இராமன் கடலைக் கடக்கும் உபாயத்தைச் சிந்திக்குமாறு வீடணனுக்குக் கூறுதல்

6718.‘தொடக்கும் என்னின் இவ் உலகு ஒரு
    மூன்றையும் தோளால்
அடக்கும் வண்ணமும் அழித்தலும்
    ஒரு பொருள் அன்றால்;
கிடக்கும் வண்ண வெங் கடலினைக்
    கிளர் பெருஞ் சேனை
கடக்கும் வண்ணமும் எண்ணுதி
    எண்ணு நூல் கற்றாய்! ‘
1

உரை
   
 
வீடணன் கடலை இரந்து வழிவேண்டுமாறு
இராமனுக்குக் கூறுதல்

6719.‘கரந்து நின்ற நின் தன்மையை,
    அது செலக் கருதும்;
பரந்தது உன் திருக் குல முதல்
    தலைவரால்; பரிவாய்
வரம் தரும், இந்த மாக் கடல்;
    படை செல, வழி வேறு
இரந்து வேண்டுதி எறிதிரைப்
    பரவையை ‘என்றான்.
2

உரை
   
 
வீடணன் மொழியை இராமன் ஏற்றுக் கொள்ளுதல்

6720.‘நன்று இலங்கையர் நாயகன்
    மொழி ‘என நயந்தான்,
ஒன்று தன் பெருந் துணைவரும்
    புடை செல, உரவோன்,
சென்று வேலையைச் சேர்தலும்,
    விசும்பு இடை, சிவந்த
குன்றின் மேல் நின்று குதித்தன
    பகலவன் குதிரை.
3

உரை
   
 
இருள் புலர்தல்

6721.கொழுங் கதிர்ப் பகைக் கோள் இருள்
    நீங்கிய கொள்கை,
செழுஞ் சுடர்ப் பனிக் கலை எலாம்
    நிரம்பிய திங்கள்
புழுங்கு வெஞ் சினத்து அஞ்சனப்
    பொறிவரி அரவம்
விழுங்கி நீங்கியது ஒத்தது,
    வேலை சூழ் ஞாலம்.
4

உரை
   
 
இராமன் வருண மந்திரத்தை எண்ணுதல்

6722.‘தருண மங்கையை மீட்பது ஓர்
    நெறி தருக! ‘என்னும்
பொருள் நயந்து, நல் நூல் நெறி
    அடுக்கிய புல்லில்,
கருணை அம் கடல் கிடந்தனன்,
    கருங்கடல் நோக்கி;
வருண மந்திரம் எண்ணினன்,
    விதிமுறை வணங்கி.
5

உரை
   
 
ஏழுநாள் எண்ணியும் வருணன் வாராமை

6723.பூழி சென்று தன் திரு உருப்
    பொருந்தவும், புரைதீர்
வாழி வெங்கதிர் மணிமுகம்
    வருடவும், வளர்ந்தான்;
ஊழி சென்றன ஒப்பு என,
    ஒரு பகல்; அவை ஓர்
ஏழு சென்றன; வந்திலன்,
    எறி கடற்கு இறைவன்.
6

உரை
   
 
இராமன் சினங்கொளல்

6724.‘ஊற்றம் மீக் கொண்ட வேலையான்,
    ‘உண்டு ‘“இலை “ என்னும்
மாற்றம் ஈக்கவும் பெற்றிலம்,
    யாம் ‘எனும் மனத்தால்,
ஏற்றம் மீக் கொண்ட புனலிடை
    எரி முளைத் தனெ்னச்
சீற்றம் மீக் கொண்டு சிவந்தன,
    தாமரைச் செங்கண்.
7

உரை
   
 
இராமன் சினத்தால் புருவம் வளைதல்

6725.‘மாண்ட இல் இழந்து அயரும் நான்,
    வழி, தனை வணங்கி,
வேண்ட, “இல்லை “ என்று ஒளித்தது ஆம் ‘
    என மனம் வெதும்ப,
நீண்ட வில் உடை நெடுங் கனல்
    உயிர்ப்பொடு நெடுநாண்
பூண்ட வில் எனக் குனித்தன,
    கொழுங்கடைப் புருவம்.
8

உரை
   
 
இராமனது சினச் சிரிப்பு

6726.“ஒன்றும் வேண்டலர் ஆயினும்,
    ஒருவர் பால் ஒருவர்,
சென்று வேண்டுவரேல் அவர்
    சிறுமையில் தீரார்;
இன்று வேண்டியது எறிகடல்
    நெறிதனை மறுத்தான்;
நன்று! நன்று! ‘என நகையொடும்
    புகை உக நக்கான்.
9

உரை
   
 
இராமன் சின மொழி (6727-6731)

6727.“‘பாரம் நீங்கிய சிலையினன்,
    இராவணன் பறிப்பத்
தாரம் நீங்கிய தன்மையன்,
    ஆதலின், தகைசால்
வீரம் நீங்கிய மனிதன் ‘‘ என்று
    இகழ்ச்சி மேல் விளைய,
ஈரம் நீங்கியது, எறிகடல் ஆம் ‘
    என இசைத்தான்.
10

உரை
   
 
6728.புரந்து கோடலும், புகழொடு
    கோடலும் பொருது,
துரந்து கோடலும் என்று இவை
    தொன்மையின் தொடர்ந்த;
இரந்து கோடலின் இயற்கையும்
    தருமமும் எஞ்சக்
கரந்து கோடலே நன்று; இனி
    நின்றது என் கழறி?
11

உரை
   
 
6729.“‘கான் இடைப் புகுந்து, இருங் கனி
    காயொடு நுகர்ந்த
ஊன் உடைப் பொறை உடம்பினன் ‘‘
    என்று கொண்டு உணர்ந்த
மீனுடைக் கடல் பெருமையும்,
    வில்லொடு நின்ற
மானுடச் சிறு தன்மையும்,
    காண்பரால், வானோர்.
12

உரை
   
 
6730.‘ஏதம் அஞ்சி, நான் இரந்ததே,
    “எளிது “ என இகழ்ந்த
ஓதம் அஞ்சினோடு இரண்டும்
    வெந்து ஒரு பொடி ஆகப்
பூதம் அஞ்சும் வந்து அஞ்சலித்து
    உயிர் கொண்டு பொரும,
பாதம் அஞ்சலர் செஞ்செவே
    படர்வர், என் படைஞர்.
13

உரை
   
 
6731.‘மறுமை கண்ட மெய்ஞ் ஞானியர்
    ஞாலத்து வரினும்,
வெறுமை கண்ட பின், யாவரும்
    யார் என, விரும்பார்;
குறுமை கண்டவர் கொழுங்கனல்
    என்னினுங் கூசார்;
சிறுமை கண்டவர் பெருமை
    கண்டு அல்லது தேறார்.
14

உரை
   
 
6732.திருதி என்பது ஒன்று அழிதர,
    ஊழியில் சினவும்
பருதி மண்டிலம் எனப் பொலி
    முகத்தினன் பலகால்
‘தருதி வில் ‘எனும் அளவையில்,
    தம்பியும் வெம்பிக்
குருதி வெங்கனல் உமிழ்கின்ற
    கண்ணினன் கொடுத்தான்.
15

உரை
   
 
6733.வாங்கி வெஞ்சிலை வாளி பெய்
    புட்டிலும் மலைபோல்
வீங்கு தோள் அயல் வீக்கினன்
    கோதையின் விரலால்
தாங்கி நாணினைத் தாக்கினன்
    தாக்கிய தமரம்
ஓங்கு முக்கணான் தேவியைத்
    தீர்த்துளது ஊடல்.
16

உரை
   
 
இராமனம்பு விடுதல் (6734-6735)

6734.மாரியின் பெருந் துளியினும் வரம்பு இல வடித்த
சீரிது என்றவை எவற்றினும் சீரிய தரெிந்து
பார் இயங்கு இரும்புனல் எலாம் முடிவினில் பருகும்
சூரியன் கதிர் அனையன சுடுசரம் துரந்தான்.
17

உரை
   
 
6735.பெரிய மால்வரை ஏழினும்
    பெருவலி பெற்ற
வரி கொள் வெஞ் சிலை
    வளர் பிறையாம் என வாங்கித்,
திரிவ நிற்பன யாவையும்
    முடிவினில் தீக்கும்
எரியின் மும்மடி கொடியன
    சுடு சரம் எய்தான்.
18

உரை
   
 
இராமன் அம்பால் கடல் பட்டபாடு (6736-6772)

6736.மீனும் நாகமும் விண்தொடு
    மலைகளும் விறகா
ஏனை நிற்பன யாவையும்
    மேல் எரி எய்த,
பேன நீர் நெடு நெய் என,
    பெய்கணை நெருப்பாக்
கூனை அங்கியின் குண்டம் ஒத்தது,
    கடற் குட்டம்.
19

உரை
   
 
6737.பாழி வல் நெடுங் கொடுஞ்சிலை
    வழங்கிய பகழி,
ஏழு வேலையும் எரியொடு
    புகை மடுத்து ஏகி,
ஊழி வெங் கனல் கொழுந் துகள்
    உருத்து எழுந்து ஓடி,
ஆழி மால்வரைக்கு அப்புறத்து
    இருளையும் அவித்த.
20

உரை
   
 
6738.மரும தாரையின் எரி உண்ட
    மகரங்கள் மயங்கிச்
செரும, வான் இடை கற்பக
    மரங்களும் தீய,
நிருமியா விட்ட நெடுங் கணை
    பாய்தலின், நெருப்போடு
உருமு வீழ்ந்தனெச், சென்றன,
    கடல்துளி உம்பர்.
21

உரை
   
 
6739.கூடும் வெம்பொறிக் கொடுங்கனல்
    தொடர்ந்தன கொளுத்த,
ஓடும் மேகங்கள் பொரிந்து இடை
    உதிர்ந்தன; உம்பர்
ஆடும் மங்கையர் கருங் குழல்
    விளர்த்தன அளக்கர்க்
கோடு நீத்து எழு கொழும்புகைப்
    பிழம்பு மீக் கொள்ள.
22

உரை
   
 
6740.நிமிர்ந்த செஞ்சரம் நிறம்தொறும்
    படுதலும், நெய்த்தோர்
உமிழ்ந்து உலந்தன மகரங்கள்
    உலப்பு இல; உருவத்
துமிந்த துண்டமும் பலபடத்
    துரந்தன, தொடர்ந்து
திமிங்கிலங்களும் திமிங்கில
    கிலங்களும் சிதறி.
23

உரை
   
 
6741.நீறு மீச்செல நெருப்பு எழப்
    பொருப்பு எலாம் எரிய,
நூறும் ஆயிர கோடியும்
    கடுங் கணை நுழைய,
ஆறு கீழ்ப்பட அளறுபட்டு
    அழுந்திய அளக்கர்ச்
சேறு தீய்ந்தன; காந்தின
    சேடன் தன் சிரங்கள்.
24

உரை
   
 
6742.மொய்த்த மீன்குலம் முதல் அற
    முருங்கின, மொழியின்
பொய்த்த சான்றவன் குலம் என,
    பொருகணை எரிய;
உய்த்த கூம்புடை நெடுங் கலம்
    ஓடுவ கடுப்ப,
தய்த்த அம்பொடும் திரிந்தன
    தால மீன் சாலம்.
25

உரை
   
 
6743.சிந்தி ஓடிய குருதி வெங் கனலொடு செறிய,
அந்தி வானகம் கடுத்தது, அவ் அளப்பரும் அளக்கர்;
பந்தி பந்திகளாய் நெடுங் கடுங்கணை படர,
வெந்து தீந்தன, கரிந்தன, பொரிந்தன சிலமீன்.
26

உரை
   
 
6744.வைய நாயகன் வடிக்கணை குடித்திட வற்றி
ஐய நீர் உடைத்தாய் மருங்கு அருங்கனல் மண்ட
கைகலந்து எரி கரும் கடல் கார் அகல் கடுப்ப
வெய்ய நெய்யிடை வேவன ஒத்தன சிலமீன்.
27

உரை
   
 
6745.குணிப்பருங் கொடும் பகழிகள் குருதிவாய் மடுப்பக்
கணிப்பரும் புனல் கடையுறக் குடித்தலின் காந்தும்
மணிப் பருந்தடங் குப்பைகள் மறிகடல் வெந்து
தணிப்பருந் தழல் சொரிந்தன போன்றன தயங்கி.
28

உரை
   
 
6746.எங்கும் வெள்ளிடைப் படுத்தலின்,
    இழுதுடை இனமீன்
சங்கமும், கறி கிழங்கு என,
    இடை இடைத் தழுவி,
அங்கம் வெந்து பேர் அளறு இடை
    அடுக்கிய கிடந்த;
பொங்கு நல் நெடும் புனல் அறப்
    பொரிந்தன போன்ற.
29

உரை
   
 
6747.அதிரும் வெங்கணை ஒன்றை ஒன்று
    அடர்ந்து எரி உய்ப்ப,
வெதிரின் நல் நெடுங் கான் என
    வெந்தன, மீனம்;
பொதுவின் மன்னுயிர்க் குலங்களும்
    துணிந்தன பொழிந்த
உதிரமும் கடல் திரைகளும்
    பொருவன, ஒருபால்.
30

உரை
   
 
6748.அண்ணல் வெங் கணை அறுத்திட,
    தறெித்து எழுந்து அளக்கர்ப்
பண்ணை வெம்புனல் படப் பட,
    நெருப்பொடும் பற்றி,
மண்ணில் வேர் உறப் பற்றிய
    நெடுமரம், மற்றும்,
எண்ணெய் தோய்ந்து என எரிந்தன,
    கிரிக் குலம் எல்லாம்.
31

உரை
   
 
6749.தயெ்வ நாயகன் தரெிகணை,
    ‘திசைமுகத்து ஒருவன்
வைவு இது ஆம் என, பிழைப்பு இல
    மனத்தினும் கடுக,
வெய்ய அந்நெருப்பு இடை இடை
    பொறிந்து எழ வெறிநீர்ப்
பொய்கை தாமரை பூத்து எனப்
    பொலிந்தது புணரி.
32

உரை
   
 
6750.செப்பின் மேலவர் சீறினும்
    அது சிறப்பு ஆதல்
தப்புமே? அது கண்டனம்
    உவரியில்; ‘தணியா
உப்பு வேலை ‘என்று உலகு உறு
    பெரும்பழி நீங்கி,
அப்பு வேலையாய் நிறைந்தது;
    குறைந்ததோ, அளக்கர்?
33

உரை
   
 
6751.தாரை உண்ட பேர் அண்டங்கள்
    அடங்கலும் தானே
வாரி உண்டு அருள் செய்தவற்கு
    இது ஒரு வலியோ?
பாரை உண்பது படர்புனல்;
    அப்பெரும் பரவை
நீரை உண்பது நெருப்பு எனும்
    அப்பொருள் நிறுத்தான்!
34

உரை
   
 
6752.மங்கலம் பொருந்திய தவத்து மாதவர்
கங்குலும் பகலும் அக்கடலுள் வைகுவார்
அங்கம் வெந்திலர் அவன் அடிகள் எண்ணலால்;
பொங்கு வெங்கனல் எனும் புனலில் போயினார்.
35

உரை
   
 
6753.தனெ்திசை குடதிசை முதல திக்கு எலாம்
துன்றிய பெரும்புகைப் படலம் சுற்றலால்
கன்றிய நிறத்தன கதிரவன் பரி
நின்றன; சென்றில; நெறியின் நீங்கின.
36

உரை
   
 
சக்கரவாகம்

6754.பிறிந்தவர்க்கு உறுதுயர் உணரும் பெற்றியால்
அறிந்திருந்து அறிகிலர் அனையர் ஆம் எனச்
செறிந்த தம் பெடைகளைத் தேடித் தீக் கொள
மறிந்தன கரிந்தன வாளப் புள் எலாம்.
37

உரை
   
 
தேவர்கள்

6755.கமை அறு கருங் கடல் கனலி கைபரந்து
அமை வனம் ஒத்த போது அறைய வேண்டுமோ?
சுமை உறு பெரும்புகைப் படலம் சுற்றலால்
இமையவர் இமைத்தனர் வியர்ப்பும் எய்தினார்.
38

உரை
   
 
6756.பூச் செலாதவள் நடை போல்கிலாமையால்
ஏச்சு எலாம் எய்திய எகினம் யாவையும்;
தீ செலா நெறி பிறிது இன்மையால் திசை
மீச்செலா; புனலவன் புகழின் வீந்தவால்.
39

உரை
   
 
கடற்பறவைகளும் மேகமும்

6757.பம்புறும் நெடுங்கடல் பறவை யாவையும்
உம்பரின் செல்லல் உற்று உருகி வீழ்ந்தன;
அம்பரம் அம்பரத்து ஏகல் ஆற்றல
இம்பரில் உதிர்ந்தன எரியும் மெய்யன.
40

உரை
   
 
இறவாத பறவைகளின் மயக்கம்

6758.பட்டன படப்பட படாத புட்குலம்
சுட்டு வந்து எரிக் கனல் படலம் சுற்றலால்
இட்டுழி அறிகில இரியல் போவன
முட்டை என்று எடுத்தன வெளுத்த முத்து எலாம்.
41

உரை
   
 
நீர்க்குரங்குகளின் செயல்

6759.‘வள்ளலைப் பாவியேம் “மனிசன் ” என்று கொண்டு
எள்ளல் உற்று உறைந்தனம்; எண் இலாம் ‘என
வெள்ளி வெண் பற்களைக் கிழித்து விண் உறத்
துள்ளலுற்று இரிந்தன குரங்கு சூழ்ந்தில.
42

உரை
   
 
கடலிலுள்ள அவுணர் நிலை

6760.தாம் நெடுந் தீமைகள் உடைய தன்மையார்
மாநெடுங் கடல் இடை மறைந்து வைகுவார்
தூநெடுங் குருதி வேல் அவுணர் துஞ்சினார்;
மீ நெடுங் கிரி என மிதந்து வீங்கினார்.
43

உரை
   
 
விமானம் முதலியவற்றின் நிலை

6761.தசும்பு இடை விரிந்தன என்னும் தாரைய
பசும் பொனின் மானங்கள் உருகிப் பாய்ந்தன;
அசும்பு அற வறந்தன வான ஆறு எலாம்;
விசும்பிடை விளங்கிய மீனும் வெந்தவே.
44

உரை
   
 
6762.செறிவுறு செம்மைய தீயை ஓம்புவ
நெறியுறு செலவின தவத்தின் நீண்டன.
உறுசினம் உறப் பல உருவு கொண்டன
குறு முனி எனக் கடல் குடித்த கூர்ங்கணை.
45

உரை
   
 
6763.மோதல் அம் கனைகடல் முருக்கும் தீயினால்
பூதலம் காவொடும் எரிந்து பொன்மதில்
வேதலும் இலங்கையும் மீளப் போயின
தூதன் வந்தான் எனத் துணுக்கம் கொண்டதால்.
46

உரை
   
 
6764.அருக்கனில் ஒளிவிடும் ஆடகக் கிரி
உருக்கு என உருகின உதிரம் தோய்ந்தன
முருக்கு எனச் சிவந்தன; முரிய வெந்தன
கரிக் குவை நிகர்த்தன பவளக் காடு எலாம்.
47

உரை
   
 
6765.பேருஉடைக் கிரி எனப் பெருத்த மீன்களும்
ஓர் இடத்து உயிர் தரித்து ஒதுங்க கிற்றில
நீரிடைப் புகும் அதின் நெருப்பு நன்று எனாப்
பாரிடைக் குதித்தன பதைக்கும் மெய்யன.
48

உரை
   
 
6766.சுருள்கடல் திரைகளைத் தொலைய உண்டு அனல்
பருகிடப் புனலில பகழி பார் இடம்
மருள் கொளப் படர்வன நாகர் வைப்பு எலாம்
இருள் கெடச் சென்றன இரவி போல்வன.
49

உரை
   
 
6767.கரும்புறக் கடல்கேளாடு உலகம் காய்ச்சிய
இரும்பு உறச் செல்வன இழிவ கீழ் உற
அரும் புறத்து அண்டமும் உருவி அப்புறம்
பெரும்புறக் கடலையும் தொடர்ந்து பின்செல்வ.
50

உரை
   
 
மணிகளும் பாம்புகளும்

6768.திடல் திறந்து உகும் மணித் திரள்கள் சேண்நிலம்
உடல் திறந்து உதிரம் வந்து உகுவ போன்றன
கடல் திறந்து எங்கணும் வற்ற அக்கடல்
குடல் திறந்தன எனக் கிடந்த கோள் அரா.
51

உரை
   
 
மணியும் சங்கும்

6769.ஆழியின் புனல் அற மணிகள் அட்டிய
பேழையின் பொலிந்தன பரவை; பேர்வு அறப்
பூழையின் பொருகணை உருவப் புக்கன
மூழையின் பொலிந்தன முரலும் வெள்வளை.
52

உரை
   
 
குன்றும் முத்தும்

6770.நின்று நூறாயிரம் பகழி நீட்டலால்
குன்று நூறாயிரம் கோடி ஆயின;
சென்று தேய்வு உறுவரோ புலவர் சீறினால்?
ஒன்று நூறு ஆயின உவரி முத்து எலாம்
53

உரை
   
 
உயிர்களும் நெருப்பும்

6771.சூடு பெற்று ஐயனே தொலைக்கும் மன்னுயிர்
வீடு பெற்றன; இடை மிடைந்த வேணுவின்
காடுபற்றிய பெருங் கனலின் கைபரந்து
ஓடி உற்றது நெருப்பு உவரி நீர் எலாம்.
54

உரை
   
 
கணை சுற்றும் கவ்விய கடல்

6772.காலவான் கடுங் கணை சுற்றும் கவ்வலால்
நீல வான் துகிலினை நீக்கிப் பூ நிறக்
கோலவான் தனி நெடுங் கூறை சுற்றினாள்
போல மாநில மகள் பொலிந்து தோன்றினாள்.
55

உரை
   
 
வடவைக் கனல்

6773.கற்றவர் கற்றவர் உணர்வு காண்கிலாக்
கொற்றவன் படைக்கலம் குடித்த வேலை விட்டு
உற்று உயிர் படைத்து எழுந்து ஓடல் உற்றதால்
மற்றொரு கடல்புக வடவைத் தீயரோ.
56

உரை
   
 
அனற் கொழுந்து

6774.வாழியர் உலகினை வளைத்து வான் உறச்
சூழ் இரும் பெருஞ் சுடர்ப் பிழம்பு தோன்றலால்
ஊழியின் உலகு எலாம் உண்ண ஓங்கிய
ஆழியின் பொலிந்தது அவ் ஆழி அன்ன நாள்.
57

உரை
   
 
6775.ஏனையர் என்ன வேறு உலகின் ஈண்டினார்
ஆனவர் செய்தன அறைய வேண்டுமோ?
மேல் நிமிர்ந்து எழுகனல் வெதுப்ப மீதுபோய்
வானவர் மலர் அயன் உலகின் வைகினார்.
58

உரை
   
 
இராமன் சதுமுகன் கணையைத் தொடுத்தல்

6776.‘இடுக்கு இனி எண்ணுவது என்னை? ஈண்டு இனி
முடுக்குவென் வருணனை ‘என்ன மூண்டு எதிர்
தடுக்க அரும் வெகுளியன் சதுமுகன் படை
தொடுத்தனன்; அமரரும் துணுக்கம் எய்தினார்.
59

உரை
   
 
பிரமன் கணை தொடுத்தமையால்
தோன்றிய விளைவுகள்

6777.மழைக் குலம் கதறின; வருணன் வாய் உலர்ந்து
அழைத்தனன்; உலகமும் அடைத்த ஆறு எலாம்;
இழைத்தன நெடுந்திசை யாதும்; யார் இனிப்
பிழைப்பவர்? என்பது ஓர் பெரும் பயத்தினால்.
60

உரை
   
 
பெரும் புறக்கடல் முதலியன கொதித்தல்

6778.அண்ட மூலத்துக்கு அப்பால் ஆழியும் கொதித்தது; ஏழு
தணெ் திரைக் கடலின் செய்கை செப்பி என்? தேவன் சென்னிப்
பண்டைநாள் இருந்த கங்கை நங்கையும் பதைத்தாள்; பார்ப்பான்
குண்டிகை இருந்த நீரும் குளுகுளு கொதித்தது அன்றே.
61

உரை
   
 
வருணன் வாராமை கண்டு அறிஞர் அலக்கணுறுதல்

6779.இரக்கம் வந்து எதிர்ந்த காலத்து
    உலகு எலாம் ஈன்று மீளக்
கரக்கும் நாயகனைத் தானும்
    உணர்ந்து இவன் சீற்றம் கண்டும்
வரக் கருதாது தாழ்த்த
    வருணனின் மாறு கொண்ட
அரக்கரே நல்லர் என்னா
    அறிஞரும் அலக்கண் உற்றார்.
62

உரை
   
 
வருணனைப் பிற பூதங்கள் வைதல்

6780.‘உற்று ஒரு தனியே, தானே,
    தன்கணே, உலகம் எல்லாம்
பெற்றவன் முனியப் புக்கால்
    நடு இனிப் பிழைப்பது எங்ஙன்?
குற்றம் ஒன்று இலாதோர்மேலும்
    கோள் வரக் குறுகும் ‘என்னா,
மற்றைய பூதம் எல்லாம்,
    வருணனை வைத மாதோ.
63

உரை
   
 
வருணன் தொழுத கையொடு தோன்றுதல்

6781.எழுசுடர்ப் படலையோடும்
    இரும்புகை நிரம்பி எங்கும்
வழி தரெிவு அறிகிலாத
    நோக்கினன் வருணன் என்பான்,
அழுது அழி கண்ணன், அன்பால்
    உருகிய நெஞ்சன், அஞ்சித்
தொழுது எழு கையன், நொய்தின்
    தோன்றினன், வழுத்தும் சொல்லான்.
64

உரை
   
 
வருணன் பணிவுரை பகர்ந்து செல்லுதல் (6782-6783)

6782.‘நீ எனை நினைந்த தன்மை,
    நெடுங் கடல் முடிவில் நின்றேன்
ஆயினேன் அறிந்திலேன் ‘என்று
    அண்ணலுக்கு அயிர்ப்பு நீங்க,
காய் எரிப் படலை சூழ்ந்த
    கருங்கடல் தரங்கத் தூடே,
தீ இடை நடப்பான் போலச்
    செறிபுனற்கு இறைவன் சென்றான்.
65

உரை
   
 
6783.வந்தனன் என்ப மன்னோ
    மறி கடற்கு இறைவன்; வாயில்
சிந்திய மொழியன், தீந்த
    சென்னியன், திகைத்த நெஞ்சன்,
வெந்து அழிந்து உருகும் மெய்யன்,
    விழுப் புகைப் படலம் விம்ம,
அந்தரின் அலமந்து, அஞ்சி,
    துயர் உழந்து, அலக்கண் உற்றான்.
66

உரை
   
 
வருணன் இராமனிடம் அடைக்கலம் புகுதல்

6784.‘நவை அறும் உலகிற்கு எல்லாம்
    நாயக! நீயே சீறின்,
கவயம் நின் சரணம் அல்லால்,
    பிறிது ஒன்று கண்டது உண்டோ?
இவை உனக்கு அரியவோதான்;
    எனக்கு என வலி வேறு உண்டோ?
அவயம், நின் அவயம்! ‘என்னா,
    அடுத்து அடுத்து அரற்றுகின்றான்.
67

உரை
   
 
வருணன் இராமனைத் துதித்தல் (6785-6791)

6785.‘ஆழி நீ; அனுலும் நீயே;
    அல்லவை எல்லாம் நீயே;
ஊழி நீ; உலகும் நீயே;
    அவற்று உறை உயிரும் நீயே;
வாழியாய்! அடியேன் நின்னை
    மறப்பெனோ? வயங்கு செந்தீச்
சூழ் உற உலைந்து போனேன்;
    காத்தருள் சுருதி மூர்த்தி.
68

உரை
   
 
6786.‘காட்டுவாய் உலகம்; காட்டிக் காத்து,
    அவை கடையில் செந்தீ
ஊட்டுவாய்; உண்பாய், நீயே;
    உனக்கும் ஒண்ணாதது உண்டோ?
தீட்டு வான் பகழி ஒன்றால்
    உலகங்கள் எவையும் தீய
வீட்டுவாய் நினையின்; நாயேற்கு
    இத்தனை வேண்டுமோ தான்?
69

உரை
   
 
6787.சண்ட வான் கிரண வாளால்
    தயங்கு இருள் காடு சாய்க்கும்
மண்டலத்து உறையும் சோதி
    வள்ளலே! மறையின் வாழ்வே!
பண்டை நான்முகனே ஆதி
    சராசரத்து உள்ளப் பள்ளப்
புண்டரீகத்து வைகும்
    புராதன! போற்றி, போற்றி!
70

உரை
   
 
6788.“கள்ளமாய் உலகங் கொள்ளும்
    கருணையாய்! மறையில் கூறும்
எள்ளல் ஆகாத மூலத்து
    யாதுக்கும் முதலாய் உள்ள
வள்ளலே! காத்தி ‘‘ என்ற
    மாகரி வருத்தம் தீரப்
புள்ளின்மேல் வந்து தோன்றும்
    புராதனா! போற்றி, போற்றி!
71

உரை
   
 
6789.‘அன்னை நீ; அத்தன் நீயே;
    அல்லவை எல்லாம் நீயே;
பின்னும் நீ; முன்னும் நீயே;
    பேறும் நீ; இழவும் நீயே;
என்னை, ‘நீ இகழ்ந்தது ‘என்றது
    எங்ஙனே? ஈசன் ஆய
உன்னை நீ உணராய்! நாயேன்
    எங்ஙனம் உணர்வேன், உன்னை? ‘
72

உரை
   
 
6790.பாய் இருள் சீக்கும் தயெ்வப்
    பரிதியைப் பழிக்கும் மாலை
மா இருங் கரத்தால், மண்மேல்
    அடியுறையாக வைத்து,
“தீயன சிறியோர் செய்தால்,
    பொறுத்தலே பெரியோர் செய்கை
ஆயிர நாமத்து ஐயா!
    சரணம் ‘‘ என்று அடியில் வீழ்ந்தான்.
73

உரை
   
 
6791.பருப்பதம் வேவது என்னப்
    படர் ஒளி படரா நின்ற
உருப்பெறக் காட்டி நின்று,
    ‘யான் உனக்கு அபயம் ‘என்ன,
அருப்பு உறப் பிறந்த கோபம்
    ஆறினான், ஆறா ஆற்றல்
நெருப்பு உறப் பொங்கும் வெம்பால்
    நீர் உற்றது அனைய நீரான்.
74

உரை
   
 
இராமன் அபயம் அளித்து வருணன் வாராமைக்குக் காரணம் வினவுதல்

6792.‘ஆறினாம்; அஞ்சல்; உன்பால்
    அளித்தனம் அபயம்; அன்பால்
ஈறு இலா வணக்கம் செய்து,
    யாம் இரந்திட, எய்தாதே,
சீறுமா கண்டு வந்த
    திறத்தினைத் தரெிவதாகக்
கூறு நீ, அறிஞ ‘என்றான்;
    வருணனும், தொழுது கூறும்.
75

உரை
   
 
வருணன் வாராமைக்குக் காரணம் கூறுதல்

6793.‘பார்த்தனில் பொறையின் மிக்க
    பத்தினிக்கு உற்ற பண்பு
வார்த்தையின் அறிந்தது அல்லால்,
    தேவர்பால் வந்திலேன், நான்;
தீர்த்த! நின் ஆணை, ஏழாம்
    செறிதிரைக் கடலில் மீனின்,
போர்த் தொழில் விலக்கப் போனேன்
    அறிந்திலேன், புகுந்தேன் ‘என்றான
76

உரை
   
 
இராமன் தன் அம்பிற்கு இலக்குயாதனெ வருணன் கூறுதல் (6794-6795)

6794.என்றலும், இரங்கி, ஐயன்,
    ‘இத்திறம் நிற்க இந்தப்
பொன்றல் இல் பகழிக்கு அப்பால்
    இலக்கம் என்? புகறி ‘என்ன
வன்திறல் வருணன் யானும்
    உலகமும் வாழ்ந்தோம் ‘என்னக்
குன்று என உயர்ந்த தோளாய்!
    கூறுவல் என்று கூறும்.
77

உரை
   
 
வருணன் இலக்கு இது எனல்

6795.‘மன்னவ! மருகாந்தாரம்
    என்பது ஓர் தீவின் வாழ்வார்,
அன்னவர் சத கோடிக்கும்
    மேல் உளர், அவுணர் ஆயோர்,
தின்னவே உலகம் எல்லாம்
    தீந்தன; எனக்கும் தீயார்;
மின் உமிழ் கணையை வெய்யோர்
    மேல் செல விடுதி ‘என்றான்.
78

உரை
   
 
இராமபாணம் அவுணரை அழித்து மீளல்

6796.நேடி நூல் தரெிந்துேளார் தம்
    உணர்விற்கும், நிமிர நின்றான்,
‘கோடி நூறு ஆய தீய
    அவுணரைக் குலங்கேளாடும்
ஓடி நூறு ‘என்று விட்டான்;
    ஓர் இமை ஒடுங்கா முன்னம்
பாடி நூறு ஆக நூறி மீண்டது
    அப் பகழித் தயெ்வம்.
79

உரை
   
 
தீங்கினைச் செய்தவரே தீங்குற்றார்

6797.ஆய்வினை உடையர் ஆகி,
    அறம் பிழையாதார்க்கு எல்லாம்
ஏய்வன நலனே அன்றி,
    இறுதி வந்து அடைவது உண்டோ?
மாய்வினை இயற்றி, முற்றும்
    வருணன்மேல் வந்த சீற்றம்,
தீவினை உடையார்மாட்டே
    தீங்கினைச் செய்தது அன்றே.
80

உரை
   
 
தருமமே வலியது

6798.பாபமே இயற்றினாரைப்,
    பல் நெடுங் காதம் ஓடித்,
தூபமே பெருகும் வண்ணம்,
    எரி எழச் சுட்டது அன்றே,
தீபமே அனைய ஞானத்
    திருமறை முனிவர் செப்பும்
சாபமே ஒத்தது அம்பு
    தருமமே வலியது அம்மா!
81

உரை
   
 
இராமன் வருணனை வழி வேண்டுதல்

6799.“மொழி ‘உனக்கு அபயம் ‘என்றாய்;
    ஆதலால், முனிவு தீர்ந்தேன்;
பழி எனக்கு ஆக என்று
    பாதகர் பரவை என்னும்
குழியினைக் கருதிச் செய்த
    குமண்டையைக் குறைத்து நீங்க
வழியினைத் தருதி ‘‘ என்றான்
    வருணனை நோக்கி வள்ளல்.
82

உரை
   
 
வருணன் காலம் நீடிக்கும் எனல்

6800.ஆழமும் அகலம் தானும்
    அளப்பு அரிது எனக்கும் ஐய!
ஏழ் என அடுக்கி நின்ற
    உலகுக்கும் எல்லை இல்லை;
வாழியாய்! வற்றி நீங்கில்,
    வரம்பு அறுகாலம் எல்லாம்
தாழும்; நின் சேனை உள்ளம்
    தளர்வுறும் தவத்தின் மிக்கோய்.
83

உரை
   
 
சேது கட்டிச் செல்லுக எனல்

6801.‘கல் என வலித்து நிற்பின்,
    கணக்கு இலா உயிர்கள் எல்லாம்
ஒல்லையின் உலந்து வீயும்;
    இட்டது ஒன்று ஒழுகாவண்ணம்
எல்லையில் காலம் எல்லாம்
    ஏந்துவென், எளிதின்; எந்தாய்!
செல்லுதி, “சேது “ என்று ஒன்று
    இயற்றி, என் சிரத்தின் என்றான். ‘
84

உரை
   
 
சேது கட்டுமாறு சேனைக்குப் பணித்தல்

6802.‘நன்று, இது புரிதும் அன்றே;
    நளிகடல் பெருமை நம்மால்
இன்று இது தீரும் என்னின்,
    எளிவரும் பூதம் எல்லாம்;
குன்று கொண்டு அடுக்கி, சேது
    குயிற்றுதிர் ‘என்று கூறிச்
சென்றனன் இருக்கை நோக்கி;
    வருணனும் அருளின் சென்றான
85

உரை