மாளிகைகளில் தீப்பற்றல்

6029.கொடியைப் பற்றி விதானம் கொளுவி தான்
நெடிய தூணைத் தழுவி நெடும் சுவர்
முடியச் சுற்றி முழுதும் முருக்கிற்றால்;
கடி கொள் மா நகர் தோறும் கடும் கனல்.
1

உரை
   
 
நகரமக்கள் அங்குமிங்கும் ஓடிக் கூக்குரலிடல்

6030.வாசல் இட்ட எரி மண மாளிகை
மூச முட்டி முழுதும் முருக்கிற்றால்
ஊசல் இட்டு என ஓடி உளைந்து உலைப்
பூசல் இட்டது இரியல் புறம் எலாம்.
2

உரை
   
 
மணிமாளிகைகளில் மாதர் மயங்கி அலமரல்

6031.மணியின் ஆய வயங்கு ஒளி மாளிகை
பிணியில் செம் சுடர்க் கற்றை பெருக்கலால்
திணி கொள் தீ உற்றது உற்றில தேர்கிலார்
அணி வளைக் கை நல்லார் அலமந்து உளார்.
3

உரை
   
 
புகையில் அகப்பட்ட மகளிர்

6032.வான் அகத்தை நெடும் புகை மாய்த்தலால்
போன திக்கு அறியாது புலம்பினார்;
தேன் அகத்து மலர் சிலர் சிந்திய
கான் அகத்து மயில் அன்ன காட்சியார்.
4

உரை
   
 
தலையில் தீப்பற்றியதும் பற்றாததும் தரெியாமை

6033.கூய்க் கொழும் புனல் குஞ்சியில் கூந்தலில்
மீச் சொரிந்தனர்; மாதரும் வீரரும்
ஏய்த்த தன்மையினால் எரி இன்மையும்
தீக் கொளுத்தினவும் தரெியாமையால்.
5

உரை
   
 
ஒரு தத்துவக் கருத்து

6034.இல்லில் தங்கு வயங்கு எரி யாவையும்
சொல்லின் தீர்ந்தன போல்வன தொல் உரு
புல்லிக் கொண்டன; மாயைப் புணர்ப்பு அறக்
கல்வித் தம் இயல்பு எய்தும் கருத்தர் போல்.
6

உரை
   
 
புகை மேலோங்கி எழுதல்

6035.ஆயது அங்கு ஒர் குறள் உரு ஆய் அடித்
தாய் அளந்து உலகங்கள் தரக் கொள்வான்
மீ எழுந்த கரியவன் மேனியில்
போய் எழுந்து பரந்தது; வெம் புகை.
7

உரை
   
 
எரியினால் யானைகள் நிறம் மாறுதல்

6036.நீலம் நின்ற நிறத்தன கீழ்நிலை
மாலின் வெம் சின யானையை மானுவ;
மேல் விழுந்து எரி முற்றும் விழுங்கலால்
தோல் உரிந்து கழன்றன; தோல் எலாம்.
8

உரை
   
 
எருமைக்கு மாதர் ஒதுங்கல்

6037.மீது இமம் கலந்தால் அன்ன வெம் புகை
சோதி மங்கலத் தீயொடு சுற்றலால்
மேதி மங்குலின் வீழ் புனல் வீழ் மட
ஓதிமங்களின் மாதர் ஒதுங்கினார்.
9

உரை
   
 
அனற்பொறிகளால் கடல்மீன் மடிதல்

6038.பொடித்து எழுந்து பெரும் பொறி போவன
இடிக் குலங்களின் வீழ்தலில் எங்கணும்
வெடித்த; வேலை வெதும்பிட மீன்குலம்
துடித்து வெந்து புலர்ந்து உயிர் சோர்ந்தவால்.
10

உரை
   
 
பொன்மாளிகை உருகித் திரளல்

6039.பருகு தீ மடுத்து உள் உறப் பற்றலால்
அருகு நீடிய ஆடகத் தாரைகள்
உருகி வேலையின் ஊடு புக்கு உற்றன
திருகில் பொன் நெடும் தண்டில் திரண்டவால்.
11

உரை
   
 
தரையும் வெந்தது

6040.உரையின் முந்து உலகு உண்ணும் எரி அதால்
வரை நிவந்து அன்ன பன் மணி மாளிகை
நிரையும் நீள் நெடும் சோலையும் நிற்குமோ?
தரையும் வெந்தது; பொன் எனும் தன்மையால்.
12

உரை
   
 
புகை வானுலகத்தும் பரவல்

6041.கல்லினும் வலிது ஆம் புகைக் கற்றையால்
எல்லி பெற்றது; இமையவர் நாடு இயல்
வல்லி கோலி நிவந்தன; மா மணிச்
சில்லி ஓடும் திரண்டன தேர் எலாம்.
13

உரை
   
 
கனலும் கள் குடித்தது

6042.பேயம் மன்றினில் நின்று பிறங்கு எரி
மாயர் உண்ட நறவு மடுத்ததால்;
தூயர் என்றவர் வைகு இடம் துன்னினால்
தீயர்; அன்றியும் தீமையும் செய்வரால்.
14

உரை
   
 
கடலும் மேகமும் வெப்பமுறுதல்

6043.தழுவு இலங்கை தழங்கு எரி தாய்ச் செல
வழு இல் வேலை உலையின் மறுகின;
எழும் எழும் சுடர்க் கற்றை சென்று எய்தலால்
குழுவு தண்புனல் மேகம் கொதித்தவே.
15

உரை
   
 
பேய்த்தேரைப் புனல் என மயங்கல்

6044.ஊனில் ஓடும் எரியொடு உயங்குவார்
கானில் ஓடும் நெடும் புனல் காண் எனா
வானில் ஓடும் மகளிர் மயங்கினார்
வேனில் ஓடு அரும் தேர் இடை வீழ்ந்தனர்.
16

உரை
   
 
வண்டு தீச்சுடரைத் தாமரை என மயங்கல்

6045.தேன் அவாம் பொழில் தீப் படச் சிந்திய
சோனை மா மலர்த் தும்பி தொடர்ந்து அயல்
போன தீச் சுடர் புண்டரிகத் தடம்
கானம் ஆம் என வீழ்ந்து கரிந்தவே.
17

உரை
   
 
நற்கடன் பூண்ட நங்கையர் மடிதல்

6046.“நல் கடம் இது நம் உயிர் நாயகன்
மற்கடம் தறெ மாண்டனன்; வாழ்வு இலம்;
இல் கடந்து இனி ஏகலம் யாம் “ எனா
வில் கடந்த நுதல் சிலர் வீடினார்.
18

உரை
   
 
கா வேரொடும் கரிதல்

6047.பூ கரிந்து முறி பொறி ஆய் அடை
நா கரிந்து சினை நறும் சாம்பர் ஆய்
மீ கரிந்து நெடும் பணை வேர் உறக்
கா கரிந்து கரும் கரி ஆனவே.
19

உரை
   
 
விண்ணவர் ஊர்கள் உருகி ஒழுகல்

6048.கார் முழுக்க எழும் கனல் கற்றை போய்
ஊர் முழுக்க வெதுப்ப உருக்கின;
தூர் ஒழுக்கம் அறாமையின் துன்னு பொன்
வேர் விழுப்பது போன்றன விண் எலாம்.
20

உரை
   
 
அரக்கரும் அமுதுண்டு ஆவி பெறல் (6049-6050)

6049.நெருக்கி மீ மிசை ஓங்கும் நெருப்பு அழல்
செருக்கும் வெண் கதிர்த் திங்களைச் சேண் உற
உருக்க மெய்யின் அமுதம் உகுத்தலால்
அரக்கரும் சிலர் ஆவி பெற்றார் அரோ.
21

உரை
   
 
6050.பருதி பற்றி நிமிர்ந்து எழு பைங் கனல்
கருகி முற்றும் எரிந்து எழு கார் மழை
அருகு சுற்றும் இருந்தையது ஆய் அதின்
உருகு பொன்திரள் ஒத்தனன் ஒள் கதிர்.
22

உரை
   
 
குதிரைகள் எரிபடல்

6051.தளை கொளுத்திய தாவு எரி தாமணி
முளை கொளுத்தி முகத்து இடை மொய்த்தபேர்
உளை கொளுத்த உலந்து உலைவு உற்றன;
வளை குளப்பின் மணி நிறம் வாசியே.
23

உரை
   
 
வான் ஏற முயன்ற அரக்கர் எரியில் விழல்

6052.எழுந்து பொன் தலத்து ஏறலின் நீள் புகைக்
கொழுந்து சுற்ற உயிர்ப்பு இலர்; கோளும் உற்று
அழுந்துபட்டு உளர் ஒத்து அயர்ந்து ஆர் அழல்
விழுந்து முற்றினர்; கூற்றை விழுங்குவார்.
24

உரை
   
 
அரக்கியர் கூந்தலில் தீப்பற்றல்

6053.கோசிகத் துகில் உற்ற கொழும் கனல்
தூசு இன் உத்தரிகத்தொடு சுற்று உறா
வாச மைக் குழல் பற்ற மயங்கினார்
பாசிழைப் பரவைப் படர் அல்குலார்.
25

உரை
   
 
ஆடையில் தீப்பற்றிய அரக்கர் கடலில் மண்டுதல்

6054.நிலவு இலங்கிய துகிலினை நெருப்பு உண நிருதர்
இலவினும் சில முத்து உள எனும் நகை இளையார்
புலவியின் கரை கண்டவர் அமிர்து உணப் புணரும்
கலவியின் கரை கண்டிலர் மண்டினர் கடல் மேல்.
26

உரை
   
 
கிளி பதைப்பக் கண்டு மகளிர் வருந்தல்

6055.பஞ்சரத்தொடு, பசும் நிறக் கிளி
    வெந்து பதைப்ப,
அஞ்சனக் கணில் அருவி நீர்
    முலைமுன்றில் அலைப்பக்
குஞ்சரத்து அன கொழுநரைத்
    தழுவு உறும் கொதிப்பால்,
மஞ்சு உறப் புகும் மின் எனப்
    புகை இடை மறைந்தார்
27

உரை
   
 
புகைப்படலத்துள் மறைந்த மகளிர்

6056.வரையினைப் புரை மாடங்கள்
    எரி புக, மகளிர்,
புரை இல் பொன் கலன் வில் இட,
    விசும்பு இடைப் போவார்,
கரை இல் நுண் புகைப் படலையில்
    கரந்தனர்; கலிங்கத்
திரையின் உள் பொதி சித்திரப்
    பாவையின் செயலார்
28

உரை
   
 
மணம் பரப்பி மலர்ப்பொழில் எரிதல்

6057.அகரும் நல் நறும் சாந்தமும்
    முதலின அனேகம்
புகர் இல் நல் மரத்து உறு
    வெறி உலகு எலாம் போர்ப்பப்,
பகரும் ஊழியில், கால வெம்
    கடும் கனல் பருகும்
மகர வேலையின், வெந்தன
    நந்தன வனங்கள்.
29

உரை
   
 
கற்பகக் காவும் கனலும் இடைதரெியாமை

6058.மினைப் பரந்து எழு கொழும் சுடர்,
    உலகு எலாம் விழுங்க,
நினைப்பு அரும் பெரும் திசை உற
    விரிகின்ற நிலையால்,
சினைப் பரந்து, எரி சேர்ந்து இலா
    நின்றவும், சில, வெம்
கனல் பரந்தவும், தரெிகில;
    கற்பகக் கானம்
30

உரை
   
 
புகை கடலை விழுங்கல்

6059.மூளும் வெம் புகை விழுங்கலின்,
    சுற்று உறு முழு நீர்
மாளும் வண்ணம், மா மலை நெடும்
    தலை தொறும் மயங்கிப்
பூளை வீய்ந்து அன்ன போவன,
    புணரியில் புனல் மீன்
மீள, யாவையும் தரெிந்து இல
    முகில்கணம் விசைப்ப
31

உரை
   
 
திசையனைத்தும் புகை சூழல்

6060.மிக்க வெம் புகை விழுங்கலின்,
    வெள்ளி அம் கிரியும்
ஒக்க வெற்பினோடு அன்னமும்
    காக்கையின் உருவ;
பக்க வேலையின் படியது
    பாற்கடல், முடிவில்
திக்கயங்களும், கயங்களும்,
    வேற்றுமை தரெியா.
32

உரை
   
 
அரக்கரும் அரக்கியரும் கடலில் மூழ்கல்

6061.கரிந்து சிந்திடக் கடும் கனல்
    தொடர்ந்து, உடல் கதுவ
உரிந்த மெய்யினர், ஓடினர்,
    நீர் இடை ஒளிப்பார்,
விரிந்த கூந்தலும், குஞ்சியும்
    மிடைதலில், தாமும்,
எரிந்து வேகின்ற ஒத்தன,
    எறிதிரைப் பரவை.
33

உரை
   
 
மகவொடு போந்த அரக்கியர் அவலநிலை

6062.மருங்கின் மேல் ஒரு மகவு கொண்டு,
    ஒரு தனி மகவை
அரும் கையால் பற்றி, மற்று ஒரு
    மகவு பின் அரற்ற,
நெருங்கி, நீரொடு, நெறிகுழல்
    சுறுக் கொள நீங்கிக்
கரும் கடல் தலை வீழ்ந்தனர்
    அரக்கியர் கதறி.
34

உரை
   
 
படைக்கலம் உருகி ஒன்றாதலில் ஒரு உண்மை

6063.வில்லும், வேலும், வெம் குந்தமும்
    முதலின விறகாய்,
எல் உடைச் சுடர் எனப் புகர்
    எஃகு எலாம் உருகத்
தொல்லை நல் நிலை, தொடர்ந்து பேர்
    உணர்வு அன்ன தொழிலச்
சில்லி உண்டையில் திரண்டு அன
    படைக்கலச் சாலை.
35

உரை
   
 
தீப்பற்ற யானைகள் ஓடல்

6064.செய் தொடர்க் கன வல்லியும்,
    புரோசையும், சிந்தி,
நொய்தின் இட்ட வன் தறி பறித்து,
    உடல் எரி நுழைய,
மொய் தடச் செவி நிறுத்தி,
    வால் முதுகினை முருக்கிக்
கை எடுத்து அழைத்து ஓடின
    ஓடை வெம் களி மா.
36

உரை
   
 
பறவைகளை மீன்கூட்டம் விழுங்கல்

6065.வெருளும் வெம் புகைப் படலையின்
    மேல் செல வெருவி,
இருளும் வெம் கடல் விழுந்தன,
    எழுந்தில பறவை;
மருளில் மீன் கணம் விழுங்கிட
    உலந்தன; மனத்து ஓர்
அருள் இல் வஞ்சரைத் தஞ்சம் என்று
    அடைந்தனர் அனைய.
37

உரை
   
 
இராவணன் மாளிகையில் தீப்புகல்

6066.நீரை வற்றிடப் பருகி மா நெடு நிலம் தடவித்
தாருவைச் சுட்டு மலைகளைத் தணல் செய்து தனிமா
மேருவைப் பற்றி எரிகின்ற கால வெம் கனல் போல்
ஊரை முற்றுவித்து இராவணன் மனை புக்கது; உயர் தீ.
38

உரை
   
 
வானவர் மகளிர் நிலைகுலைந்தோடல்

6067.வான மாதரூம் மற்று உள மகளிரும் மறுகிப்
போன போன திக்கு அறிவரும் இரியலர் போனார்;
ஏனை நின்றவர் எங்கணும் இரிந்தனர்; இலங்கைக்
கோன் அவ் வானவர் பதி கொண்ட நாள் எனக் குலைவார்.
39

உரை
   
 
மகளிர் குழலும் நறுமணம் பெறல்

6068.நாவியும் நறும் கலவையும் கற்பகம் நக்க
பூவும் ஆரமும் அகிலும் என்று இனையன புகையத்
தேவு தேன் மழை செறி பெரும் குலம் எனத் திசையின்
பாவைமார் நறும் குழல்களும் பரிமளம் கமழ்ந்த.
40

உரை
   
 
இராவணன் எழுநிலை மாடம் எரிதல்

6069.சூழும் வெம் சுடர் தொடர்ந்திட,
    யாவரும் தொடரா
ஆழி வெம் சினத்து ஆண் தொழில்
    இராவணன் மனையில்,
ஊழி வெம் கனல் உண்டிட,
    உலகம் என்று உயர்ந்த
ஏழும் வெந்தன ஒத்தன,
    நெடும் நிலை ஏழும்.
41

உரை
   
 
இராவணன் மாளிகை உருகி மேருப் போலத் தோன்றல்

6070.பொன் திருத்தியது ஆதலால் இராவணன் புரை தீர்
குன்றம் ஒத்து உயர் தடம் நெடு மா நிலைக் கோயில்
நின்று துற்று எரி பருகிட நெரிவு உற உருகித்
தனெ் திசைக்கும் ஓர் மேரு உண்டு ஆம் எனத் தரெிந்த.
42

உரை
   
 
இராவணன் முதலியோர் வெளியேறுதல்

6071.அனைய காலையில் அரக்கனும்,
    அரிவையர் குழுவும்,
புனை மணிப் பொலி புட்பக
    விமானத்துப் போனார்;
நினையும் மாத்திரை யாவரும்;
    நீங்கினர்; நீங்கா
வினை இலாமையில் வெந்தது, அவ்
    விலங்கல் மேல் இலங்கை.
43

உரை
   
 
இராவணன் நகர் எரிந்த காரணம் வினவுதல்

6072.ஆழித் தேரவன் அரக்கரை அழல் எழ நோக்கி
‘ஏழுக்கு ஏழென அடுக்கிய உலகங்கள் எரியும்
ஊழிக் காலம் வந்து உற்றதோ? பிறிது வேறு உண்டோ?
பாழித் தீ சுட வெந்தது என்? நகர் ‘ எனப் பகர்ந்தான்.
44

உரை
   
 
நிகழ்ந்தது கூற இராவணன் சினத்தல்

6073.கரங்கள் கூப்பினர், தங்களைத்
    திருவொடும் காணார்,
இரங்குகின்ற வல் அரக்கர் ஈது
    இயம்பினர் : ‘இறையோய்!
தரங்க வேலையின் நெடிய தன்
    வால் இட்ட தழலால்,
குரங்கு சுட்டது ‘என்று உரைத்தலும்,
    இராவணன் கொதித்தான்.
45

உரை
   
 
இராவணன் சினந்து நகைத்தல்

6074.இன்று புன் தொழில் குரங்கு தன் வலியினால் இலங்கை
நின்று வெந்து மா நீறு எழுகின்றது; நெருப்புத்
தின்று தேக்கிடுகின்றது; தேவர்கள் சிரிப்பார்;
நன்று நன்று போர் இராவணன் வலி ‘என நக்கான்.
46

உரை
   
 
எரியைப் பற்றிவரக் கட்டளையிடல்

6075.‘உண்ட நெருப்பைக்
கண்டு எதிர் பற்றிக்
கொண்டு அணைக ‘என்றான்
அண்டரை வென்றான்.
47

உரை
   
 
அனுமனைப் பற்றிவரக் கட்டளையிடல்

6076.‘உற்று அகலா முன்
செற்ற குரங்கைப்
பற்றுமின் ‘என்றான்
முற்றும் உணர்ந்தான்.
48

உரை
   
 
வீரர் விரைந்து செல்லல்

6077.சார் அயல் நின்றார்
வீரர் விரைந்தார்;
‘நேருதும் ‘என்றார்
தேரினர் சென்றார்.
49

உரை
   
 
பல வீரர்கள் செல்லல்

6078.எல்லை இகந்தார்
வில்லர் வெகுண்டார்
பல் அதிகாரத்
தொல்லர் பெயர்ந்தார்.
50

உரை
   
 
வீரர்கள் எழுவர் போர்க்கு எழல்

6079.நீர்கெழு வேலை நிமிர்ந்தார்
தார்கெழு தானை சமைந்தார்
போர்கெழு மாலை புனைந்தார்
ஓர் எழு வீரர் உயர்ந்தார்.
51

உரை
   
 
வீரர் அனுமனைக் காணல்

6080.விண்ணினை மேலை விளம்பார்;
மண்ணினை ஓடி வளைந்தார்;
அண்ணலை ஓடி அணைந்தார்;
கண்ணினில் வேறு அயல் கண்டார்.
52

உரை
   
 
அரக்கர் அனுமனைச் சூழ்தல்

6081.‘பற்றுதிர் பற்றுதிர் ‘என்பார்;
‘எற்றுதிர் எற்றுதிர் ‘என்பார்;
‘சுற்றுதிர் சுற்றுதிர் ‘என்பார்;
முற்றினர் முற்றும் முனிந்தார்.
53

உரை
   
 
அனுமனும் அரக்கரும் பொருதல் (6082-6088)

6082.ஏல் கொடு வஞ்சர் எதிர்ந்தார்;
கால் கொடு கை கொடு கார்போல்
வேல் கொடு கோலினர்; வெம்தீ
வால் கொடு தானும் வளைந்தான்.
54

உரை
   
 
6083.பாதவம் ஒன்று பகுத்தான்;
மாதிரம் வாலின் வளைந்தான்;
மோதினன்; மோத முனிந்தார்
ஏதியும் நாளும் இழந்தார்.
55

உரை
   
 
6084.நூறிட மாருதி நொந்தார்
ஊறிட ஊன் இடு புண் நீர்
சேறு இட ஊரிடு செம்தீ
ஆறிட ஓடினது; ஆறாய்.
56

உரை
   
 
6085.தோற்றினர் துஞ்சினர் அல்லால்
ஏற்று இகல் வீரர் எதிர்ந்தார்;
காற்றின் மகன் கலை கற்றான்
கூற்றினும் மும்மடி கொன்றான்.
57

உரை
   
 
6086.மஞ்சு உறழ் மேனியர் வன் தோள்
மொய்ம்பினர் வீரர் முடிந்தார்
ஐம்பதினாயிரர் அல்லார்
பைம் புனல் வேலை படர்ந்தார்.
58

உரை
   
 
6087.தோய்த்தனன் வால் அது தோயக்
காய்த்திய வேலை கலந்தார்
போய்த்திலர் பொன்றினர் போனார்
ஏய்த்து என மைந்தர் எதிர்ந்தார்.
59

உரை
   
 
6088.சுற்றின தேரினர் தோலா
வில் தொழில் வீரம் விளைத்தார்
எற்றினன் மாருதி எற்ற
உற்று எழு வீரர் உலைந்தார்.
60

உரை
   
 
பிராட்டி தங்கும் சோலையில் தீ பரவாமை

6089.விட்டு உயர் விஞ்சையர் ‘வெம் தீ
வட்ட முலைத் திரு வைகும்
புள் திரள் சோலை புறத்தும்
சுட்டிலது ‘என்பது சொன்னார்.
61

உரை
   
 
பிராட்டியை அனுமன் வணங்கி மகிழ்தல்

6090.வந்து அவர் சொல்ல மகிழ்ந்தான்
வெம் திறல் வீரன் வியந்தான்
உய்ந்தனென் என்ன உவந்தான்
பைந்தொடி தாள்கள் பணிந்தான்.
62

உரை
   
 
பிராட்டி மகிழ அனுமன் மீளல

6091.பார்த்தனள் சானகி பாரா
வேர்த்து எரி மேனி குளிர்ந்தாள்;
‘வார்த்தை என்? ‘ ‘வந்தனை ‘என்னாப்
போர்த் தொழில் மாருதி போனான்.
63

உரை
   
 
அனுமன் செல்ல அழல் மறைதல்

6092.‘தெள்ளிய மாருதி சென்றான்
கள்ள அரக்கர்கள் கண்டால்
எள்ளலர் பற்றுவர் ‘என்னா
ஒள் எரியோனும் ஒளித்தான்.
64

உரை