6186.ஒன்றே என்னின் ஒன்று ஏ ஆம்,
    பல என்று உரைக்கின் பல ஏ ஆம்,
அன்றே என்னின் அன்றேயாம்,
    ஆமே என்னின் ஆம் ஏ ஆம்,
இன்றே என்னின் இன்றேயாம்,
    உளது என்று உரைக்கில் உளதேயாம்,
நன்றே நம்பி குடிவாழ்க்கை!
    நமக்கு இங்கு என் ஓ! பிழைப்பு? அம்மா!
1

உரை