இராம இலக்குவர் அந்திப்பொழுதில் ஒரு மலையிற் சென்று தங்குதலும் இருள் பரவுதலும்

3642.அந்தி வந்து அணுகும் வேலை,
    அவ்வழி, அவரும், நீங்கிச்
சிந்துரச் சென்னித்து ஆண்டு ஓர்
    மைவரைச் சேக்கை கொண்டார்;
இந்திரற்கு அடங்கல் செல்லா
    இராக்கதர் எழுந்தது என்ன,
வெந்துயர்க்கு ஊற்றம் ஆய
    விரி இருள் வீங்கிற்று அன்றே.
1

உரை
   
 
இரவுப் பொழுது வர இராம இலக்குவர் மனம் கவலுதல் (3643-3644)

3643.தேன் உக அருவி சிந்தித்
    தரெுமரல் உறுவ போலக்
கானமும் மலையும் எல்லாம்,
    கண்ணின் நீர் உகுக்கும் கங்குல்,
மானமும் சினமும் தாதை
    மரணமும், மைந்தர் சிந்தை,
ஞானமும் துயரும், தம்முள்
    மலைந்து என, நலிந்தது அன்றே.
2

உரை
   
 
3644.மெய் உற உணர்வு செல்லா
    அறிவினை வினையின் நூக்கும்
பொய் உறு பிறவிபோலப்
    போக்க அரும் பொங்கு கங்குல்,
நெய் உறு நெருப்பின் வீங்கி
    நிமிர்தர, உயிர்ப்பு நீளக்
கையறவு உறுகின்றாரால்
    காணல் ஆம் கரையிற்று அன்றே.
3

உரை
   
 
இராமன் கண்துயிலப்பெறாமை

3645.யாம் அது தரெிதல் தேற்றாம்;
    இன் நகை சனகி என்னும்
காமரு திருவை நீத்தோ?
    முகம் மதி காண்கிலாதோ?
தேமரு தரெியல் வீரன்
    கண் எனத் தரெிந்த செய்ய
தாமரை, கங்குல் போதும்,
    குவிந்து இலாத் தன்மை என்னோ?
4

உரை
   
 
3646.பெண் இயல் தீபம் அன்ன
    பேர் எழிலாட்டி மாட்டு
நண்ணிய பிரிவு செய்த
    நவையினால், நவை இல் உள்ளத்து
எண்ணியது அறிதல் தேற்றாம்;
    இமைத்தில, இராமன் என்னும்
புண்ணியன் கண்ணும் வன் தோள்
    தம்பிகண் போன்ற அன்றே.
5

உரை
   
 
வெண்மதி தோன்றுதல்

3647.‘வண்டு உளர் கோதைச் சீதை
    வாள் முகம் பொலிய வானில்
கண்டனென் ‘என்று வீரற்கு
    ஆண்டு ஒரு காதல் காட்டத்
தண் தமிழ்த் தனெ்றல் என்னும்
    கோள் அராத் தவழும் சாரல்,
விண் தலம் விளக்கும் செவ்வி
    வெண் மதி விரிந்தது அன்றே.
6

உரை
   
 
நிலவு இராமனை வருத்துதல்

3648.களியுடை அனங்கக் கள்வன்
    கரந்து உறை கங்குல் காலம்
வெளிபடுத்து, உலகம் எங்கும்
    விளக்கிய நிலவின் வெள்ளம்,
நளி இருள் பிழம்பு என்று, ஈண்டு,
    நஞ்சொடு கலந்த நாகத்
துளை ஏயிற்று ஊறல் உற்ற
    தாம் எனச் சுட்டது அன்றே.
7

உரை
   
 
இராமன் சீதையை நினைந்து வருந்துதல் (3649-3665)

3649.இடம்படு மானத் துன்பம்
    இருள்தர எண்ணின் தீர்ந்தான்;
விடம் பரந்து அனையது ஆய
    வெண்நிலா வெதுப்ப, வீரன்,
படம் பரந்து அனைய அல்குல்,
    பால் பரந்து அனைய இன் சொல்,
தடம்பெரும் கண்ணினாள்தன்
    தனிமையை நினையல் உற்றான்.
8

உரை
   
 
3650.மடித்த வாயன் வயங்கும் உயிர்ப்பினன்;
துடித்து வீங்கி ஒடுங்குறு தோளினன்
பொடித்த தண் தளிர்ப் பூவொடு மால்கரி
ஒடித்த கொம்பு அனையாள் திறத்து உன்னுவான்.
9

உரை
   
 
3651.“‘வாங்கு வில்லன் வரும் வரும் ‘என்று இரு
பாங்கும் நீள்நெறி பார்த்தனேளா? “ எனும்;
வீங்கு வேலை விரி திரை ஆம் என
ஓங்கி ஓங்கி ஒடுங்கும் உயிர்ப்பினான்.
10

உரை
   
 
3652.“என் நினைந்திலள் என்பது சாலுமோ
மின் இனைந்த எயிற்றின் விலங்கு அனான்
‘நில் நில் ‘என்று நெருங்கியபோது அவள்
என் நினைந்தனேளா? “ என ஏங்குமால்.
11

உரை
   
 
3653.“நஞ்சு காலும் நகை நெடு நாகத்தின்
வஞ்ச வாயின் மதி என மட்குவாள்
‘வெஞ்சினம் செய் அரக்கர்தம் வெம்மையை
அஞ்சினான் கொல்? ‘என்று ஐயுறுமால் “ என்பான்.
12

உரை
   
 
3654.பூண்ட மானமும் போக்க அருங் காதலும்
தூண்ட நின்று இடை தோம் உறும் ஆர் உயிர்
மீண்டு மீண்டு வெதுப்ப வெதும்பினான்;
“வேண்டுமோ எனக்கு இன்னமும் வில்? ” என்பான்.
13

உரை
   
 
3655.வில்லை நோக்கி நகும்; மிக வீங்கு தோள்
கல்லை நோக்கி நகும்; கடை கால் வரு
சொல்லை நோக்கித் துணுக்கு எனும்; தொல் மறை
எல்லை நோக்கினர் யாவரும் நோக்குவான்.
14

உரை
   
 
3656.கூதிர் வாடை வெம் கூற்றினை நோக்கினன்
“வேத வேள்வி விதி முறை மேவிய
சீதை என்வயின் தீர்ந்தனேளா? “ எனும்;
போதகம் எனப் பொம் என் உயிர்ப்பினான்.
15

உரை
   
 
3657.“நின்று பல் உயிர் காத்தற்கு நேர்ந்த யான்
என் துணைக் குலமங்கை ஒர் ஏந்து இழை
தன் துயர்க்கும் தகவு இலென் ஆயினேன்;
நன்று நன்று என் வலி! “ என நாணுமால்.
16

உரை
   
 
3658.சாயும்; தம்பி திருத்திய தண் தளிர்
தீயும்; அங்கு அவை தீய்தலும் செவ் இருந்து
ஆயும்; ஆவி புழுங்க அழுங்குமால்;
வாயும் நெஞ்சும் புலர மயங்குவான்.
17

உரை
   
 
3659.பிரிந்த ஏதுகொல்? பேர் அபிமானம் கொல்?
தரெிந்தது இல்லை; திருமலர்க் கண் இமை
பொருந்த ஆயிரம் கற்பங்கள் போக்குவான்
இருந்து கண்டிலன் கங்குலின் ஈறு அரோ.
18

உரை
   
 
3660.“வென்றி வேற்கை இளவலை! மேல் எலாம்
ஒன்றுபோல உலப்பு இல நாள்கள்தாம்
நின்று காண்டி அன்றே? நெடுங் கங்குல் தான்
இன்று நீள்வதற்கு ஏது என்? “ என்னுமால்.
19

உரை
   
 
3661.நீண்ட மாலை மதியினை “நித்தமும்
மீண்டு மீண்டு மெலிந்தனை வெள்குவாய்;
பூண்ட பூணவள் வாள்முகம் போதலால்
ஈண்டு சால விளங்கினை “ என்னுமால்.
20

உரை
   
 
3662.“நீள் நிலாவின் இசைநிறை தன் குலத்து
ஆணி ஆய பழி வர அன்னது
நாணி நாடு கடந்தனனாம் கொலோ
சேண் உலாம் தனித் தேரவன்? “ என்னுமால்.
21

உரை
   
 
3663.“சுட்ட கங்குல் நெடிது ” எனச் சோர்கின்றான்
“முட்டு அமைந்த நெடு முடக்கோனொடு
கட்டி வாள் அரக்கன் கதிரோனையும்
இட்டனன்கொல் இரும் சிறை? “ என்னுமால்.
22

உரை
   
 
3664.“துடியின் நேர் இடை தோன்றலளாம் எனின்
கடிய கார் இருள் கங்குலின் கற்பம் போய்
முடியும்; ஆகின் முடியும் இம் மூரி நீர்
நெடிய மாநிலம் “ என்ன நினைக்குமால்.
23

உரை
   
 
3665.“திறத்து இ(ன்)னாதன செய்தவத்தோர் உற
ஒறுத்து ஞாலத்து உயிர்தமை உண்டு உழல்
மறத்தினார்கள் வலிந்தனர் வாழ்வரேல்
அறத்தினால் இனி ஆவது என்? “ என்னுமால்.
24

உரை
   
 
காமனது கலக்கம் (3666-3667)

3666.தேனின் தயெ்வத் திரு நெடு நாண் சிலைப்
பூ நின்று எய்யும் பொருகணை வீரனும்
மேல் நின்று எய்ய விமலனை நோக்கினான்;
தான் நின்று எய்யகிலான் தடுமாறினான்.
25

உரை
   
 
3667.உழந்த யோகத்து ஒருமுதல் கோபத்தால்
இழைந்த மேனியும் எண்ணி இரங்கினான்;
கெழுந்தகைக்கு ஒரு வன்மை கிடைக்குமோ
பழந் துயர்க்குப் பரிவு உறும் பான்மையால்?
26

உரை
   
 
கங்குல் பொழுது கழிதல்

3668.நீலமான நிறத்தன் நினைந்தவை
சூலம் ஆகத் தொலைவுறும் எல்லையில்
மூலம் ஆம் மலர் முன்னவன் முற்றுறும்
காலம் ஆம் எனக் கங்குல் கழிந்ததே.
27

உரை
   
 
இராமனது ஆற்றாமை (3669-3670)

3669.வெள்ளம் சிலம்பு பாற்கடலின் விரும்பும்
    துயிலை வெறுத்து, அளியும்
கள்ளும் சிலம்பு பூங்கோதை
    கற்பின் கடலில் படிவாற்குப்
புள்ளும் சிலம்பும்; பொழில் சிலம்பும்;
    புனலும் சிலம்பும்; புனைகோலம்
உள்ளும் சில் அம்பும் சிலம்பாவேல்,
    உயிர் உண்டாகும் வகை உண்டோ?
28

உரை
   
 
3670.மயிலும் பெடையும் உடன் திரிய,
    மானும் கலையும் மருவி வரப்
பயிலும் பிடியும் கடகரியும்
    வருவ, திரிவ, பார்க்கின்றான்;
குயிலும், கரும்பும் செழுந் தேனும்,
    குழலும், யாழும், கொழும் பாகும்,
அயிலும் அமுதும் சுவை தீர்த்த
    மொழியைப் பிரிந்தான், அழியானோ?
29

உரை
   
 
கதிரவன் தோன்றுதல்

3671.முடி நாட்டிய கோட்டு உதயத்து
    முற்றம் உற்றான்; முதுகங்குல்
விடிநாள் கண்டும் கிளி மிழற்றும்
    மென்சொல் கேளா வீரற்கு, ஆண்டு,
“அடிநாள் செந்தாமரை ஒதுங்கும்
    அன்னம் இலளால், யான் அடைத்த
கடி நாள் கமலத்து ‘‘ என, அவிழ்த்துக்
    காட்டுவான்போல், கதிர்வெய்யோன்.
30

உரை
   
Try error :java.sql.SQLException: Closed Resultset: next