இராமன் துந்துபியின் உடலைக் காணுதல்

3988.அண்டமும் அகிலமும்
    அடைய அன்று அனல் இடைப்
பண்டு வெந்தன நெடும்
    பசை வறந்திடினும், வான்
மண்டலம் தொடுவது, அம்
    மலையின் மேல் மலை எனக்
கண்டனன், துந்துபிக்
    கடல் அனான் உடல், அரோ.
1

உரை
   
 
இராமன் வினாவுதல்

3989.‘தனெ்புலக் கிழவன் ஊர் மயிடமோ?
    திசையின் வாழ்
வன்பு உலக் கரி மடிந்தது கொலோ?
    மகர மீன்
என்பு உலப்பு உற உலர்ந்தது கொலோ
    இது? ‘எனா,
‘அன்பு உலப்பு அரிய நீ உரை செய்வாய் ‘
    என, அவன்.
2

உரை
   
 
சுக்கிரீவன் துந்துபியின் வரலாற்றைக் கூறுதல் (3990-4002)

3990.‘துந்துபிப் பெயருடைச்
    சுடு சினத்து அவுணன், மீது
இந்துவைத் தொட நிமிர்ந்து
    எழு மருப்பு இணையினான்,
மந்தரக் கிரி எனப்
    பெரியவன், மகர நீர்
சிந்திடக் கரு நிறத்து
    அரியினைத் தேடுவான். ‘
3

உரை
   
 
3991.‘அங்கு வந்து அரி எதிர்ந்து,
    “அமைதி; என்? “ என்றலும்,
“பொங்கு வெஞ் செருவினில்
    பொருதி “ என்று உரை செயக்
“கங்கையின் கணவன், அக்
    கறை மிடற்று இறைவனே
உங்கள் வெங் கத வலிக்கு
    ஒருவன்‘‘ என்று உரை செய்தான். ‘
4

உரை
   
 
3992.‘கடிது சென்று, அவனும், அக்
    கடவுள் தன் கயிலையைக்
கொடிய கொம்பினின் மடுத்து
    எழுதலும், குறுகி முன்,
“நொடிதி, நின் குறை என்? “
    என்றலும், நுவன்றனன் அரோ,
“முடிவு இல் வெஞ் செரு எனக்கு
    அருள் செய்வான் முயல்க“ எனா. ‘
5

உரை
   
 
3993.“‘மூலமே வீரமே
    மூடினாயோடு போர்
ஏலுமே? தேவர் பால்
    ஏகு ‘‘ எனா ஏவினான்;
“சால நாள் போர் செய்வாய்
    ஆதியேல், சாரல்; போர்
வாலி பால் ஏகு ‘‘ எனா,
    வான் உேளார் வான் உளான். ‘
6

உரை
   
 
3994.‘அன்னவன் விட, உவந்து, ‘
    அவனும் வந்து, “அரிகள் தம்
மன்னவன்! வருக! போர் செய்க! ‘‘
    எனா, மலையினைச்
சின்ன பின்னம் படுத்திடுதலும்,
    சினவி, என்
முன்னவன், முன்னர் வந்து
    அனையவன் முனைதலும். ‘
7

உரை
   
 
3995.‘இருவரும் திரிவுறும்
    பொழுதின் இன்னவர்கள் என்று
ஒருவரும் சிறிது
    உணர்ந்திலர்கள்; எவ் உலகமும்
வெருவரும் தகையர் ஆய்
    விழுவர், நின்று எழுவரால்;
மருவ அருந் தகையர்,
    தானவர்கள் வானவர்கள் தாம். ‘
8

உரை
   
 
3996.‘தீ எழுந்தது விசும்பு உற; நெடுந் திசை எலாம்
போய் எழுந்தது முழக்கு; உடன் எழுந்தது புகை;
தோய நன் புணரியும் தொடர் தடங் கிரிகளும்
சாய் அழிந்தன அடித் தலம் எடுத் திடுதலால்.
9

உரை
   
 
3997.‘புயலும் வானகமும் அப் புணரியும் புணரி சூழ்
அயலும் வீழ் தூளியால் அறிவருந் தகையவா
மயனின் மாமகனும் வாலியும் மறத்து உடலினார்
இயலும் மாமதியம் ஈர் ஆறும் வந்து எய்தவே.
10

உரை
   
 
3998.‘அற்றது ஆகிய செருப் புரிவுறும் அளவினில்
கொற்ற வாலியும் அவன் குவவு தோள் வலியொடும்
பற்றி ஆசையின் நெடும் பணை மருப்பு இணை பறித்து
எற்றினான்; அவனும் வான் இடியின் நின்று உரறினான்.
11

உரை
   
 
3999.‘தலையின் மேல் அடிபடக்
    கடிது சாய் நெடிது தாள்
உலைய, வாய் முழை திறந்து
    உதிர ஆறு ஒழுக, மா
மலையின் மேல் உரும் இடித்து
    என்ன, வான் மண்ணொடும்
குலைய, மாதிசைகளும்
    செவிடு உறக் குத்தினான். ‘
12

உரை
   
 
4000.“‘கவரி இங்கு இது “ எனக்
    கரதலம் கொடு திரித்து
இவர்தலும், குருதிபட்டு
    இசை தொறும், திசை தொறும்
துவர் அணிந்தன எனப்
    பொசி துதைந்தன, துணைப்
பவர் நெடும் பணை மதம்
    பயிலும் வன் கரிகளே. ‘
13

உரை
   
 
4001.புகல் கடந்து, அயல் உேளார்
    இயலும் மண்டிலம் இகந்து
எனையவும் தவிர, மேல்
    வயிர வன் கரதலத்து அவன்
வலித்து எறிய, அன்று,
    உயிரும் விண் படர, இவ்
உடலும் இப் பரிசு அரோ. ‘
    உயிரும் விண் படர இவ் உடலும் இப் பரிசு அரோ.
14

உரை
   
 
4002.‘முட்டி, வான் முகடு சென்று
    அளவி, இம் முடை உடல்
கட்டி மால் வரையை வந்து
    உறுதலும், கருணையான்
இட்ட சாபமும் எனக்கு உதவும் ‘
    என்று இயல்பினின்
பட்டவா முழுவதும்
    பரிவினால் உரை செய்தான்.
15

உரை
   
 
இராமன் பணித்த வண்ணம் துந்துபியின் உடலை இலக்குவன் எற்றுதல்

4003.கேட்டனன் அமலனும் கிளந்தவாறு எலாம்
வாள் தொழில் இளவலை ‘இதனை மைந்த! நீ
ஓட்டு ‘என அவன் கழல் விரலின் உந்தினான்;
மீட்டு அது விரிஞ்சன் நாடு உற்று மீண்டதே.
16

உரை