரி,
    அருக்கனும் அயிர்த்தான்,
ஓடின திசைக் கரிகள்,
    உம்பரும் ஒளித்தார்.
46

உரை
   
 
3210.விரிந்த வலயங்கள்
    மிடை தோள் படர, மீது இட்டு
எரிந்த நயனங்கள்
    எயிறின் புறம் எரிப்ப,
நெரிந்த புருவங்கள்
    நெடு நெற்றியினை முற்றத்
திரிந்த புவனங்கள்,
    வினை தேவரும் அயர்த்தார்.
47

உரை
   
 
3211.தனெ் திசை நமன்தனொடு
    தேவர் குலம் எல்லாம்,
“இன்று இறுதி வந்தது
    நமக்கு “ என இருந்த;
நின்று உடல் நடுங்க, உயிர்
    விம்மி நிலை நில்லாது,
ஒன்றும் உரையாடல் இலர்
    உம்பரினொடு இம்பர்.
48

உரை
   
 
இராவணன் ‘இது செய்தார் யார்? ‘என வினவுதல்

3212.மடித்த பில வாய்கள் தொறும்
    வந்து புகை முந்தத்
துடித்த தொடர் மீசைகள்
    சுறு கொள உயிர்ப்பக்
கடித்த கதிர் வாள் எயிறு
    மின் கனல, மேகத்து
இடித்த உருமு ஒத்து உரறி,
    “யாவர் செயல்?“ என்றான்.
49

உரை
   
 
சூர்ப்பணகை கூறுதல்

3213.“கானிடை அடைந்து புவி
    காவல் புரிகின்றார்,
மீன் உடை நெடுங் கொடியினோன்
    அனையர், மேல் கீழ்
ஊன் உடை உடம்பு உடைமையோர்
    உவமை இல்லார்,
மானிடர், தடிந்தனர்கள்
    வாள் உருவி;“ என்றாள்.
50

உரை
   
 
இராவணன் மீட்டும் வினாவுதல்

3214.“செய்தனர்கள் மானிடர் “ எனத்
    திசை அனைத்தும்
எய்த நகைவந்தது; எரி
    சிந்தின கண் எல்லாம்;
“நொய்து அவர் வலித்தொழில்;
    நுவன்ற மொழி ஒன்றோ?
பொய் தவிர்; பயத்தை ஒழி;
    புக்க புகல்‘‘ என்றான்.
51

உரை
   
 
சூர்ப்பணகை மீண்டும் கூறுதல் (3215-3220)

3215.“மன்மதனை ஒப்பர் மணி
    மேனி; வட மேருத்
தன் மதன் அழிப்பர் திரள்
    தோளின் வலி தன்னால்;
என் அதனை இப்பொழுது
    இசைப்பது? உலகு ஏழின்
நல் மதன் அழிப்பர் ஒர்
    இமைப்பின் நனி வில்லால்.‘‘
52

உரை
   
 
3216.“வந்தனை முனித்தலைவர்பால்
    உடையர்; வானத்து
இந்துவின் முகத்தர்; எறி
    நீரில் எழும் நாளக்
கந்த மலரைப் பொருவு
    கண்ணர், கழல், கையர்;
அந்தம் இல் தவத் தொழிலர்;
    ஆர் அவரை ஒப்பார்?‘‘
53

உரை
   
 
3217.“வற்கலையர், வார்கழலர்,
    மார்பின் அணி நூலர்,
வில் கலையர், வேதம் உறை
    நாவர், தளிர் மெய்யர்,
உற்கு அலையர், உன்னை ஒர்
    துகள் தனையும் உன்னார்,
சொல் கலை எனத் தொலைவு
    இல் தூணிகள் சுமந்தார்.‘‘
54

உரை
   
 
3218.“ஆறும் மனம் அஞ்சினம்
    அரக்கரை ‘எனச் சென்று
ஏறும் நெறி அந்தணர்
    இயம்ப, ‘உலகு எல்லாம்
வேறும் ‘எனும் நுங்கள் குலம்
    ‘வேரொடும் அடங்கக்
கோறும் ‘என முந்தை ஒரு
    சூளுறவு கொண்டார்.‘‘
55

உரை
   
 
3219.“மாரர் உளரே இருவர்
    ஓர் உலகின் வாழ்வார்?
வீரர் உளரே அவரின்
    வில்லதனின் வல்லார்?
ஆர் ஒருவர் அன்னவரை
    ஒப்பவர்கள்? ஐயா!
ஓரொருவரே இறைவர்
    மூவரையும் ஒப்பார்.‘‘
56

உரை
   
 
3220.“தரா வலய நேமி உழவன்
    தயரதப் பேர்ப்
பராவரு நலத்து ஒருவன்
    மைந்தர், பழி இல்லார்,
விராவரு வனத்து அவன்
    விளம்ப உறைகின்றார்,
இராமனும் இலக்குவனும்
    என்பர் பெயர்‘‘ என்றாள்.
57

உரை
   
 
இராவணன் நொந்து கூறுதல் (3221-3224)

3221.“மருந்து அனைய தங்கை
    மணி நாசி வடி வாளால்
அரிந்தவரும் மானிடர்,
    அரிந்தும் உயிர் வாழ்வார்;
விருந்து அனைய வாெளாடும்
    விழித்து, இறையும் வெள்காது
இருந்தனன் இராவணனும்
    இன் உயிர் கொடு இன்னும்!‘‘
58

உரை
   
 
3222.“கொற்றம் அது முற்றி,
    வலியால் அரசு கொண்டேன்
உற்ற பயன் மற்று இது;
    ஒல்கா உரை இறந்தேன்;
முற்ற உலகத்து முதல்
    வீரர் முடி எல்லாம்
அற்ற பொழுதத்து இது
    பொருந்தும் எனல் ஆமே?‘‘
59

உரை
   
 
3223.“மூளும் உளது ஆய பழி
    என்வயின் முடித்தோர்
ஆளும் உளவாம், அவரது
    ஆர் உயிரும் உண்டாம்,
வாளும் உளது, ஓத விடம்
    உண்டவன் வழங்கும்
நாளும் உள, தோளும் உள,
    நானும் உளென் அன்றோ?‘‘
60

உரை
   
 
3224.“புத்துறவு உறப் பழி
    புகுந்தது என நாணித்
தத்துறுவது என்னை? மனனே!
    தளரல்; அம்மா!
எத்துயர் உனக்கு உளது?
    இனிப் பழி சுமக்கப்
பத்து உள தலைப் பகுதி;
    தோள்கள் பல அன்றோ!‘‘
61

உரை
   
 
இராவணன் மீட்டும் வினாவல்

3225.என்று உரைசெயா, நகைசெயா,
    எரி விழிப்பான்,
“வன் துணை இலா இருவர்
    மானிடரை வாளால்
கொன்றிலர்களா, நெடிய
    குன்றுடைய கானில்
நின்ற கரனே முதலினோர்
    நிருதர்?‘‘ என்றான்.
62

உரை
   
 
சூர்ப்பணகை கரன் முதலியோர்
இறந்தமை சொல்லல் (3226-3227)

3226.அற்று அவன் உரைத்தலோடும்,
    அழுது இழி அருவிக் கண்ணள்,
எற்றிய வயிற்றள், பாரின்
    இடை விழுந்து ஏங்குகின்றாள்,
“சுற்றமும் தொலைந்தது ஐய!
    நொய்து “எனச் சுமந்த கையள்,
உற்றது தரெியும் வண்ணம்
    ஒருவகை உரைக்கலுற்றாள்.
63

உரை
   
 
3227.“சொல் என் தன் வாயில் கேட்டார்,
    தொடர்ந்து எழு சேனையோடும்
கல் என்ற ஒலியில் சென்றார்,
    கரன் முதல் காளை வீரர்
எல் ஒன்று கமலச் செங்கண் இராமன்
    என்று இசைத்த ஏந்தல்
வில் ஒன்றில் கடிகை மூன்றில்
    ஏறினர் விண்ணின்‘‘ என்றாள்.
64

உரை
   
 
இராவணன் இரக்கமும் வெகுளியும் ஒருங்கெய்துதல்

3228.தார் உடைத் தானையோடும்
    தம்பியர், தமியன் செய்த
போரிடை மடிந்தார் என்ற
    உரை செவி புகாத முன்னம்,
காரிடை உருமின் மாரி
    கனலொடு பிறக்குமா போல்,
நீரொடு நெருப்புக் கான்ற
    நிறைநெடுங் கண்கள் எல்லாம்.
65

உரை
   
 
இராவணன் சூர்ப்பணகையை நீ அவர்க்கு இழைத்த குற்றம் என்? என வினவுதல்

3229.ஆயிடை எழுந்த சீற்றத்து
    அழுந்திய துன்பம் ஆழித்
தீயிடை உகுக்கும் நெய்யில்
    சீற்றத்திற்கு ஊற்றம் செய்ய,
“நீ இடை இழைத்த குற்றம்
    என்னை கொல்? நின்னை இன்னே
வாய் இடை இதழும் மூக்கும்
    வலிந்து அவர் கொய்ய?‘‘ என்றான்.
66

உரை
   
 
சூர்ப்பணகை தன்பால் குற்றம் புகுந்தவாறு கூறுதல்

3230.“என் வயின் உற்ற குற்றம்,
    யாவர்க்கும் எழுத ஒண்ணாத்
தன்மையன் இராமனோடும்
    தாமரை தவிரப் போந்தாள்,
மின் வயின் மருங்குல் கொண்டாள்,
    வேய்வயின் மென்தோள் கொண்டாள்,
பொன் வயின் மேனி கொண்டாள்,
    பொருட்டினால் புகுந்தது‘‘ என்றாள்.
67

உரை
   
 
சூர்ப்பணகை இராவணனிடம் சீதையின் அழகினை
விரித்துரைத்தல் (3231-3244)

3231.“ஆர் அவள்? “ என்னலோடும்
    அரக்கியும், “ஐய! ஆழ்ந்து
தேர்; அவள் திரண்ட கொங்கை
    செம்பொன் செய் குலிகச் செப்பு;
பார் அவள் பாதம் தீண்டப்
    பாக்கியம் படைத்தது, அம்மா!
பேர் அவள் சீதை ‘‘ என்று
    வடிவு எலாம் பேசலுற்றாள்.
68

உரை
   
 
3232.“காமரம் முரலும் பாடல்,
    கள் எனக் கனிந்த இன் சொல்,
தேம் மலர் நிரந்த கூந்தல்,
    தேவர்க்கும் அணங்கு ஆம் என்னத்
தாமரை இருந்த தையல்
    சேடி ஆம் தரமும் அல்லள்;
யாம் உரை வழங்கும் என்பது
    ஏழைமை பாலது அன்றோ.‘‘
69

உரை
   
 
3233.“மஞ்சு ஒக்கும் அளக ஓதி;
    மழை ஒக்கும் வடித்த கூந்தல்;
பஞ்சு ஒக்கும் அடிகள், செய்ய
    பவளத்தை விரல்கள் ஒக்கும்;
அம் சொற்கள் அமுதில் அள்ளிக்
    கொண்டவள் வதனம், ஐய!
கஞ்சத்தின் அளவிற்றேனும்,
    கடலினும் பெரிய கண்கள்.‘‘
70

உரை
   
 
3234.“ஈசனார் கண்ணின் வெந்தான்
    என்னும் இது இழுதைச் சொல்; இவ்
வாசம் நாறு ஓதியாளைக்
    கண்டனன், வவ்வல் ஆற்றான்,
பேசலாம் தகைமைத்து அல்லாப்
    பெரும்பிணி பிணிப்ப, நீண்ட
ஆசையால், அழிந்து தேய்ந்தான்
    அநங்கன் அவ் உருவம் அம்மா!‘‘
71

உரை
   
 
3235.“தவெ் உலகத்தும் காண்டி,
    சிரத்தினில் பணத்தினோர்கள்
அவ் உலகத்தும் காண்டி,
    அலைகடல் உலகில் காண்டி,
வெவ் உலை உற்ற வேலை,
    வாளினை வென்ற கண்ணாள்,
எவ் உலகத்தாள்? அங்கம்
    யாவர்க்கும் எழுத ஒணாதாள்.‘‘
72

உரை
   
 
3236.“தோளையே சொல்லுகேனோ?
    சுடர் முகத்து உலவுகின்ற
வாளையே சொல்லுகேனோ?
    அல்லவை வழுத்துகேனோ?
மீளவும் திகைப்பது அல்லால்
    தனி தனி விளம்பல் ஆற்றேன்;
நாளையே காண்டி அன்றே?
    நான் உனக்கு உரைப்பது என்னோ?‘‘
73

உரை
   
 
3237.“வில் ஒக்கும் நுதல் என்றாலும்,
    வேல் ஒக்கும் விழி என்றாலும்,
பல் ஒக்கும் முத்து என்றாலும்,
    பவளத்தை இதழ் என்றாலும்,
சொல் ஒக்கும்; பொருள் ஒவ்வாவால்;
    சொல்லலாம் உவமை உண்டோ?
நெல் ஒக்கும் புல் என்றாலும்,
    நேர் உரைத்தாக வற்றோ?
74

உரை
   
 
3238.“இந்திரன் சசியைப் பெற்றான்;
    இருமூன்று வதனத்தோன் தன்
தந்தையும் உமையைப் பெற்றான்;
    தாமரைச் செங்கணானும்
செந்திரு மகளைப் பெற்றான்;
    சீதையைப் பெற்றாய் நீயும்;
அந்தரம் பார்க்கின், நன்மை
    அவர்க்கு இலை; உனக்கே ஐயா!‘‘
75

உரை
   
 
3239.“பாகத்தில் ஒருவன் வைத்தான்;
    பங்கயத்து இருந்த பொன்னை
ஆகத்தில் ஒருவன் வைத்தான்;
    அந்தணன் நாவில் வைத்தான்;
மேகத்தில் பிறந்த மின்னை
    வென்ற நுண் இடையை, நீயும்,
மாகத் தோள் வீர! பெற்றால்,
    எங்ஙனம் வைத்து வாழ்தி?‘‘
76

உரை
   
 
3240.“பிள்ளை போல் பேச்சினாளைப்
    பெற்றபின் பிழைக்கல் ஆற்றாய்,
கொள்ளை போகின்ற செல்வம்
    அவளுக்கே கொடுத்தி; ஐய!
வள்ளலே! உனக்கு நல்லேன்,
    மற்று நின் மனையில் வாழும்
கிள்ளை போல் மொழியார்க்கு எல்லாம்
    கேடு சூழ்கின்றேன். அன்றே.‘‘
77

உரை
   
 
3241.“தேர் தந்த அல்குல் சீதை,
    தேவர்தம் உலகின், இம்பர்,
வார் தந்த கொங்கையார் தம்
    வயிறு தந்தாளும் அல்லள்;
தார் தந்த கமலத் தாளைத்
    தருக்கினர் கடையச் சங்க
நீர் தந்தது, அதனை வெல்வான்
    நிலம் தந்து, நிரம்பிற்று, அன்றே.‘‘
78

உரை
   
 
3242.“மீன்கொண்டு ஊடாடும் வேலை
    மேகலை உலகம் ஏத்தத்
தேன்கொண்டு ஊடாடும் கூந்தல்,
    சிற்றிடைச் சீதை என்னும்
மான் கொண்டு ஊடாடு நீ; உன்
    வாள் வலி உலகம் காண,
யான் கொண்டு ஊடாடும் வண்ணம்,
    இராமனைத் தருதி என்பால்.‘
79

உரை
   
 
3243.“தருவது விதியே என்றால்,
    தவம் பெரிது உடையரேனும்,
வருவது வரும் நாள் அன்றி,
    வந்து கைகூட வற்றோ?
ஒருபது முகமும், கண்ணும்,
    உருவமும், மார்பும், தோள்கள்
இருபதும், படைத்த செல்வம்
    எய்துவது, இனி நீ, எந்தாய்!‘‘
80

உரை
   
 
3244.“‘இன்னவள் தன்னை உன்பால்
    உய்ப்பல் ‘என்று எடுக்கல் உற்ற
என்னை அவ் இராமன் தம்பி,
    இடை புகுந்து, இலங்கு வாளால்
முன்னை மூக்கு அரிந்து விட்டான்;
    முடிந்தது என் வாழ்வு; முன் நின்
சொன்ன பின் உயிரை நீப்பான்
    துணிந்தனென் ‘‘ என்னச் சொன்னாள்.
81

உரை
   
 
சூர்ப்பணகை மாற்றம் கேட்ட இராவணனுக்குக்
காமம் மிகுதல் (3245-3250)

3245.கோபமும், மறனும், மானக்
    கொதிப்பும், என்று இனைய எல்லாம்,
பாபம் நின்றிடத்து நில்லாப்
    பெற்றி போல் பற்று விட்ட;
தீபம் ஒன்று ஒன்றை உற்றால்
    என்னலாம் செயலில் புக்க
தாபமும் காம நோயும்
    ஆர் உயிர் கலந்த. அன்றே.
82

உரை
   
 
3246.கரனையும் மறந்தான்; தங்கை
    மூக்கினைக் கடிந்தும் நின்றான்
உரனையும் மறந்தான்; உற்ற
    பழியையும் மறந்தான்; வெற்றி
அரனையும் கொண்ட காமன்
    அம்பினால், முன்னைப் பெற்ற
வரனையும் மறந்தான். கேட்ட
    மங்கையை மறந்து இலாதான்.
83

உரை
   
 
3247.சிற்றிடைச் சீதை என்னும்
    நாமமும் சிந்தை தானும்
உற்று, இரண்டு ஒன்றாய் நின்றால்,
    ஒன்று ஒழித்து ஒன்றை உன்ன
மற்று ஒரு மனமும் உண்டோ?
    மறக்கலாம் வழி மற்று யாதோ?
கற்றனர் ஞானம் இன்றேல்
    காமத்தைக் கடக்கலாமோ?
84

உரை
   
 
3248.மயில் உடைச் சாயலாளை
    வஞ்சியா முன்னம், நீண்ட
எயில் உடை இலங்கை நாதன்,
    இதயம் ஆம் சிறையில் வைத்தான்;
அயில் உடை அரக்கன் உள்ளம்,
    அவ்வழி மெள்ள மெள்ள
வெயில் உடை நாளில் உற்ற
    வெண்ணெய் போல் வெதும்பிற்று. அன்றே.
85

உரை
   
 
3249.விதியது வலியினானும்,
    மேல் உள விளைவினானும்,
பதி உறு கேடு வந்து
    குறுகிய பயத்தினானும்,
கதி உறு பொறியின் வெய்ய
    காமம் நோய், கல்வி நோக்கா
மதி இலி மறையச் செய்த
    தீமை போல் வளர்ந்தது. அன்றே.
86

உரை
   
 
3250.பொன் மயம் ஆன நங்கை
    மனம் புகப் புன்மை பூண்ட
தன்மையோ, அரக்கன் தன்னை
    அயர்த்தது ஓர் தகைமையாலோ,
மன்மதன் வாளி தூவி நலிவது
    ஓர் வலத்தன் ஆனான்?
வன்மையை மாற்றும் ஆற்றல்
    காமத்தே வதிந்தது. அன்றே?
87

உரை
   
 
இராவணன் தன் கோயில் அடைதல்

3251.எழுந்தனன் இருக்கை நின்று;
    ஆண்டு, ஏழ் உலகத்துேளாரும்
பொழிந்தனர் ஆசி ஓசை;
    முழங்கின சங்கம் எங்கும்;
பொழிந்தனர் பூவின் மாரி
    போயினர் புறத்தோர் எல்லாம்;
அழிந்து அழி சிந்தையோடும்
    ஆடகக் கோயில் புக்கான்.
88

உரை
   
 
இராவணன் காமநோய் மேலும் முதிர்தல் (3252-3257)

3252.பூவினால் வேய்ந்து செய்த
    பொங்கு பேர் அமளிப் பாங்கர்த்
தேவிமார் குழுவும் நீங்கிச்
    சேர்ந்தனன்; சேர்தலோடும்
நாவி நாறு ஓதி நவ்வி,
    நயனமும் குயமும் புக்குப்
பாவியாக் கொடுத்த வெம்மை
    பயப்பயப் பரந்தது அன்றே.
89

உரை
   
 
3253.நூக்கல் ஆகலாத காதல்
    நூறு நூறு கோடியாய்ப்
பூக்க, வாச வாடை வீசு
    சீம் நீர் பொதிந்த மென்
சேக்கை வீ கரிந்து, திக்கயங்கள்
    எட்டும் வென்ற தோள்,
ஆக்கை தேய, உள்ளம் நைய,
    ஆவி வேவது ஆயினான்.
90

உரை
   
 
3254.தாது கொண்ட சீதம் மேவு
    சாந்து, சந்த மென் தளிர்,
போது, கொண்டு அடுத்தபோது,
    பொங்கு தீ மருந்தினால்
வேது கொண்டது என்ன, மேனி
    வெந்து வெந்து, விம்மு தீ
ஊது வன் துருத்திபோல்,
    உயிர்த்து உயிர்த்து, உயங்கினான்.
91

உரை
   
 
3255.தாவியாது, தீது எனாது,
    தையலாளை மெய் உறப்
பாவியாத போது இலாத
    பாவி, மாழை, பானல், வேல்,
காவி, ஆன கண்ணி மேனி
    காண மூளும் ஆசையால்,
ஆவி சால நொந்து நொந்து,
    அழுங்குவானும் ஆயினான்.
92

உரை
   
 
3256.பரம் கிடந்த மாதிரம் பரித்த
    பாழி யானையின்
கரம் கிடந்த கொம்பு ஒடிந்து
    அடங்க வென்ற காவலன்,
மரம் குடைந்த தும்பிபோல்
    அநங்கன் வாளி வந்து வந்து
உரம் குடைந்து நொந்து நொந்து
    உளைந்து உளைந்து ஒடுங்கினான்.
93

உரை
   
 
3257.“கொன்றை துன்று கோதையோடு ஒர்
    கொம்பு வந்து என் நெஞ்சு இடை
நின்றது உண்டு கண்டது ‘‘ என்று
    அழிந்து அழுங்கும் நீர்மையான்,
மன்றல் தங்கு அலங்கல் மாரன்
    வாளி போல, மல்லிகைத்
தனெ்றல் வந்து எதிர்ந்தபோது
    சீறுவானும் ஆயினான்.
94

உரை
   
 
இராவணன் மாளிகையினின்று நீங்கி ஒரு சோலையினை அடைதல்

3258.அன்னகாலை, அங்குநின்று
    எழுந்து, அழுங்கு சிந்தையான்,
“இன்ன ஆறு செய்வென் “ என்று ஒர்
    எண் இலான், இரங்குவான்,
பன்னு கோடி தீப மாலை,
    பாலையாழ் பழித்த சொல்
பொன் அனார் எடுக்க, அங்கு,
    ஒர் சோலை ஊடு போயினான்.
95

உரை
   
 
இராவணன் புக்க சோலையின் இயல்பு

3259.மாணிக்கம் பனசம்; வாழை
    மரகதம்; வயிரம் தேமா;
ஆணி பொன் வேங்கை; கோங்கம்
    அரவிந்த ராகம்; பூகம்
சேண் உற்ற நீலம்; சாலம்
    குருவிந்தம்; தஙெ்கு வெள்ளி;
பாணித் தண் பளிங்கு நாகம்;
    பாடலம் பவளம். மன்னோ.
96

உரை
   
 
இராவணன் அச்சோலையுள் அமைந்த மண்டபத்துள்ள
படுக்கையினை அடைதல்

3260.வான் உற நிவந்த செங்கேழ்
    மணிமரம் துவன்றி, மாக
மீனொடு மலர்கள் தம்மில்
    வேற்றுமை தரெிதல் தேற்றாத்
தேன் உகு சோலை நாப்பண்,
    செம்பொன் மண்டபத்துள், ஆண்டு ஓர்
பால்நிற அமளி சேர்ந்தான்
    பையுள் உற்று உயங்கி நைவான்.
97

உரை
   
 
அச்சோலை புள்ெளாலி அற்றதாதல்

3261.கனிகளின், மலரின் வந்த
    கள் உண்டு, களிகொள் அன்னம்,
வனிதையர் மழலை இன்சொல்
    கிள்ளையும், குயிலும், வண்டும்,
இனியன மிழற்றுகின்ற யாவையும்,
    ‘இலங்கை வேந்தன்
முனியும் ‘என்று அவிந்த வாய,
    மூங்கையர் போன்ற அன்றே.
98

உரை
   
 
இராவணனுக்கு அஞ்சிப் பனிப்பருவம் நீங்க வேனில் வருதல

3262.பருவத்தால் வாடைவந்த
    பசும்பனி, அநங்கன் வாளி
உருவிப் புக்கு ஒளித்த புண்ணில்
    குளித்தலும், உளைந்து விம்மி,
“இருதுத்தான் யாது அடா? “என்று
    இயம்பினன்; இயம்பலோடும்,
வெருவிப் போய்ச் சிசிரம் நீங்கி,
    வேனில் வந்து இறுத்தது அன்றே.
99

உரை
   
 
இராவணன் வேனிலால் வெதும்பல் (3263-3264)

3263.வன் பணை மரமும் தீய,
    மலைகளும் குளிர, ஆழும்
மென் பனி எரிந்தது என்றால்,
    வேனிலை விளம்பல் ஆமோ!
அன்பு எனும் விடம் உண்டாரை
    ஆற்றல் ஆம் மருந்தும் உண்டோ,
இன்பமும் துன்பம்தானும்
    உள்ளத்தோடு இயைந்த அன்றே?
100

உரை
   
 
3264.மாதிரத்து இறுதி காறும்,
    தன் மனத்து எழுந்த மையல்
வேதனை வெப்பம் செய்ய,
    வேனிலும் வெதுப்புங் காலை,
“யாது இது? இங்கு இதனின் முன்னைச்
    சிசிரம் நன்று; இதனை நீக்கிக்
கூதிர் ஆம் பருவம் தன்னைக்
    கொணருதிர் விரைவின்‘‘ என்றான்.
101

உரை
   
 
கூதிர்ப்பருவமும் வேதனைதர, இராவணன்
பருவங்களை அகற்றக் கட்டளையிடுதல்

3265.கூதிர் வந்து அடைந்த காலை
    கொதித்தன குவவுத் திண் தோள்;
“சீதமும் சுடுமோ? முன்னைச்
    சிசிரமே காண் இது“ என்றான்;
“ஆதியாய்! அஞ்சும் அன்றே
    அருள் அலது இயற்ற“ என்ன,
“யாதும் இங்கு இருது ஆகாது;
    யாவையும் அகற்றுக“ என்றான்.
102

உரை
   
 
பருவம் நீங்கிய நிலையில் உலகத் தோற்றம்

3266.என்னலும், இருது எல்லாம்
    ஏகின; யாவும் தத்தம்
பன்ன அரும் பருவம் செய்யா,
    யோகி போல் பற்று நீத்த;
பின்னரும் உலகம் எல்லாம்
    பிணிமுதல் பாசம் வீசித்
துன் அருந்தவத்தின் எய்தும்
    துறக்கம்போல் தோன்றிற்று. அன்றே.
103

உரை
   
 
பருவங்கள் நீங்கிய நிலையிலும் இராவணன் வருந்தல்

3267.கூலத்தார் உலகம் எல்லாம்
    குளிர்ப்பொடு வெதுப்பும் நீங்க,
நீலத்து ஆர் அரக்கன் மேனி
    நெய் இன்றி எரிந்தது; அன்றே
காலத்தால் வருவது ஒன்றோ?
    காமத்தால் கனலும் வெம் தீச்
சீலத்தால் அவிவது அன்றிச்
    செய்யத்தான் ஆவது உண்டோ?
104

உரை
   
 
உழையர் செய்த உபசாரங்களால் துயர் நீங்காத இராவணன் சந்திரனைக் கொணரும்படி கூறல்

3268.நாரம் உண்டு எழுந்த மேகம்
    தாமரை வளையம் நானச்
சாரம் உண்டிருந்த சீதச்
    சந்தனம் தளிர் மென் தாதோடு
ஆரம் உண்டிருந்தும் சிந்தை
    அயர்கின்றான் அயல் நின்றாரை
“‘ஈரம் உண்டு ‘என்பர்; ஓடி
    இந்துவைக் கொணர்திர் “ என்றான்.
105

உரை
   
 
சந்திரன் தோன்றுதல் (3269-3271)

3269.வெம், சினத்து அரக்கன் ஆண்ட
    வியன் நகர் மீது போதும்
நெஞ்சு இலன் ஒதுங்குகின்ற
    நிறைமதியோனை நேடி,
‘அஞ்சலை வருதி; நின்னை
    அழைத்தனன் அரசன் ‘என்னச்
சஞ்சலம் துறந்து, தான் அச்
    சந்திரன் உதிக்கல் உற்றான்.
106

உரை
   
 
3270.அயிர் உறக் கலந்த நல் நீர்
    ஆழி நின்று ஆழி நீத்துச்
செயிர் உறக் கலந்தது ஆண்டு ஓர்
    தேய்வு வந்து உற்ற போழ்தில்
வயிரம் உற்று உடைந்து சென்றோர்
    வலியவற் செல்லுமா போல்
உயிர் தறெக் காலன் என்பான்
    ஒத்தனன் உதயம் செய்தான்.
107

உரை
   
 
3271.பரா வரும் கதிர்கள் எங்கும்
    பரப்பி மீப் படர்ந்து, வானில்
தராதலத்து எவரும் பேணா
    அவனையே சலிக்கும் நீரால்,
அரா அணைத் துயிலும் அண்ணல்,
    காலம் ஓர்ந்து அற்றம் நோக்கி
இராவணன் உயிர்மேல் உய்த்த
    திகிரியும் என்னல் ஆனான்.
108

உரை
   
 
இராவணன் நிலவால் வருந்தல் (3272-3275)

3272.அருகு உறு பாலின் வேலை
    அமுது எலாம் அளைந்து வாரிப்
பருகின பரந்து பாய்ந்த
    நிலாச் சுடர்ப் பனிமென் கற்றை,
நெரி உறு புருவச் செங்கண்
    அரக்கற்கு நெருப்பின் நாப்பண்
உருகிய வெள்ளி அள்ளி
    வீசினால் ஒத்தது. அன்றே.
109

உரை
   
 
3273.மின் நிலம் திரிந்தது அன்ன
    விழு நிலா, மிதிலை சூழ்ந்த
செந்நெல் அம் கழனி நாடன்
    திருமகள் செவ்வி கேளா,
நல் நலம் தொலைந்து சோரும்
    அரக்கனை நாளும் தோலாத்
துன்னலன் ஒருவன் பெற்ற
    புகழ் எனச் சுட்டது அன்றே.
110

உரை
   
 
3274.கரும் கழல் காலன் அஞ்சும்
    காவலன், கறுத்து நோக்கித்
தரும் கதிர்ச் ‘சீத யாக்கைச்
    சந்திரன் தருதிர் ‘என்ன,
முருங்கிய கனலின் மூரி
    விடத்தினை முகக்கும் சீற்றத்து
அருங்கதிர் ‘அருக்கன்தன்னை
    ஆர் அழைத்தீர்கள்? ‘என்றான்.
111

உரை
   
 
3275.அவ் வழிச் சிலதர் அஞ்சி,
    ‘ஆதியாய்! அருள் இல்லாரை
இவ்வழி தருதும் என்பது
    இயம்பலாம் இயல்பிற்று அன்றால்,
செவ்வழிக் கதிரோன் என்றும்
    தேரின்மேல் அன்றி வாரான்;
வெவ் வழித்து எனினும், திங்கள்
    விமானத்தின் மேலது ‘என்றார்.
112

உரை
   
 
இராவணன் சந்திரனோடு நொந்து கூறல் (3276-3278)

3276.பணம் தாழ் அல்குல் பணிமொழியார்க்கு
    அன்புபட்டார் படும் காமக்
குணம் தான் முன்னம் அறியாதான்,
    கொதியாநின்றான், மதியாலே
தண் அம் தாமரையின் தனிப் பகைஞன்
    என்னும் தன்மை ஒருதானே
உணர்ந்தான்; உணர்வுற்று, அவன்மேல் இட்டு
    உயிர் தந்து உய்க்க உரை செய்வான்.
113

உரை
   
 
3277.‘தேயா நின்றாய், மெய் வெளுத்தாய்,
    உள்ளம் கறுத்தாய், நிலைதிரிந்து
காயா நின்றாய், ஒரு நீயும்
    கண்டார் சொல்லக் கேட்டாயோ?
பாயாநின்ற மலர் வாளி
    பறியாநின்றார் இன்மையால்,
ஓயா நின்றேன்; உயிர் காத்தற்கு
    உரியார் யாவர்? உடுபதியே! ‘
114

உரை
   
 
3278.ஆற்றார் ஆகில் தம்மைக் கொண்டு
    அடங்காரோ? என் ஆர் உயிர்க்குக்
கூற்றாய் நின்ற குலச் சனகி
    குவளை மலர்ந்த தாமரைக்குத்
தோற்றாய்; அதனால் அகம் கரிந்தாய்,
    மெலிந்தாய், வெதும்பத் தொடங்கினாய்!
மாற்றார் செல்வம் கண்டு அழிந்தால்,
    வெற்றி ஆக வற்றாமோ?
115

உரை
   
 
சந்திரனும் இரவும் மறையச் சூரியனும் பகலும் தோன்றுதல்

3279.என்னப் பன்னி, இடர் உழவா,
    ‘இரவோடு இவனைக் கொண்டு அகற்றி,
முன்னைப் பகலும் பகலோனும் வருக ‘
    என்றான்; மொழியாமுன்,
உன்னற்கு அரிய உடுபதியும்
    இரவும் ஒளித்த; ஒரு நொடியில்
பன்னற்கு அரிய பகலவனும்
    பகலும் வந்து பரந்தவால்.
116

உரை
   
 
விடியற்கால வருணனை. சூரியன் உதித்தலால்
தாமரை மலர்தலும்,ஆம்பல் குவிதலும்

3280.இருக்கின் மொழியார் எரி முகத்தின்
    ஈந்த நெய்யின் அவிர் செம்பொன்
உருக்கி அனைய கதிர் பாய
    அனல்போல் விரிந்தது உயர் கமலம்;
அருக்கன் எய்த அமைந்து அடங்கி
    வாழாது, அடாத பொருள் எய்திச்
செருக்கி, இடையே திரு இழந்த
    சிறியோர் போன்ற சேதாம்பல்.
117

உரை
   
 
சந்திரன் ஒளி மழுங்கி மறைதல்

3281.நாணி நின்ற ஒளி மழுங்கி,
    நடுங்காநின்ற உடம்பினன் ஆய்ச்
சேணில் நின்று புறம் சாய்ந்து,
    கங்குல் தாரம் பின் செல்லப்
பூணின் வெய்யோன் ஒரு திசையே
    புகுதப் போவான், புகழ்வேந்தர்
ஆணை செல்ல நிலை அழிந்த
    அரசர் போன்றான் அல் ஆண்டான்.
118

உரை
   
 
அகால சூரியோதயத்தில் மகளிர் நிலை (3282-3284)

3282.மணந்த பேர் அன்பரை மலரின் சேக்கையுள்
புணர்ந்திலர் இடை ஒரு வெகுளி பொங்கலால்;
கணம் குழை மகளிர்கள் கங்குல் நீங்கிட
உணர்ந்திலர்; கனவினும் ஊடல் தீர்ந்திலர்.
119

உரை
   
 
3283.தள்ளுறும் உயிரினர் தலைவர் நீங்கலால்
நள் இரவிடை உறும் நடுக்கம் நீங்கலார்
கொள்ளையின் அலர் கருங்குவளை நாள் மலர்
கள் உகுவன எனக் கலுழும் கண்ணினார்.
120

உரை
   
 
3284.அணை மலர்ச் சேக்கையுள் ஆடல் தீர்ந்தனர்
பணைகளைத் தழுவிய பவள வல்லி போல்
இணை மலர்க் கைகளின் இறுக இன் உயிர்த்
துணைவரைத் தழுவினர் துயில்கின்றார் சிலர்.
121

உரை
   
 
யானைகளின் நிலை

3285.அளி இனம் கடம் தொறும் ஆர்ப்ப ஆய் கதிர்
ஒளி பட உணர்ந்தில உறங்குகின்றன
தெளிவு இல இன் துயில் விளையும் சேக்கையுள்
களிகளை நிகர்த்தன களிநல் யானையே.
122

உரை
   
 
விளக்குகள் ஒளி மழுங்கினமை

3286.விரிந்து உறை துறை தொறும் விளக்கம் யாவையும்
எரிந்து இழுது அஃகல ஒளி இழந்தன;
அருந்துறை நிரம்பிய உயிரின் அன்பரைப்
பிரிந்து உறைதரும் குலப் பேதைமாரினே.
123

உரை
   
 
காலையில் மலரும் மலர் மலராமை

3287.புனைந்து இதழ் உரிஞ்சு உறு பொழுது புல்லியும்
வனைந்தில வைகறை மலரும் மா மலர்
நனந்தலை அமளியில் துயிலும் நங்கைமார்
அனந்தரின் நெடுங் கண்ணோடு ஒத்தவாம் அரோ.
124

உரை
   
 
மக்கள் துயிலுணராமை

3288.இச்சையில் துயில்பவர் யாவர் கண்களும்
நிச்சயம் பகலும் தம் இமைகள் நீங்கல
பிச்சையும் இடுதும் என்று உணர்வு பேணலா
வச்சையர் நெடும் மனை வாயில் மானவே.
125

உரை
   
 
நேமிப்புள் பகல் வரவால் மகிழ்தல்

3289.நஞ்சு உறு பிரிவின நாளின் நீளம் ஓர்
தஞ்சு உற விடுவது ஓர் தயாவு தாங்கலால்
வெம் சிறை நீங்கிய வினையினார் என
நெஞ்சு உறக் களித்தன நேமிப்புள் எலாம்.
126

உரை
   
 
மலர்கள் விரியாமையால் வண்டுகள் வருந்தல்

3290.நாள் மதிக்கு அல்லது நடுவண் எய்திய
ஆணையில் திறக்கிலா அலரில் பாய்வன
மாண் வினை பயன்படா மாந்தர் வாயில் சேர்
பாணரில் தளர்ந்தன பாடல் தும்பியே.
127

உரை
   
 
மருளும் தரெுளும் உற்ற மங்கையர் நிலை

3291.அரு மணிச் சாளரம் அதனின் ஊடு புக்கு
எரி கதிர் இன் துயில் எழுப்பி எய்தவும்
மருெளாடு தரெுள் உறும் நிலையர்; மங்கையர்
தரெுள் உற மெய்ப்பொருள் தெளிந்திலாரினே.
128

உரை
   
 
யாமக்கணக்கரும் கோழியும் துயின்றமை

3292.ஏவலின் வன்மையை எண்ணல் தேற்றலர்
நாவலர் இயற்றிய நாளின் நாம நூல்
காவலின் நுனித்து உணர் கணித மாக்களும்
கூவுறு கோழியும் துயில்வு கொண்டவே.
129

உரை
   
 
பகற்பொழுதும் இராவணன் வருந்தி இது
சூரியனன்று சந்திரனே யெனல்

3293.இனையன உலகினில் நிகழும் எல்லையில்
கனை கழல் அரக்கனும் கண்ணின் நோக்கினான்
நினைவுறும் மனத்தையும் நெருப்பில் தீய்க்குமால்
அனைய அத் திங்களே ஆகுமால் என்றான்.
130

உரை
   
 
உழையர் சூரியனே எனல்

3294.திங்கேளா அன்று இது; செல்வ! செங்கதிர்;
பொங்கு உளைப் பச்சை அம் புரவித் தேரதால்
வெம் கதிர் சுடுவதே; அன்றி மெய் உறத்
தங்கு தண் கதிர் சுடத் தகாது என்றார் சிலர்.
131

உரை
   
 
இராவணன் பிறைமதியை அழைக்கும்படி கூறுதல்

3295.நீலச் சிகரக் கிரி அன்னவன்,
    ‘நின்ற வெய்யோன்
ஆலத்தினும் வெய்யன்;
    அகற்றி, அரற்றுகின்ற
வேலைக் குரலைத் தவிர்கென்று
    விலக்கி, மேலை
மாலைப் பிறைப் பிள்ளையை
    கூவுதிர் வல்லை‘‘ என்றான்.
132

உரை
   
 
பிறைத்தோற்றம் (கவிக்கூற்று)

3296.சொன்னான் நிருதர்க்கு இறை,
    அம்மொழி சொல்லலோடும்,
அந்நாளின் நிரம்பிய அம்மதி,
    ஆண்டு ஒர் வேலை
முந்நாளின் இளம் பிறையாகி
    முளைத்தது, என்றால்,
எந்நாளும் அருந்தவம் அன்றி
    இயற்றல் ஆமோ?
133

உரை
   
 
பிறைவர இராவணன் வருந்தல் (3297-3299)

3297.குடபாலின் முளைத்தது கண்ட
    குணங்கள் தீயோன்,
வடவா அனல்; அன்று எனின்,
    மண் பிடர் வைத்த பாம்பின்
விடவாள் எயிறு; அன்று எனின்
    என்னை வெகுண்டு, மாலை
அட, வாள் உருவிக்கொடு
    தோன்றியது ஆகும். அன்றே.
134

உரை
   
 
3298.தாது உண் சடிலத்
    தலைவைத்தது, தண் தரங்கம்
மோதும் கடலிற்கு இடை
    முந்து பிறந்த போதே
ஓதும் கடுவைத் தன்
    மிடற்றின் ஒளித்த தக்கோன்,
‘ஈதும் கடுவாம் ‘என
    எண்ணிய எண்ணம் அன்றோ.
135

உரை
   
 
3299.உரும் ஒத்த வலத்து உயிர்
    நுங்கிய திங்கள் ஓடித்
திருமு இச்சிறு மின் பிறை,
    தீமை குறைந்தது இல்லை!
கருமைக் கறை நெஞ்சினின்
    நஞ்சு கலந்த பாம்பின்
பெருமைச் சிறுமைக்கு ஒரு
    பெற்றி குறைந்தது உண்டோ?
136

உரை
   
 
இராவணன் பிறையை அகற்றி இருளைத் தருக எனல்

3300.‘கன்னக் கனியும் இருள் தன்னையும்
    காண்டும்; அன்றே
முன்னைக் கதிர் நன்று; இது
    அகற்றுதிர்; முன்பு சான்ற
என்னைச் சுடும் என்னின், இவ்
    ஏழ் உலகத்தும் வாழ்வோர்
பின்னைச் சிலர் உய்வர் என்று
    அங்கு ஒரு பேச்சும் உண்டோ? ‘
137

உரை
   
 
இருள் வருணணை(கவிக் கூற்று) (3301-3302)

3301.ஆண்டு அப்பிறை நீங்கலும்,
    எய்தியது அந்தகாரம்;
தீண்டற்கு எளிதாய்ப் பல
    தேய்ப்பன தேய்க்கல் ஆகி,
வேண்டில் கரபத்திரத்து
    ஈர்ந்து விழுத்தல் ஆகிக்
காண்டற்கு இனிது ஆய்ப் பல
    கந்து திரட்டல் ஆகி.
138

உரை
   
 
3302.முருடு ஈர்ந்து உருட்டற்கு எளிது
    என்பது என்? முற்றும் முற்றிப்
பொருள் தீங்கு இல் கேள்விச்
    சுடர் புக்கு வழங்கல் இன்றிக்
குருடு ஈங்கு இது என்னக்
    குறிக்கொண்டு, கண்ணோட்டம் குன்றி,
அருள் தீர்ந்த நெஞ்சின் கரிது
    என்பது அவ் அந்தகாரம்.
139

உரை
   
 
இருளின் தோற்றம் கண்டு இராவணன் கூறுதல்(3303,3304)

3303.விள்ளாது செறிந்து இடை
    மேல் உற வீங்கி, எங்கும்
நள்ளா இருள் வந்து அகல்
    ஞாலம் விழுங்கலோடும்,
‘எள்ளா உலகு யாவையும்
    யாவரும் வீவது என்பது
உள்ளாது, உமிழ்ந்தான்
    விடம் உண்ட ஒருத்தன் ‘என்றான்.
140

உரை
   
 
3304.வேலைத் தலை வந்து ஒருவன்
    வலியால் விழுங்கும்
ஆலத்தின் அடங்குவது அன்று இது;
    அறிந்து உணர்ந்தேன்.
ஞாலத்தொடு விண்முதல் யாவையும்
    நாவின் நக்கும்
காலக் கனல் கார்விடம் உண்டு
    கறுத்தது அன்றே.
141

உரை
   
 
சீதையின் உருவெளிப்பாடு கண்ட
இராவணன் கூறுதல் (3305-3308)

3305.அம்பும் அனலும் நுழையாக்
    கன அந்தகாரத்து
உம்பர் மழை கொண்டு, அயல்
    ஒப்பு அரிது ஆய துப்பின்
கொம்பர், குரும்பைக் குலம்
    கொண்டது, திங்கள் தாங்கி,
வெம்பும் தமியேன் முன்,
    விளக்கு எனத் தோன்றும் அன்றே.
142

உரை
   
 
3306.மருள் ஊடு வந்த மயக்கோ!
    மதி மற்றும் உண்டோ!
தரெுளாது, இது என்னோ?
    திணி மை இழைத்தாலும் ஒவ்வா
இருளூடு இரு குண்டலம்
    கொண்டும் இருண்ட நீலச்
சுருேளாடும் வந்து ஒர்
    சுடர் மா மதி தோன்றும் அன்றே.
143

உரை
   
 
3307.புடைகொண்டு எழு கொங்கையும்
    அல்குலும் புல்கி நிற்கும்
இடை கண்டிலம்; அல்லது
    எல்லா உருவும் தரெிந்தாம்;
விடம் நுங்கிய கண் உடையார்
    இவர் மெல்ல மெல்ல
மடம் மங்கையராய் என்
    மனத்தவர் ஆயினாரே.
144

உரை
   
 
3308.பண்டே உலகு ஏழினும் உள்ள
    படைக் கணாரைக்
கண்டேன்; இது போல்வது ஒர்
    பெண் உருக் கண்டிலேனால்;
உண்டே எனின் வேறு இனி
    எங்கை உணர்த்தி நின்ற
வண்டு ஏறு கோதை மடவாள்
    இவள் ஆகும் அன்றே.
145

உரை
   
 
இராவணன் சூர்ப்பணகையை அழைத்துவரக் கட்டளையிடுதல்

3309.பூண்டு இப்பிணி யான் உறுகின்றது
    தான் பொறாதாள்,
தேண்டிக் கொடுவந்தனள்; செய்வது
    ஒர் மாறும் உண்டோ!
காண்டற்கு இனியாள் உருக்
    கண்டவட் கேட்கும் ஆற்றால்
ஈண்டு இப்பொழுதே விரைந்து
    எங்கையைக் கூவுக என்றான்.
146

உரை
   
 
சூர்ப்பணகை இராவணன்பால் வருதல்

3310.என்றான்; எனலும், கடிது
    ஏகினர் கூவும் எல்லை,
வன் தாள் நிருதக் குலம் வேர் அற
    மாய்த்தல் செய்வாள்,
ஒன்றாத காமக்கனல்
    உள் தறெலோடும் நாசி
பொன் தாழ் குழை தன்னொடும்
    போக்கினள் போய்ப் புகுந்தாள்.
147

உரை
   
 
இராவணனுக்கும் சூர்ப்பணகைக்கும் இடையே நிகழ்ந்த உரையாடல் (3311-3316)

3311.பொய் நின்ற நெஞ்சில்
    கொடியாள் புகுந்தாளை நோக்கி,
நெய் நின்ற கூர் வாளவன்,
    நேர் உற நோக்கு நங்காய்!
மை நின்ற வாள் கண் மயில் நின்று
    என வந்து என் முன்னர்
இந்நின்றவள் ஆம் கொல்
    இயம்பிய சீதை? என்றான்.
148

உரை
   
 
3312.‘செந்தாமரைக் கண்ணொடும்
    செங்கனி வாயினோடும்
சந்து ஆர் தடம் தோெளாடும்
    தாழ் தடக் கைகேளாடும்
அம் தார் அகலத்தொடும்
    அஞ்சனக் குன்றம் என்ன
வந்தான் இவன், ஆகும் அவ்
    வல் வில் இராமன் ‘என்றாள்.
149

உரை
   
 
3313.பெண் பால் உரு நான் இது
    கண்டது; பேதை! நீ ஈண்டு
எண்பாலும் இலாதது ஒர்
    ஆண் உரு என்றி; என்னே!
கண் பால் உறும் மாயை
    கவற்றுதல் கற்ற நம்மை
மண் பாலவரே கொல்!
    விளைப்பவர் மாயை? என்றான்.
150

உரை
   
 
3314.‘ஊன்றும் உணர்வு அப்புறம்
    ஒன்றினும் ஓடல் இன்றி,
ஆன்றும் உளது ஆம் நெடிது
    ஆசை கனற்ற நின்றாய்க்கு
ஏன்று உன் எதிரே விழி நோக்கும்
    இடங்கள் தோறும்
தோன்றும் அனையாள்; இது
    தொல் நெறித்து ஆகும் ‘என்றாள்.
151

உரை
   
 
3315.அன்னாள் அது கூற,
    அரக்கனும், ‘அன்னது ஆக;
நின்னால் அவ் இராமனைக்
    காண்குறும் நீர் என்? ‘என்றான்;
‘எந்நாள் அவன் என்னை இத்
    தீர்வு அரும் இன்னல் செய்தான்,
அந்நாள் முதல் யானும்
    அயர்த்திலன் ஆகும் ‘என்றாள்.
152

உரை
   
 
3316.‘ஆம்! ஆம்! அது அடுக்கும்; என்
    ஆக்கையொடு ஆவி நைய
வேமால்; வினையேற்கு இனி
    என் விடிவாகும்? ‘என்னக்
‘கோமான் உலகுக்கு ஒரு நீ
    குறைகின்றது என்னே?
பூ மாண் குழலாள் தனை
    வவ்வுதி போதி ‘என்றாள்.
153

உரை
   
 
சூர்ப்பணகை நீங்க இராவணன் வருந்தல்

3317.என்றாள், அகன்றாள்; அவ்
    அரக்கனும் ஈடு அழிந்தான்;
ஒன்றானும் உணர்ந்திலன்,
    ஆவி உலைந்து சோர்ந்தான்;
நின்றாரும் நடுங்கினர்;
    நின்று உள நாளினாலே
பொன்றாது உளன் ஆயினன்
    அத்துணை; போலும் அன்றே.
154

உரை
   
 
இராவணன் சந்திரகாந்த மண்டபம் அமைக்கும்படி சொல்லல்

3318.இறந்தார் பிறந்தார் என
    இன் உயிர் பெற்ற மன்னன்,
மறந்தான் உணர்ந்தான், அவண்
    மாடு நின்றாரை நோக்கிக்
“‘கறந்தால் என நீர்தரு
    சந்திர காந்தத்தாலே
சிறந்து ஆர் மணி மண்டபம்
    செய்க‘‘ எனச் செப்புக ‘என்றான்.
155

உரை
   
 
தயெ்வத்தச்சன் சந்திரகாந்த மண்டபம்
அமைத்தல் (3319-3320)

3319.வந்தான் நெடு வான் உறை
    தச்சன் மனத்து உணர்ந்தான்,
சிந்தா வினை அன்றியும்,
    கைவினையாலும் செய்தான்.
அம் தாம நெடுந்தறி
    ஆயிரத்தால் அமைந்த
சந்து ஆர் மணி மண்டபம்
    தாமரையோனும் நாண.
156

உரை
   
 
3320.காந்தம் அமுதின் துளி
    கால்வன கால மீனின்,
வேந்தன் ஒளி அன்றியும்
    மேலொடு கீழ் விரித்தான்,
பூ தனெ்றல் புகுந்து உறை
    சாளரமும் புனைந்தான்,
ஏந்தும் மணிக் கற்பகச்
    சீதளக் கா இழைத்தான்.
157

உரை
   
 
இராவணன் மண்டபம் காண வருதல்

3321.ஆணிக்கு அமை பொன் கை
    மணிச் சுடர் ஆய் விளக்கம்,
சேண் உற்று இருள் சீப்பன
    தயெ்வ மடந்தைமார்கள்
பூணிற் பொலிவார் புடை ஏந்திடப்
    பொங்கு தோளான்,
மாணிக்க மானத்திடை
    மண்டபம் காண வந்தான்.
158

உரை
   
 
இருள் நீங்குதல் (3322-3323)

3322.அல் ஆயிர கோடி
    அடுக்கியது ஒத்ததேனும்,
நல்லார் முகம் ஆம் நளிர் வால்
    நிலவு ஈன்ற நாமப்
பல் ஆயிர கோடி பனி சுடர்
    ஈன்ற; திங்கள்
எல்லாம் உடன் ஆய்
    இருள் ஓடி இரிந்தது அன்றே.
159

உரை
   
 
3323.பொற்பு உற்றன மா மணி
    ஒன்பதும், பூவின் நின்ற
கற்பத் தருவின் கதிர் நாள்
    நிழல் கற்றை நாற,
அல் பற்று அழியப்
    பகல் ஆக்கியதால்; அருக்கன்
நிற்பத் தெளிகின்றது
    நீள்சுடர் மேன்மை அன்றோ!
160

உரை
   
 
இராவணன் மண்டபத்தை அடைதல்

3324.ஊறு ஓசை முதல்
    பொறி யாவையும் ஒன்றின் ஒன்று
தேறா நிலை உற்றது ஓர்
    சிந்தையன், செய்கை ஓரான்,
வேறு ஆய பிறப்பு இடை
    வேட்கை விசித்தது ஈர்ப்ப
மாறு ஓர் உடல் புக்கு என
    மண்டபம் வந்து புக்கான்.
161

உரை
   
 
இராவணன் மலர்ச்சேக்கை சேர்தல்

3325.தண்டல் இல் தவம் செய்வோர்
    தாம் வேண்டின தாயின் நல்கும்
மண்டல மகர வேலை,
    அமுதொடும் வந்தது என்னப்
பண் தரு சுரும்பு சேரும்
    பசு மரம் உயிர்த்த பைம் பொன்
தண் தளிர் மலரில் செய்த
    சீதளச் சேக்கை சார்ந்தான்.
162

உரை
   
 
தனெ்றல் வருதல்

3326.நேர் இழை மகளிர் கூந்தல்
    நிறை நறை வாசம் நீந்தி,
வேரி அம் சரளச் சோலை
    வேனிலான் விருந்து செய்ய,
ஆர்கலி அழுவம் தந்த
    அமிழ்து என, ஒருவர் ஆவி
தீரினும் உதவற்கு ஒத்த
    தனெ்றல், வந்து இறுத்தது அன்றே.
163

உரை
   
 
இராவணன் தனெ்றலால் வருந்திக் கூறுதல் (3327-3330)

3327.சாளரத்து ஊடு வந்து தவழ்தலும்,
    தரித்தல் தேற்றான்,
நீள் அரத்தங்கள் சிந்தி,
    நெருப்பு உக நோக்கும் நீரான்,
வாழ் மனைப் புகுந்தது ஆங்கு ஓர்
    மாசுணம் வரக் கண்டன்ன
கோள் உறக் கொதித்து விம்மி
    உழையரைக் கூவிச் சொன்னான்.
164

உரை
   
 
3328.‘கூவலின் உயிர்த்த சில் நீர்
    உலகினைக் குப்புற்று என்னத்
தேவரின் ஒருவன் என்னை
    இன்னலும் செயத் தக்கானோ?
ஏவலின் அன்றித் தனெ்றல்
    எவ் வழி எய்திற்று? ‘என்னாக்
காவலின் உழையர் தம்மைக்
    கொணருதிர் கடிதின் என்றான்.
165

உரை
   
 
3329.அவ்வழி உழையர் ஓடி,
    ஆண்டு அவர்க் கொணர்தலோடும்,
வெவ்வழி அமைந்த செங்கண்
    வெரு உற நோக்கி, வெய்யோன்,
‘செவ்வழி தனெ்றலாற்குத்
    திருத்தினீர் நீர்கொல்? ‘என்ன,
‘இவ்வழி இருந்த காலைத்
    தடை அவற்கு இல்லை ‘என்றார்.
166

உரை
   
 
3330.‘வேண்டிய நினைந்து செய்வான்
    விண்ணவர் வெருவார் என்றால்,
மாண்டது போலும் கொள்கை,
    யான் உடை வன்மை; வல்லைத்
தேண்டினீர், திசைகள் தோறும்
    சேண் உற விசையின் செல்குற்று,
ஈண்டு இவன் தன்னைப் பற்றி
    இருஞ்சிறை இடுதிர் ‘என்றான்.
167

உரை
   
 
இராவணன் அமைச்சரை அழைமின் எனல்

3331.‘காற்றினோன் தன்னை வாளா
    முனிதலின், கண்டது இல்லை;
கூற்றும் வந்து என்னை இன்னே
    குறுகுமால்; குறித்த ஆற்றால்
வேல் தரும் கருங்கண் சீதை
    மெய் அருள் புனையேன் என்றால்,
ஆற்றலால் அடுத்தது எண்ணும்
    அமைச்சரைக் கொணர்திர் ‘என்றான்.
168

உரை
   
 
அமைச்சர் வருதல்

3332.ஏவின சிலதர் ஓடி
    ஏ எனும் துணையில், எங்கும்
கூவினர்; கூவலோடும் குறுகினர்,
    கொடித் திண் தேர்மேல்
மாவினில் சிவிகை தன்மேல்
    மழை மதம் களிற்றின்; வையத்
தேவரும் வானம் தன்னில்
    தேவரும் சிந்தை சிந்த.
169

உரை
   
 
இராவணன் மாரீசன் இருக்கையடைதல்

3333.வந்த மந்திரியரோடு மாசு அற
    மனத்தின் எண்ணிச்
சிந்தையில் நினைந்த செய்யும்
    செய்கையன், தெளிவு இல் நெஞ்சன்
அந்தரம் செல்வது ஆண்டு ஓர்
    விமானத்தில், ஆரும் இன்றி,
இந்தியம் அடக்கி நின்ற
    மாரீசன் இருக்கை சேர்ந்தான்.
170

உரை
   
 
மாரீசன் இராவணனை உபசரித்து அவன் வந்த காரியம் வினவுதல் (3334-3335)

3334.இருந்த மாரீசன், வந்து அவ்
    இராவணன் எய்தலோடும்,
பொருந்திய பயத்தன், சிந்தை
    பொருமுற்று, வெருவுகின்றான்,
கருந்தட மலை அன்னானை
    எதிர்கொண்டு, கடன்கள் யாவும்
திருந்திடச் செய்து, செவ்வித்
    திருமுகம் நோக்கிச் செப்பும்.
171

உரை
   
 
3335.‘சந்த மலர்த் தண்
    கற்பக நீழல் தலைவற்கும்
அந்தகனுக்கும் அஞ்ச அடுக்கும்
    அரசு ஆள்வாய்!
இந்த வனத்து என் இன்னல்
    இருக்கைக்கு எளியோரின்
வந்த கருத்து என்? சொல்லுதி ‘
    என்றான் மருள்கின்றான்.
172

உரை
   
 
இராவணன் மாரீசனிடம் தான் வந்த
காரியம் கூறுதல் (3336-3339)

3336.ஆனது அனைத்தும்; ஆவி தரித்தேன்,
    அயர்கின்றேன்;
போனது பொற்பும்; மேன்மையும்
    அற்றேன் புகழோடும்;
யான் அது உனக்கு இன்று எங்ஙன்
    உரைக்கேன்; இனி என்? ஆ!
வானவருக்கும் நாண அடுக்கும்
    வசை அம்மா.
173

உரை
   
 
3337.வன்மை தரித்தோர் மானிடர்;
    மற்று அங்கு அவர், வாளால்
நின் மருகிக்கும் நாசி இழக்கும்
    நிலை நேர்ந்தார்;
என் மரபுக்கும் நின் மரபுக்கும்
    இதன்மேல் ஓர்
புன்மை தரெிப்பின் வேறு இனி
    மற்று என்? புகழ் வேலோய்.
174

உரை
   
 
3338.திருகு சினத்தார், முதிர மலைந்தார்,
    சிறியோர் நாள்
பருகினன் என்றால் வென்றி நலத்தில்
    பழி அன்றோ?
இருகை சுமந்தாய்! இனிதின் இருந்தாய்!
    இகல் வேல் உன்
மருகர் உலந்தார்; ஒருவன் மலைந்தான்
    வரி வில்லால்.
175

உரை
   
 
3339.‘வெப்பு அழியாது என் நெஞ்சும்
    உலந்தேன்; விளிகின்றேன்;
ஒப்பு அழிவு என்றே போர் செயல்
    ஒல்லேன்; உடன் வாழும்
துப்பு அழி செவ்வாய் வஞ்சியை
    வௌவத் துணை கொண்டிட்டு,
இப் பழி நின்னால் தீரிய
    வந்தேன். இவண் ‘என்றான்.
176

உரை
   
 
இராவணன்பால் மாரீசன் கூறுதல் (3340-3351)

3340.இச் சொல் அனைத்தும் சொல்லி,
    அரக்கன் எரிகின்ற
கிச்சின் உருக்கு இட்டு உய்த்தனன்
    என்னக் கிளராமுன்,
சிச்சி எனத் தன் மெய்ச் செவி
    பொத்தித் தரெுமந்தான்,
அச்சம் அகற்றிச் செற்ற மனத்தோடு
    அறைகின்றான்.
177

உரை
   
 
3341.மன்னா! நீ நின் வாழ்வை
    முடித்தாய்! மதி அற்றாய்,
உன்னால் அன்று ஈது ஊழ்வினை
    என்றே உணர்கின்றேன்;
இன்னாதேனும் யான் இது
    உரைப்பன் இதம் என்னச்
சொன்னான் அன்றே அன்னவனுக்குத்
    துணிவு எல்லாம்.
178

உரை
   
 
3342.அற்ற கரத்தோடு உன் தலை
    நீயே அனல் முற்றிப்
பற்றினை உய்த்தாய்,
    பற்பல காலம் பசி கூர
உற்று உயிர் உள்ளே தேய
    உலந்தாய், பினை அன்றே
பெற்றனை செல்வம்; பின் அது
    இழந்தால் பெறலாமோ.
179

உரை
   
 
3343.திறத் திறனாலே செய்
    தவம் முற்றித் திரு உற்றாய்;
மறத் திறனாலே சொல்லுதி;
    சொல் ஆய் மறை வல்லாய்!
அறத் திறனாலே எய்தினை
    அன்றோ அது; நீயும்
புறத் திறனாலே பின்னும்
    இழக்கப் புகுவாயோ?
180

உரை
   
 
3344.நாரம் கொண்டார் நாடு கவர்ந்தார்,
    நடை அல்லா
வாரம் கொண்டார், மற்று ஒருவற்கு
    ஆய் மனை வாழும்
தாரம் கொண்டார் என்று இவர்
    தம்மைத் தருமம் தான்
ஈரும் கண்டாய்! கண்டகர் உய்ந்தார்
    எவர்? ஐயா!
181

உரை
   
 
3345.அந்தரம் உற்றான் அகலிகை
    பொற்பால் அழிவுற்றான்;
இந்திரன் ஒப்பார் எத்தனையோர்
    தாம் இழிபு உற்றார்?
செம் திரு ஒப்பார் எத்தனையோர்
    நின் திரு உண்பார்?
மந்திரம் அற்றார் உற்றது உரைத்தாய்,
    மதி அற்றாய்.
182

உரை
   
 
3346.செய்தாயேனும், தீவினையோடும்
    பழி அல்லால்
எய்தாது எய்தாது; எய்தின்,
    இராமன், உலகு ஈன்றான்
வைதால் அன்ன வாளிகள் கொண்டு
    உன் வழியோடும்
கொய்தான் அன்றே கொற்றம் முடித்து
    உன் குழு எல்லாம்.
183

உரை
   
 
3347.என் தான் என்னே
    எண்ணலையோ? நீ; கரன் என்பான்
நின் தானைக்கு மேல் உளன்
    என்னும் நிலை அம்மா!
தன் தானைத் திண் தேரொடு
    மாளத் தனு ஒன்றால்
கொன்றான், முற்றும் கொல்ல
    மனத்தில் குறிகொண்டான்.
184

உரை
   
 
3348.வெய்யோர் யாரே வீர
    விராதன் துணை வெய்யோர்?
ஐயோ போனான் அம்பொடும்
    உம்பர்க்கு அவன்; என்றால்,
‘உய்வார் யாரே? நம்மின் ‘எனக்
    கொண்டு, உணர்தோறும்
நையா நின்றேன்; நீ இது,
    உரைத்து நலிவாயோ?
185

உரை
   
 
3349.மாண்டார் மாண்டார்; நீ இனி மாள்வார்
    தொழில் செய்ய
வேண்டா வேண்டா; செய்திடின் உய்வான்
    விதி உண்டோ?
ஆண்டார் ஆண்டார் எத்தனை என்கேன்;
    அறம் நோனார்
ஈண்டார் ஈண்டார்; நின்றவர் எல்லாம்
    இலர் அன்றோ?
186

உரை
   
 
3350.எம்பிக்கும் என் அன்னை தனக்கும்
    இறுதிக்கு ஓர்
அம்பு உய்க்கும் போர் வில்லி தனக்கும்
    அயல் நிற்கும்
தம்பிக்கும் என் ஆண்மை தவிர்ந்தே
    தளர்கின்றேன்;
கம்பிக்கும் என் நெஞ்சு; அவன் என்றே
    கவல்கின்றேன்.
187

உரை
   
 
3351.நின்றும் சென்றும் வாழ்வன யாவும்
    நிலையாவாய்ப்
பொன்றும் என்னும் மெய்ம்மை உணர்ந்தாய்!
    புலையாள் தற்கு
ஒன்றும் உன்னாய்; என் உரை கொள்ளாய்;
    உயர் செல்வத்து
‘என்றும் என்றும் வைகுதி; ஐயா!
    இனி ‘என்றான்.
188

உரை
   
 
இராவணன் மாரீசனை முனிந்து கூறுதல் (3352-3353)

3352.‘கங்கை சடை வைத்தவனொடும்
    கயிலைவெற்பு ஓர்
அங்கையின் எடுத்த எனது
    ஆடு எழில் மணித் தோள்,
இங்கு ஒர் மனிதற்கு எளிய
    என்றனை ‘எனத் தன்
வெம் கண் எரியப் புருவம்
    மீது உற விடைத்தான்.
189

உரை
   
 
3353.‘நிகழ்ந்ததை நினைத்திலை; என்
    நெஞ்சின் நிலை அஞ்சாது
இகழ்ந்தனை; எனக்கு இளைய
    நங்கை முகம் எங்கும்
அகழ்ந்த வரை ஒப்பு உற
    அமைத்தவரை ஐயா!
புகழ்ந்தனை; தனிப்பிழை;
    பொறுத்தனென் இது ‘என்றான்.
190

உரை
   
 
மாரீசன் இராவணனிடம் மீட்டும் கூறல் (3354-3360)

3354.தன்னை முனிவுற்ற தறுகண்
    தகவு இலோனைப்
பின்னை முனிவுற்றிடும் எனத்
    தவிர்தல் பேணான்,
‘உன்னை முனிவுற்று, உன
    குலத்தை முனிவுற்றாய்,
என்னை முனிவுற்றிலை; இது
    என்? ‘என இசைத்தான்.
191

உரை
   
 
3355.‘எடுத்த மலையே நினையின்,
    “ஈசன் இகல் வில்லாய்
வடித்த மலை, நீ இது
    வலித்தி ‘‘ என வாரிப்
பிடித்து அமலை நாண் இடை
    பிணித்து, ஒருவன் மேல் நாள்
ஒடித்த மலை, அண்டம்
    முகடு உற்ற மலையன்றோ? ‘
192

உரை
   
 
3356.‘யாதும் அறியாய்; உரைகொளாய்;
    இகல் இராமன்
கோதை புனையா முன் உயிர்
    கொள்ளைபடும் அன்றே!
பேதை மதியால் “இஃது ஒர்
    பெண் உருவம் “ என்றாய்!
சீதை உருவோ? நிருதர்
    தீவினை அது அன்றோ?
193

உரை
   
 
3357.‘உஞ்சு பிழையாய்
    உறவினோடும் என உன்னா,
நெஞ்சு பறை மோதும்;
    அது நீ நினையகில்லாய்;
அஞ்சும் எனது ஆர் உயிர்;
    அறிந்து அருகு நின்றார்
நஞ்சு நுகர்வாரை “இது நன்று “
    எனலும் நன்றோ? ‘
194

உரை
   
 
3358.ஈசன் முதல் மற்றும்
    இமையோர் உலகும் மற்றைத்
தேசம் முதல் முற்றும்
    ஒர் இமைப்பின் உயிர் தின்ப,
கோசிகன் அளித்த
    கடவுள் படை, கொதிப்போடு
ஆசு இல, கணிப்பு இல,
    இராமன் அருள் நிற்ப.
195

உரை
   
 
3359.ஆயிரம் அடல் கை
    உடையானை மழுவாளால்
ஏ எனும் உரைக்குள்
    உயிர் செற்ற எதிரில்லான்
மேய விறல் முற்றும்,
    வரி வெம் சிலையினோடும்
தாயவன் வலி தகைமை
    யாம் உறு தகைத்தோ.
196

உரை
   
 
3360.வேதனை செய் காம விடம்
    மேலிட மெலிந்தாய்;
தீது உரை செய்தாய்; இனைய
    செய்கை சிதைவு அன்றோ?
மாதுலனும் ஆய், மரபின்
    முந்தை உற வந்தேன்,
ஈது உரைசெய்தேன்; அதனை
    எந்தை! தவிர்க என்றன்.
197

உரை
   
 
இராவணன் மீட்டும் மாரீசனொடு சினந்து கூறுதல் (3361-3364)

3361.என்ன உரை அத்தனையும்
    எத்தனையும் எண்ணிச்
சொன்னவனை ஏசின
    அரக்கர் பதி சொன்னான்;
அன்னை உயிர் செற்றவனை
    அஞ்சி உறைகின்றாய்
உன்னை ஒருவற்கு ஒருவன்
    என்று உணர்கை நன்றோ.
198

உரை
   
 
3362.திக்கயம் ஒளிப்ப, நிலை
    தேவர் கெட, வானம்
புக்கு, அவர் இருக்கை
    புகைவித்து, உலகம் யாவும்
சக்கரம் நடத்தும் எனையோ
    தயரதன் தன்
மக்கள் நலிகிற்பர்? இது,
    நன்று; வலி அன்றோ?
199

உரை
   
 
3363.மூவுலகினுக்கும் ஒரு நாயகம்
    முடித்தேன்;
மேவலர் கிடைக்கின் இதன்மேல்
    இனியது உண்டோ?
ஏவல் செயகிற்றி; எனது
    ஆணை வழி எண்ணிக்
காவல் செய் அமைச்சர்
    கடன் நீ கடவது உண்டோ?
200

உரை
   
 
3364.‘மறுத்தனை எனப் பெறினும்,
    நின்னை வடி வாளால்
ஒறுத்து, மனம் உற்றது
    முடிப்பென்; ஒழிகல்லேன்;
வெறுப்பன கிளத்தல் உறும்
    இத்தொழிலை விட்டு, என்
குறிப்பின் வழி நிற்றி,
    உயிர் கொண்டு உழலின் ‘என்றான்.
201

உரை
   
 
மீட்டும் மாரீசன் கூறல் (3365-3366)

3365.அரக்கன் அஃது உரைத்தலோடும்
    அறிந்தனன், அடங்கி, ‘நெஞ்சம்
தருக்கினர் கெடுவர் ‘என்றல்,
    தத்துவ நிலையிற்று, அன்றோ
‘செருக்குநர்த் தீர்த்தும் என்பார்
    தம்மின் ஆர் செருக்கர் ‘என்னா
உருக்கிய செம்பின் உற்ற
    நீர் என உரைக்கல் உற்றான்.
202

உரை
   
 
3366.‘உன் வயின் உறுதி நோக்கி,
    உண்மையின் உணர்த்தினேன்; மற்று
என் வயின் இறுதி நோக்கி
    அச்சத்தால் இசைத்தேன் அல்லேன்;
நன்மையும் தீமை அன்றே
    நாசம் வந்து உற்றபோது;
புன்மையின் நின்ற நீராய்!
    செய்வது புகல்தி என்றான்.
203

உரை
   
 
இராவணன் மாரீசனிடம் யான் சீதையை
அடைய நீ உதவுக எனல்

3367.என்றலும் எழுந்து புல்லி,
    ஏறிய வெகுளி நீங்கிக்
‘குன்று எனக் குவிந்த தோளாய்!
    மாரன் வேள் கொதிக்கும் அம்பால்
பொன்றலின், இராமன் அம்பால்
    பொன்றலே புகழ் உண்டு அன்றோ;
தனெ்றலைப் பகைக்கச் செய்த
    சீதையைத் தருதி ‘என்றான்.
204

உரை
   
 
மாரீசன், வினவுதல்

3368.ஆண்டையான் அனைய கூற,
    ‘அரக்கர் ஓர் இருவரோடும்
பூண்ட என் மானம் தீரத்
    தண்டகம் புக்க காலைத்
தூண்டிய சரங்கள் பாயத்
    துணைவர் பட்டு உருள அஞ்சி,
மீண்ட யான், சென்று செய்யும்
    வினை என் கொல்? விளம்புக ‘என்றான்.
205

உரை
   
 
இராவணன் சீதையை மாயையால் கவர்வோம் எனல்

3369.ஆயவன் அனைய கூற,
    அரக்கர்கோன், ‘ஐய! நொய்து உன்
தாயை ஆர் உயிர் உண்டானை
    யான் கொலச் சமைந்து நின்றேன்;
“போய் ஐயா! புணர்ப்பது என்னை? “
    என்பது பொருந்திற்று ஒன்றோ?
மாயையால் வஞ்சித்து அன்றோ
    வௌவுதல் அவளை ‘என்றான்.
206

உரை
   
 
மாரீசன் சீதையை மறநெறியால் கவர்க எனல்

3370.‘புறத்து இனி உரைப்பது என்னே?
    புரவலன் தேவி தன்னைத்
திறத்து உழி அன்றி வஞ்சித்து
    எய்துதல் சிறுமைத்து ஆகும்;
அறத்து உளது ஒக்கும் அன்றே!
    அமர்த்தலை வென்று கொண்டு, உன்
மறத் துறை வளர்த்தி மன்ன! ‘
    என்ன மாரீசன் சொன்னான்.
207

உரை
   
 
இராவணன் சீதையை மாயையால் கவர்தலே தகும் எனல்

3371.ஆனவன் உரைக்க, நக்க
    அரக்கர் கோன், ‘அவரை வெல்லத்
தானையும் வேண்டுமோ? என்
    தடக்கை வாள் தக்கது அன்றோ!
ஏனையர் இறக்கில், தானும்
    தமியளாய், இறக்கும் அன்றே
மான் அவள்; ஆதலாலே
    மாயையின் வலித்தும் ‘என்றான்.
208

உரை
   
 
மாரீசன் நினைதல்

3372.“‘தேவியைத் தீண்டா முன்னம்,
    இவன் தலை சரத்தின் சிந்திப்
போம் வகை புணர்ப்பன் ‘என்று
    புந்தியால் புகல்கின்றேற்கும்,
ஆம் வகை ஆயிற்று இல்லை;
    ஆர் விதி விளைவை ஓர்வார்?
ஏவிய செய்வது அல்லால்
    இல்லை வேறு ஒன்று‘‘ என்று எண்ணா.
209

உரை
   
 
இராவணன் கூறியபடி செய்ய இசைந்து மாரீசன் போதல்

3373.‘என்ன மா மாயம் யான் மற்று
    இயற்றுவது? இயம்புக ‘என்றான்;
‘பொன்னின் மான் ஆகிப் புக்கு, அப்
    பொன்னை மால் புணர்த்துக ‘என்ன,
‘அன்னது செய்வென் ‘என்னா
    மாரீசன் அமைந்து போனான்;
மின்னும் வேல் அரக்கர் கோனும்,
    வேறு ஒரு நெறியில் போனான்.
210

உரை
   
 
கவிக்கூற்று

3374.மேல் நாள் அவர் வில் வலி கண்டமையால்
தானாக அமைந்து சமைந்திலனால்;
‘மான் ஆகுதி ‘என்றவன் வாள் வலியால்
போனான் மனமும் செயலும் புகல்வாம்.
211

உரை
   
 
மாரீசன் மனநிலை

3375.வெம் சுற்றம் நினைந்து உகும்; வீரரை வேறு
அஞ்சு உற்று மறுக்கு உறும்; ஆழ் குழி நீர்
நஞ்சு உற்றுழி மீனின் நடுக்கு உறுவான்
நெஞ்சு உற்றது ஒர் பெற்றி நினைப்பு அரிதால்.
212

உரை
   
 
மாரீசன் இராமனிருக்கும் வனத்தை அடைதல்

3376.அக்காலமும் வேள்வியின் அன்று தொடர்ந்து
எக்காலும் நலிந்தும் ஒர் ஈறு பெறான்
முக்காலின் முடிந்திடுவான் முயல்வான்
புக்கான் அவ் இராகவன் வைகு புனம்.
213

உரை
   
 
மாரீசன் மானுருவம் கொண்டு செல்லுதல்

3377.தன் மானம் இலாத தயங்கு ஒளி சால்
மின் மானமும் மண்ணும் விளங்குவது ஓர்
பொன் மான் உருவம் கொடு போயினனால்
நன் மான் அனையாள் தனை நாடுறுவான்.
214

உரை
   
 
மாயமானைக் கலைமான் முதலியவை நெருங்குதல்

3378.கலை மான் முதலாயின கண்ட எலாம்
அலை மானுறும் ஆசையின் வந்தனவால்;
நிலை மா மன வஞ்சனை நேயம் இலா
விலை மாதர் கண் யாரும் விழுந்து என.
215

உரை
   
 
மலர் கொய்து நின்ற சீதை மாயமானைக் கண்டு விரும்புதல் (3379-3381)

3379.பொய் ஆம் என ஓது புறஞ் சொலினால்
நையா இடை நோவ நடந்திடுவாள்
வைதேவி தன் வால் வளை முன்கை எனும்
கொய்யா மலரால் மலர் கொய்குறுவாள்.
216

உரை
   
 
3380.உண்டாகிய கேடு உடையார் துயில்வாய்
எண் தானும் இயைந்து இயையா உருவம்
கண்டார் எனல் ஆம் வகை கண்டனளால்;
பண்டு ஆரும் உறா இடர் பாடுறுவாள்.
217

உரை
   
 
3381.காணா இது கைதவம் என்று உணராள்
பேணாத நலம் கொடு பேணினளால்;
வாணாள் அவ் இராவணன் மாளுதலால்
வீழ் நாளில் அறம் புவி மேவுதலால்.
218

உரை
   
 
சீதை இராமனை அடைதல்

3382.நெற்றிப் பிறையாள் முனம் நின்றிடலும்
முற்றிப் பொழி காதலின் முந்துறுவாள்
பற்றித் தருக என்பென் எனப் பதையா
வெற்றிச் சிலை வீரனை மேவினளால்.
219

உரை
   
 
சீதை பொன் மானின் இயல்பை இராமனிடம் கூறல்

3383.‘ஆணிப் பொனின் ஆகியது ஆய் கதிரால்
சேணில் சுடர்கின்றது திண் செவி கால்
மாணிக்க மயத்து ஒரு மான் உளதால்;
காணத் தகும் ‘என்றனள் கைதொழுவாள்.
220

உரை
   
 
இராமன் பொன்மானைக் காண விரும்புதல்

3384.இம்மான் இந்நிலத்தினில் இல்லை எனா
எம்மான் இது? எனச் சிறிது எண்ணல் செயான்
செம் மான் அவள் சொல் கொடு தேம் மலரோன்
அம்மானும் அருத்தியன் ஆயினனால்.
221

உரை
   
 
இலக்குவன் இராமனிடம் அது மாயமான் என்றல் (3385-3386)

3385.ஆண்டு அங்கு இளையோன் உரையாடினனால்;
வேண்டும் எனல் ஆம் விளைவு அன்று இது எனாப்
‘பூண் துஞ்சு பொலம் கொடி! போய் அது நாம்
காண்டும் ‘என வள்ளல் கருத்து உணர்வான்.
222

உரை
   
 
3386.காயம் கனகம்; மணி கால் செவி வால்;
பாயும் உருவோடு இது பண்பு எனலால்
மாயம் எனல் அன்றி மனக் கொளவே
ஏயும் இறை ஐயுறவு என்ற அளவே.
223

உரை
   
 
இலக்குவன் கூறியது கேட்டு, இராமன் இயம்பல் (3387-3389)

3387.நில்லா உலகின் நிலை நேர்மையினால்
வல்லாரும் உணர்ந்திலர்; மன் உயிர்தாம்
பல் ஆயிர கோடி பரந்து உளவால்;
இல்லாதன இல்லை இளங்குமரா!
224

உரை
   
 
3388.என் என்று நினைந்தது? இழைத்து உளம் நம்
கன்னங்களின் வேறு உள காணுதுமால்;
பொன்னின் ஒளி மேனி பொருந்திய ஏழ்
அன்னங்கள் பிறந்தது அறிந்திலையோ!
225

உரை
   
 
இராமலக்குவர் உரையாடலால் சீதை வருந்தல்

3389.‘முறையும் முடிவும் இல மொய் உயிர் ‘என்று
இறைவன் இளையானொடு இயம்பினனால்;
‘பறையும் துணை அன்னது பல் நெறி போய்
மறையும் ‘என ஏழை வருந்தினளால்.
226

உரை
   
 
இராமன் சீதையொடு சென்று மானைக் காணுதல்

3390.அனையவள் கருத்தை உன்னா,
    அஞ்சனக் குன்றம் அன்னான்,
‘புனை இழை காட்டு அது ‘என்று
    போயினான்; பொறாத சிந்தைக்
கனை கழல் தம்பி பின்பு
    சென்றனன்; கடக்க ஒண்ணா
வினை என வந்து நின்ற
    மான், எதிர் விழித்தது அன்றே.
227

உரை
   
 
இராமன் மானைக் கொண்டாடுதலும் அதற்குக் காரணமும்

3391.நோக்கிய மானை நோக்கி,
    நுதி உடை மதியின் ஒன்றும்
தூக்கிலன், ‘நன்று இது ‘என்றான்;
    அதன் பொருள் சொல்லல் ஆகும்;
சேக்கையின் அரவு நீங்கிப்
    பிறந்தது, தேவர் செய்த
பாக்கியம் உடைமை அன்றோ!
    அன்னது பழுது போமோ?
228

உரை
   
 
இராமன் இலக்குவனிடம் மானின் இயல்பு பேசுதல் (3392-3393)

3392.என் ஒக்கும் என்னல் ஆகும்
    இளையவ! இதனை நோக்காய்!
தன் ஒக்கும் என்பது அல்லால்
    தனை ஒக்கும் உவமை உண்டோ?
பல் நக்க தரளம் ஒக்கும்;
    பசும்புல் மேல் படரும் மெல் நா
மின் ஒக்கும்; செம்பொன் மேனி
    வெள்ளியின் விளங்கும் புள்ளி.
229

உரை
   
 
3393.வரி சிலை மறை வலோனே!
    மான் இதன் வடிவை உற்ற
அரிவையர் மைந்தர் யாரே
    ஆதரம் கூர்கிலாதார்?
உருகிய மனத்த ஆகி,
    ஊர்வன பறப்ப யாவும்
விரி சுடர் விளக்கம் கண்ட
    விட்டிலின் வீழ்வ காணாய்.
230

உரை
   
 
இலக்குவன், இராமன்பால், மானை விரும்பாது மீள்வதே நலம் எனல்

3394.ஆரியன் அனைய கூற,
    அன்னது தன்னை நோக்கிச்
‘சீரியது அன்று இது ‘என்று,
    சிந்தையில் தெளிந்த தம்பி,
‘காரியம் என்னை? ஈண்டுக்
    கண்டது கனக மானேல்,
வேரி அம் தரெியல் வீர!
    மீள்வது ஏ மேன்மை ‘என்றான்.
231

உரை
   
 
சீதை மானைப் பிடித்துத் தரும்படி இராமனை வேண்டுதல்

3395.அற்று அவன் பகரா முன்னம்,
    அழகனை அழகியாளும்,
‘கொற்றவன் மைந்த; மற்று இக்
    குழைவு உடை உழையை, வல்லை
பற்றினை தருதி ஆயின்,
    பதியிடை அவதி எய்தப்
பெற்றுழி இனிது உண்டாடப்
    பெறற்கு அருந்தகைமைத்து ‘என்றாள்.
232

உரை
   
 
இலக்குவன் இது மாயமான் எனல்

3396.ஐய, நுண் மருங்குல் நங்கை
    அஃது உரைசெய்ய, ஐயன்
‘செய்வென் ‘என்று அமைய, நோக்கித்
    தெளிவு உடைச் செம்மல் செப்பும்;
வெய்ய வல் அரக்கர் வஞ்சம்
    விரும்பினார் வினையின் செய்த
கைதவ மான் என்று அண்ணல்!
    காணுதி கடையின் ‘என்றான்.
233

உரை
   
 
இராமன் மானைப் பிடித்தல் தவறாகாது என்னுதல்

3397.‘மாயமேல் மடியும் அன்றே
    வாளியின்; மடிந்த போது,
காய் சினத்தவரைக் கொன்று
    கடன் கழித்தோமும் ஆதும்;
தூயதேல் பற்றிக் கோடும்;
    சொல்லிய இரண்டின் ஒன்று
தீயதே? உரைத்தி ‘என்றான்
    தேவரை இடுக்கண் தீர்ப்பான்.
234

உரை
   
 
ஆராயாது வேட்டையாடுதல் தகாது என்று இலக்குவன் கூறுதல்

3398.‘பின் நின்றார் எனையர் என்றும்
    உணர்கிலம்; பிடித்த மாயம்
என் என்றும் தெளிதல் தேற்றாம்;
    யாவது ஈது என்றும் ஓராம்;
முன் நின்ற முறையின் நின்றார்
    முனிந்துள வேட்டம் முற்றல்,
பொன் நின்ற வயிரத் தோளாய்!
    புகழுடைத் தரம் அன்று ‘என்றான்.
235

உரை
   
 
இலக்குவன் கூறியதனை இராமன் மறுத்துரைத்தல்

3399.பகை உடை அரக்கர் என்றும்,
    பலர் என்றும், பயிலும் மாயம்
மிகை உடைத்து என்றும், பூண்ட
    விரதத்தை விடுதும் என்றால்,
நகை உடைத்து ஆகும் அன்றே;
    ஆதலின், நன்று இது என்னாத்
தகை உடைத் தம்பிக்கு அந்நாள்
    சதுமுகன் தாதை சொன்னான்.
236

உரை
   
 
இலக்குவன் யானே பிடித்து வருவேன் எனல்

3400.‘அடுத்தவும் எண்ணிச் செய்தல்,
    அண்ணலே! அமைதி அன்றோ;
விடுத்து இதன் பின் நின்றார்கள்
    பலர் உளர் எனினும், வில்லால்
தொடுத்த வெம் பகழி தூவித்
    தொடர்ந்தனென், விரைந்து சென்று
படுக்குவென்; அது அன்று ஆயின்,
    பற்றினென் கொணர்வென் ‘என்றான்.
237

உரை
   
 
்சீதை, இராமன்பால் நீயே பற்றி நல்கலை போலும் என்று சினந்து செல்லுதல்

3401.ஆயிடை, அன்னம் அன்னாள்,
    அமுது உகுத்து அனைய செய்ய
வாயிடை மழலை இன்சொல்
    கிளியினில் குழறி மாழ்கி,
‘நாயக! நீயே பற்றி
    நல்கலை போலும் ‘என்னாச்
சேய் அரிக் குவளை முத்தம்
    சிந்துபு, சீறிப் போனாள்.
238

உரை
   
 
இராமன் மானைப் பிடிக்கச் செல்லுதல்

3402.போனவள் புலவி நோக்கிப்
    புரவலன், ‘பொலன் கொள் தாராய்!
மான் இது நானே பற்றி
    வல்லையின் வருவென் அன்றே;
கான் இயல் மயில் அன்னாளைக்
    காத்தனை இருத்தி ‘என்னா,
வேல் நகு சரமும் வில்லும்
    வாங்கினன் விரையல் உற்றான்.
239

உரை
   
 
இலக்குவன் இராமனிடம் இது ‘மாரீசன் மாயம் ‘என்று கூறி, சீதை புக்க சாலையைக் காத்து நிற்றல்

3403.‘முன்னமும் மகவாய் வந்த
    மூவரில் ஒருவன் போனான்;
அன்ன மாரீசன் என்றே
    அயிர்த்தனென் இதனை; ஐயா!
இன்னமும் காண்டி; வாழி;
    ஏகு ‘என இருகை கூப்பிப்
பொன் அனாள் புக்க சாலை
    காத்தனன் புறத்து நின்றான்.
240

உரை
   
 
இராமன் பொன்மானைத் தொடரல்

3404.மந்திரத்து இளையோன் சொன்ன
    வாய்மொழி மனத்துக் கொள்ளான்,
சந்திரற்கு உவமை சான்ற
    வதனத்தாள் சலத்தை நோக்கிச்
சிந்துரப் பவளச் செவ்வாய்
    முறுவலன், சிகரச் செவ்விச்
சுந்தரத் தோளினான் அம்
    மானினைத் தொடரல் உற்றான்.
241

உரை
   
 
மானின் விரைவு

3405.மிதித்தது மெல்ல மெல்ல,
    வெறித்தது, வெருவி மீதில்
குதித்தது, செவியை நீட்டிக்
    குரபதம் உரத்தைக் கூட்டி,
உதித்து எழும் ஊதை உள்ளம்
    என்று இவை உருவச் செல்லும்
கதிக்கு ஒரு கல்வி வேறே
    காட்டுவது ஒத்தது அன்றே.
242

உரை
   
 
இராமன் விரைவு

3406.நீட்டினான் உலகம் மூன்றும்
    நின்று எடுத்து அளந்த பாதம்;
மீட்டும் தாள் நீட்டற்கு அம்மா!
    வேறும் ஓர் அண்டம் உண்டோ?
ஓட்டினான், தொடர்ந்த தன்னை
    ஒழிவு அற நிறைந்த தன்மை
காட்டினான் அன்றி, அன்று அக்
    கடுப்பை யார் கணிக்கற் பாலார்.
243

உரை
   
 
மான் அணுகியும் விலகியும் செல்லுதல்

3407.குன்றிடை இவரும்; மேகக்
    குழுவிடைக் குதிக்கும்; கூடச்
சென்றிடின் அகலும்; தாழின்
    தீண்டல் ஆம் தகைமைத்து ஆகும்;
நின்றதே போல நீங்கும்;
    நிதிவழி நேயம் நீட்டும்
மன்றல் அம் கோதை மாதர்
    மனம் எனப் போயிற்று அம்மா!
244

உரை
   
 
இராமன் மாயமான் என்று தெளிதல்

3408.‘காயம் வேறு ஆகிச் செய்யும்
    கருமம் வேறு ஆயிற்று அன்றே;
ஏயுமே என்னின் முன்னம்
    எண்ணமே இளவற்கு உண்டே;
ஆயுமேல் உறுதல் செல்லாது;
    அரக்கர் ஆனவர்கள் செய்த
மாயமே ஆயதே, நான்
    வருந்தியது ‘என்றான்; வள்ளல்.
245

உரை
   
 
இராமன் நினைவறிந்து மாரீசன் தப்பியோடமுயலுதல்

3409.‘பற்றுவான் இனி அல்லன்; பகழியால்
செற்று வானில் செலுத்தல் உற்றான் ‘என
மற்று அம்மாய அரக்கன் மனம் கொளா
உற்ற வேகத்தின் உம்பரின் ஓங்கினான்.
246

உரை
   
 
இராமன் அம்பு தொடுத்தல்

3410.அக் கணத்தினில் ஐயனும் வெய்ய தன்
சக்கரத்தில் தகைவு அரிது ஆயது ஓர்
செக்கர் மேனிப் பகழி செலுத்தினான்
‘புக்க தேயம் புக்கு இன் உயிர் போக்கு ‘எனா.
247

உரை
   
 
மாரீசன் கதறி விழுந்து மடிதல்

3411.நெட்டு இலைச் சரம் வஞ்சனை நெஞ்சு உறப்
பட்டது; அப்பொழுதே பகு வாயினால்
அட்ட திக்கினும் அப்புறமும் புக
விட்டு அழைத்து ஒரு குன்று என வீழ்ந்தனன்.
248

உரை
   
 
இராமன் இலக்குவனைப் பாராட்டுதல்

3412.வெய்யவன் தன் உருவொடு வீழ்தலும்
‘செய்யது அன்று ‘எனச் செப்பிய தம்பியை
‘ஐயன் வல்லன் என் ஆர் உயிர் வல்லன் நான்
உய்ய வந்தவன் வல்லன் ‘என்று உன்னினான்.
249

உரை
   
 
உயிர்நீங்கி விழுந்த உடலை நோக்கிய இராமன்
மாரீசன் என்று தெளிதல்

3413.ஆசை நீளத்து அரற்றினன் வீழ்ந்த அந்
நீசன் மேனியை நின்று உற நோக்கினான்
மாசு இல் மாதவன் வேள்வியில் வந்த மா
ரீசனே இவன் என்பதும் தேறினான்.
250

உரை
   
 
மாரீசன் குரலால் சீதை வருந்துவாள் என்று
இராமன் இரங்குதல்

3414.‘புழைத்த வாளி உரம் புகப் புல்லியோன்
இழைத்த மாயையின் என் குரலால் எடுத்து
அழைத்தது உண்டு; அது கேட்டு அயர் வெய்துமால்
மழைக் கண் ஏழை ‘என்று உள்ளம் வருந்தினான்.
251

உரை
   
 
இலக்குவன் சீதையைத் தேற்றுவான் என்று இராமன் ஆறுதல் அடைதல்

3415.‘மாற்றம் இன்னது மாயம் மாரீசன் என்று
ஏற்றம் முன் உணர்ந்தான் இருந்தான்; எனது
ஆற்றல் தேரும் அறிவினன் ஆதலால்
தேற்றுமால் இளையோன் ‘எனத் தேறினான்.
252

உரை
   
 
இராமன் திரும்புதல்

3416.‘மாள்வதே பொருள் ஆக வந்தான் அலன்;
சூழ்வது ஓர் பொருள் உண்டு; இவன் சொல்லினால்
மூள்வது ஏதம்; அது முடியா முனம்
மீள்வதே நலன் ‘என்று அவன் மீண்டனன்.
253

உரை