இந்திரசித்து வானரர் ஐயுற விண்ணிடைக் கரந்து இராவணனை அடைதல்

9253.விண்ணிடைக் கரந்தான் என்பார்,
    வஞ்சனை விளைக்கும் என்பார்,
கண்ணிடைக் கலங்கி நோக்கி,
    ஐயுறவு உழக்குங்காலை,
புண் உடை யாக்கைச் செந்நீர்
    இழிதர, புக்கு நின்ற
எண்ணுடை மகனை நோக்கி,
    இராவணன் இனைய சொன்னான்.
1

உரை
   
 
உற்றது சொல் என இராவணன் இந்திரசித்தினை
வினவுதல்

9254.‘தொடங்கிய வேள்வி முற்றப்
    பெற்றிலாத் தொழில், நின் தோள்மேல்
அடங்கிய அம்பே என்னை
    அறிவித்தது; அழிவு இல் யாக்கை
நடுங்கினை போலச் சாலத்
    தளர்ந்தனை; கலுழன் நண்ணப்
படம்குறை அரவம் ஒத்தாய்;
    உற்றது பகர்தி ‘என்றான்.
2

உரை
   
 
இந்திரசித்து சொல்வது (9254-9257)

9255.சூழ்வினை மாயை எல்லாம்
    உம்பியே துடைக்க, சுற்றி
வேள்ியைச் சிதைய நூறி
    வெகுளியால் எழுந்து வீங்கி,
ஆள்வினை ஆற்றல் தன்னால்
    அமர்த் தொழில் புக்கு நின்றான்;
தாழ்வு இலாப் படைகள் மூன்றும்
    தொடுத்தனென்; தடுத்து விட்டான்.
3

உரை
   
 
9256.‘நிலம்செய்து விசும்பும் செய்து,
    நெடியவன் படை, நின்றானை
வலம்செய்து போயிற்று என்றால்,
    மற்று இனி வலியது உண்டோ?
குலம் செய்த பாவத்தாலே
    கொடும்பகை தேடிக் கொண்டோம்
சலம்செயின் உலகம் மூன்றும்
    இலக்குவன் முடிப்பன், தானே.
4

உரை
   
 
9257.முட்டிய செருவில் முன்னம்
    முதலவன் படையை என்மேல்
விட்டிலன், உலகை அஞ்சி;
    ஆதலால், வென்று மீண்டேன்;
கிட்டிய போதும் காத்தான்;
    இன்னமும் கிளர்ப்பான் அல்லன்;
சுட்டிய வலியினாலே
    கோறலைத் துணிந்து நின்றான்.
5

உரை
   
 
9258.‘ஆதலால், “அஞ்சினேன் “ என்று
    அருளலை; ஆசைதான் அச்
சீதைபால் விடுதி ஆயின்,
    அனையவர் சீற்றம் தீர்வர்;
போதலும் புரிவர்; செய்த
    தீமையும் பொறுப்பர்; உன்மேல்
காதலால் உரைத்தேன் ‘என்றான்
    உலகு எலாம் கலக்கி வென்றான்.
6

உரை
   
 
இராவணன் சினந்து கூறுதல் (9258-9263)

9259.இயம்பலும் இலங்கை வேந்தன்
    எயிற்று இளநிலவு தோன்ற,
புயங்களும் குலுங்க நக்கு,
    ‘போர்க்கு இனி ஒழிதி போலாம்!
மயங்கினை; மனிசன் தன்னை
    அஞ்சினை வருந்தல்; ஐய!
சயம் கொடு தருவென், இன்றே,
    மனிசரைத் தனு ஒன்றாலே.
7

உரை
   
 
9260.‘முன்னையோர் இறந்தார் எல்லாம்
    இப்பகை முடிப்பர் என்றும்,
பின்னையோர், நின்றோர் எல்லாம்
    வென்றனர் பெயர்வர் என்றும்,
உன்னை “நீ அவரை வென்று
    தருதி “ என்று உணர்ந்தும் அன்றால்;
என்னையே நோக்கி, யான் இந்
    நெடும்பகை தேடிக் கொண்டேன்.
8

உரை
   
 
9261.‘பேதைமை உரைத்தாய்; பிள்ளாய்!
    உலகு எலாம் பெயரப், பேராக்
காதை என் புகழினோடு ‘
    நிலைபெற, அமரர் காண,
மீது எழும் மொக்குள் அன்ன
    யாக்கையை விடுவது அல்லால்,
சீதையை விடுவது உண்டோ,
    இருபது திண்தோள் உண்டாய்?
9

உரை
   
 
9262.‘வென்றிலென் என்ற போதும்
    வேதம் உள்ளளவும், யானும்
நின்றுளென் அன்றோ, மற்று
    அவ் இராமன் பேர் நிற்கும் ஆயின்?
பொன்றுதல் ஒருகாலத்தும்
    தவிருமோ? பொதுமைத்து அன்றோ?
இன்று உளார் நாளை மாள்வார்;
    புகழுக்கும் இறுதி உண்டோ?
10

உரை
   
 
9263.‘விட்டனென், சீதை தன்னை
    என்றலும் விண்ணோர் நண்ணி,
கட்டுவது அல்லால், என்னை
    யான் எனக் கருதுவாரோ?
“பட்டனென் “ என்றபோதும்,
    எளிமையின் படுகிலேன்யான்
எட்டினோடு இரண்டும் ஆன
    திசைகளை எறிந்து வென்றேன்.
11

உரை
   
 
9264.‘சொல்லி என், பலவும்? நீ நின்
    இருக்கையைத் தொடர்ந்து, தோளில்
புல்லிய பகழி வாங்கி,
    போர்த்தொழில் சிரமம் போக்கி,
எல்லியும் கழித்தி ‘என்னா,
    எழுந்தனன்; எழுந்து பேழ்வாய்
வல்லியம் முனிந்தால் அன்னான்,
    ‘வருக, தேர் தருக! ‘என்றான்.
12

உரை
   
 
போர்க்கு எழுந்த இராவணனைத் தடுத்து இந்திரசித்து போர்க்குப் புறப்படுதல்

9265.எழுந்தவன் தன்னை நோக்கி,
    இணை அடி இறைஞ்சி, ‘எந்தாய்!
ஒழிந்து அருள், சீற்றம்; சொன்ன
    உறுதியைப் பொறுத்தி; யான்போய்க்
கழிந்தனென் என்ற பின்னர்,
    ‘நல்லவா காண்டி ‘என்னா
மொழிந்து தன் தயெ்வத் தேர்மேல்
    ஏறினன், முடியலுற்றான்.
13

உரை
   
 
இந்திரசித்து தானம் செய்து விட்டு இராவணனை நோக்கிக் கண்ணீர் பெருக்கிக்கொண்டு போதல்

9266.படைக்கலம், விஞ்சை மற்றும்
    படைத்தன பலவும், தன்பால்
அடைக்கலம் ஆகத் தேவர்
    அளித்தன, எல்லாம் வாங்கி,
கொடைத்தொழில் வேட்டோர்க்கு எல்லாம்
    கொடுத்தனன் கொடியோன் தன்னைக்
கடைக் கணால் நோக்கி நோக்கி,
    இருகண் நீர் கலுழப் போனான்.
14

உரை
   
 
தன்னைத் தொடர்ந்த அரக்கியரை விலக்கி மன்னனைக் காக்குமாறு இந்திரசித்து கூறித் தேற்றுதல்

9267.இலங்கையின் நிருதர் எல்லாம்
    எழுந்தனர், விரைவின் எய்தி,
‘விலங்கல் அம் தோளாய்! நின்னைப்
    பிரிகலம்; விளிதும் ‘என்னா
வலங்கொடு தொடர்ந்தார் தம்மை,
    ‘மன்னனைக் காமின்; யாதும்
கலங்கலிர்; இன்றே, சென்று,
    மனிசரைக் கடப்பல் ‘என்றான்.
15

உரை
   
 
தன்னைச் சூழ்ந்துகொண்டு வருந்தும் அரக்கியரை நீங்கி இந்திரசித்து அரிதிற் செல்லுதல்

9268.வணங்குவார், வாழ்த்துவார், தன்
    வடிவனை நோக்கித் தம் வாய்
உணங்குவார், உயிர்ப்பார், உள்ளம்
    உருகுவார், வெருவலுற்றுக்
கணங்குழை மகளிர் ஈண்டி
    இரைத்தவர், கடைக்கண் என்னும்
அணங்கு உடை நெடுவேல் பாயும்
    அமர்கடந்து, அரிதின் போனான்.
16

உரை
   
 
இலக்குவன் இந்திரசித்தின் தேர் வரும் ஓசை கேட்டல்

9269.ஏயினன் இன்னன் ஆக,
    இலக்குவன் எடுத்த வில்லான்,
சேய் இரு விசும்பை நோக்கி
    ‘வீடண! தீயோன் அப்பால்
போயினன் ஆதல் வேண்டும்;
    புரிந்திலன் ஒன்றும் ‘என்பான்,
ஆயிரம் புரவி பூண்ட தேரின்
    பேர் அரவம் கேட்டான்.
17

உரை
   
 
இந்திரசித்தின் தேர் வருதல்

9270.குன்று இடை நெரிதர, வடவரையின்
    குவடு உருள்வது என முடுகுதொறும்
பொன்திணி கொடியது, இடி உருமின்
    அதிர்குரல் முரல்வது, புனைமணியின்
மின்திரள் சுடரது, கடல் பருகும்
    வட அனல் வெளி உற வருவது எனச்
சென்றது, திசை திசை உலகு இரிய
    திரிபுவனமும் உறுதனி இரதம்.
18

உரை
   
 
9271.கடல்மறுகிட, உலகு உலைய, நெடுங்
    கரி இரிதர, எதிர் கவிகுலமும்
குடல் மறுகிட, மலை குலைய, நிலம்
    குழியொடு கிழிபட, வழிபடரும்
இடம் மறுகிய பொடி முடுகிடவும்,
    இருள் உளது என எழும் இகல் அரவின்
படம்மறுகிட, எதிர்விரவியது அவ்
    இருள்பகல் உறவரு பகை இரதம்.
19

உரை
   
 
இந்திரசித்தும் இலக்குவனும் பொருதல்

9272.ஆர்த்தது நிருதர்தம் அனிகம்; உடன்,
    அமரரும் வெருவினர்; கவிகுலமும்
வேர்த்தது, வெருவலொடு அலம்வரலால்,
    விடுகணை சிதறினன்; அடுதொழிலோன்,
தீர்த்தனும், அவன் எதிர்முடுகி; நெடுந்
    திசைசெவிடு எறிதர, விசைகெழுதிண்
போர்த்தொழில் புரிதலும், உலகு கடும்
    புகையொடு சிகை அனல் பொதுளியதால
20

உரை
   
 
வீடணன் இலக்குவனுக்கு ஆலோசனை கூற அவன் கடும்போர் புரிதல்

9273.வீடணன் அமலனை, ‘விறல் கெழு போர்
    விடலையை இனி இடைவிடல் உளதேல்,
சூடலை, துறுமலர் வாகை ‘எனத்
    தொழுதனன்; அ(வ்) அளவில் அழகனும் அக்
கோடு அணை வரிசிலை உலகு உலைய,
    குலம் வரை விதிர்பட, நிலவரையில்
சேடனும் வெருவுற, உரும் உறழ்
    திண் தறெுகணை முறைமுறை சிதறினனால்.
21

உரை
   
 
9274.ஆயின அளவையின் அனல்முகவாய்
    அருகணை அவன்விட, இவன்விட, அத்
தீயினும் எரிவன உயிர்பருக,
    சிதறின கவிகேளாடு இன நிருதர்;
போயின போயின திசை நிறையப்
    புரள்பவர் முடிவிலர்; பொருதிறலோர்
ஏயினர், ஒருவரை ஒருவர் குறித்து,
    எரிகணை சொரிவன இருமழைபோல்.
22

உரை
   
 
9275.அற்றன, அனல்விழி நிருதன் வழங்கு
    அடுகணை இடை இடை : அடல் அரியின்
கொற்றவன் விடுகணை முடுகி, அவன்
    உடல்பொதி குருதிகள் பருகின கொண்டு
உற்றன; ஒளிகிளர் கவசம் நுழைந்து
    உறுகில; தறெுகில அனுமன் உடல்;
புற்றிடை அரவு என நுழைய நெடும்
    பொருசரம் அவன் அவை உணர்கிலனால்
23

உரை
   
 
9276.ஆயிடை, இளையவன், விடம் அனையான்
    அவன் இடு கவசமும் அழிவுபடத்
தூயினன், அயில்முக விசிகம் : நெடுந்
    தொளைபட, விழிகனல் சொரிய, முனிந்து,
ஏயின நிருதனது எரிகணைதான்
    இடன் இல படுவன இடை இடை வந்து
ஓய்வு உறுவன; அது தரெிவு உறலால்,
    உரறினர் இமையவர், உவகையினால்.
24

உரை
   
 
இந்திரசித்து விட்ட வேலினை இலக்குவன் துணித்தல்

9277.‘வில்லினின் வெல்லுதல் அரிது ‘எனலால்,
    வெயிலினும் அனல் உமிழ் அயில், விரைவில்
செல் என, மிடல் கொடு கடவினன்; மற்று
    அது திசைமுகன் மகன் உதவியதால்;
எல்லினும் வெளிபட எதிர்வது கண்டு,
    இளையவன் எழுவகை முனிவர்கள்தம்
சொல்லினும் வலியது ஓர் சுடுகணையால்,
    நடு இரு துணிபட உரறினனால்.
25

உரை
   
 
9278.ஆணியின் நிலை என விசிகம் நுழைந்து
    ஆயிரம் உடல்புக, அழிபடு செஞ்
சோணிதம் நிலம் உற உலறிடவும்,
    தொடுகணை விடுவன மிடல்கெழு திண்
பாணிகள் கடுகின முடுகிடலும்,
    பகலவன் மருமகன், அடுகணைவன்
தூணியை உரும் உறழ் பகழிகளால்
    துணிபட, முறைமுறை சிதறினனால்.
26

உரை
   
 
இலக்குவன் இந்திரசித்தின் தேர்ப்பாகனை வீழ்த்தல்

9279.‘தேர் உளது எனின், இவன்வலி தொலையான் ‘
    எனும் அது தரெிவு உற, உணர் உறுவான்
‘போர் உறு புரவிகள் படுகிலவால்;
    புனைபிணி துணிகில, பொருகணையால்;
சீரிது, பெரிது, இதன் நிலைமை ‘எனத்
    தரெிபவன் ஒரு சுடு தறெுகணையால்,
சாரதி மலை புரை தலையை நெடுந்
    தரையிடை இடுதலும் நிலை திரிய.
27

உரை
   
 
பாகனை இழந்த தேரின் நிலைமை

9280.உய்வினை ஒருவன் தூண்டாது
    உலத்தலின், தவத்தை நண்ணி,
அய்வினை நலிய நைவான்
    அறிவிற்கும் உவமை ஆகி,
மெய்வினை அமைந்த காமம்
    விற்கின்ற விரகில் தோலாப்
பொய்வினை மகளிர் கற்பும்
    போன்றது அப் பொலம் பொன் திண்தேர்.
28

உரை
   
 
இந்திரசித்து தன் மார்பில் தைத்திருந்த அம்புகளைப் பறித்து வீசுதல்

9281.துள்ளுபாய் புரவித் தேரும்
    முறை முறை தானே தூண்டி,
அள்ளினன் பறிக்கும் தன்பேர்
    ஆகமே ஆவம் ஆக,
வள்ளல்மேல் அனுமன்தன்மேல்
    மற்றையோர் மல்திண் தோள்மேல்,
உள்ளுறப் பகழி தூவி,
    ஆர்த்தனன் எவரும் உட்க.
29

உரை
   
 
இந்திரசித்தின் வீரச் செயல் கண்டு தேவர் மலர் சிந்துதல்

9282.வீரர் என்பார்கட்கு எல்லாம்
    முன்னிற்கும் வீரர் வீரன்
பேரர் என்பார்கள் ஆகும்
    பெற்றியிப் பெற்றித்து ஆமே?
சூரர் என்று உரைக்கற் பாலார்
    துஞ்சும் போது உணர்வின் சோராத்
தீரர் என்று அமரர் செப்பிச்
    சிந்தினார், தயெ்வப் பொன் பூ.
30

உரை
   
 
இந்திரசித்தின் செயல் கண்டு இலக்குவன் வியத்தல்

9283.‘எய்தவன் பகழி எல்லாம் பறித்து,
    இவன் என்மேல் எய்யும்;
கய்தடுமாறாது; உள்ளம்,
    உயிர் இனம் கலங்காது யாக்கை
மொய்கணை கோடி கோடி
    மொய்க்கவும் இளைப்பு ஒன்று இல்லான்;
அய்யனும், ‘இவனோடு எஞ்சும்
    ஆண்தொழில் ஆற்றல் ‘என்றான்.
31

உரை
   
 
இவன் பகலில் அல்லால் இறவான் என வீடணன் இலக்குவனுக்குச் சொல்லுதல்

9284.‘தேரினைக் கடாவி, வானில்
    செல்லினும் செல்லும்; செய்யும்
போரினைக் கடந்து மாயம்
    புணர்க்கினும் புணர்க்கும்; போய் அக்
காரினைக் கலந்து வஞ்சம்
    கருதினும் கருதும்; காண்டி,
வீர; மெய்; பகலின் அல்லால்,
    விளிகிலன் இருளின், வெய்யோன்.
32

உரை
   
 
இலக்குவன் இப்பொழுதே வெல்வேன் எனல்

9285.என்று எடுத்து இலங்கை வேந்தற்கு
    இளையவன் இயம்ப, ‘இன்னே
பொன்றுவது அல்லால் அப் பால்
    இனி ஒரு போக்கும் உண்டோ?
சென்றுழிச் செல்லும் அன்றே
    தறெுகணை; வலியில் தீர்ந்தான்;
வென்றி இப்பொழுதே கோடும்;
    காண் ‘என விளம்பும் எல்லை.
33

உரை
   
 
சூரியன் உதித்தல்

9286.செம்புனல் சோரிச் செக்கர்
    திசை உறச் செறிகையாலும்,
அம்பு என உற்ற கொற்றத்து
    ஆயிரம் கதிர்களாலும்,
வெம்புபொன் தேரில் தோன்றும்
    சிறப்பினும், அரக்கன் வெய்யோன்
உம்பரில் செல்கின்றான் ஒத்து
    உதித்தனன் அருக்கன் உப்பால்.
34

உரை
   
 
அமரரின் மகிழ்ச்சி

9287.விடிந்தது பொழுதும்; வெய்யோன்
    விளங்கினன், உலகம் மீதா
இடுஞ்சுடர் விளக்கம் என்ன,
    அரக்கரின் இருளும் வீய,
‘கொடுஞ்சின மாயச் செய்கை
    வலியொடுங் குறைந்து குன்ற
முடிந்தனன், அரக்கன் ‘என்னா,
    முழங்கினர் அமரர் எல்லாம்.
35

உரை
   
 
வீடணன் இந்திரசித்தின் வரத்தைப் பற்றிக் கூறியது

9288.‘ஆர் அழியாத சூலத்து
    அண்ணல் தன் அருளின் ஈந்த
தேர் அழியாத போதும்,
    சிலை கரத்து இருந்த போதும்,
போர் அழியான், இவ் வெய்யோன்;
    புகழ் அழியாத பொன் தோள்
வீர! இது ஆணை ‘என்றான்
    வீடணன், விளைவது ஓர்வான்.
36

உரை
   
 
இலக்குவன், கடை ஆணியை நீக்கித் தேரைப் பிரித்தல்

9289.‘பச்சை வெம்புரவி வீயா;
    பல இயல் சில்லி பாரில்
நிச்சயம் அற்று நீங்கா ‘
    என்பது நினைந்து, வில்லின்
விச்சையின் கணவன் ஆனான்,
    வின்மையால், வயிரம் இட்ட
அச்சினோடு ஆழி வெவ்வேறு
    ஆக்கினான், ஆணி நீக்கி.
37

உரை
   
 
தேர் அழிந்தது; குதிரைகள் ஆற்றாமல் வருந்துதல்

9290.மணிநெடுந் தேரின் கட்டு
    விட்டு, அது மறிதலோடும்,
அணிநெடும் புரவி எல்லாம்
    ஆற்றல ஆய அன்றே
திணிநெடு மரம் ஒன்று
    ஆழிவாள் மழுத் தாக்க, சிந்திப்
பணை நெடு முதலும் நீங்க,
    பாங்கு உறை பறவை போல.
38

உரை
   
 
இந்திரசித்து விண்மிசைச் சென்று மறைந்து ஆரவாரித்தல்

9291.அழிந்த தேர்த் தட்டில் நின்றும்
    அங்குள்ள படையை அள்ளிப்
பொழிந்தனன்; இளைய வீரன்
    கணைகளால் துணித்துப் போக்க,
மொழிந்தது ஓர் அளவின் விண்ணை
    முட்டினான், உலகம் மூன்றும்
கிழிந்தன என்ன ஆர்த்தான்;
    கண்டிலர், ஓசை கேட்டார்.
39

உரை
   
 
இந்திரசித்து மறைந்து நின்று சொரிந்த கன்மாரியால்
வானரர் அழிதல்

9292.மல்லின் மாமாரி அன்ன
    தோளினான், மழையின் வாய்ந்த
கல்லின்மா மாரி, பெற்ற
    வரத்தினால், சொரியுங் காலை,
செல்லும் வான் திசைகள் ஓரார்,
    சிரத்தினோடு உடல்கள் சிந்திப்
புல்லினார் நிலத்தை, நின்ற
    வானர வீரர், போகார்.
40

உரை
   
 
இலக்குவன் விண்ணை நோக்கி அம்புகளை எய்தல்

9293.காண்கிலன், கல்லின் மாரி
    அல்லது, காளை வீரன்,
சேண்கலந்து ஒளித்து நின்ற
    செய்கையால், திசைகள் எங்கும்
மாண் கலந்து அளந்த மாயன்
    வடிவு என, முழுதும் வௌவ,
ஏண்கலந்து அமைந்த வாளி
    ஏவினான், இடைவிடாமல்.
41

உரை
   
 
இந்திரசித்து மேகக் கூட்டத்திடையே காணப்படுதல்

9294.மறைந்தன திசைகள் எங்கும்;
    மாறுபோய் மலையும் ஆற்றல்
குறைந்தனன்; இருண்ட மேகக்
    குழாத்திடைக் குருதிக் கொண்மூ
உறைந்துளது என்ன நின்றான்
    உருவினை, உலகம் எல்லாம்
நிறைந்தவன் கண்டான்; காணா,
    இனையது ஓர் நினைப்பன் ஆனான்.
42

உரை
   
 
இந்திரசித்தின் வில்லேந்திய கையை
இலக்குவன் கொய்தல்

9295.‘சிலை அறாது எனினும், மற்று அத்
    திண்ணியோன் திரண்ட தோளாம்
மலை அறாது ஒழியாது ‘என்னா,
    வரிசிலை ஒன்று வாங்கி,
கலை அறாத் திங்கள் அன்ன
    வாளியால், கையைக் கொய்தான்,
விலை அறா மணிப்பூணோடும்,
    வில்லொடும், நிலத்து வீழ.
43

உரை
   
 
இந்திரசித்தின் கை அற்றுத் தரையில் வீழ்தல்

9296.பாக வான் பிறைபோல்
    வெவ்வாய்ச் சுடுகணை படுதலோடும்,
மாக வான் தடக்கை மண்மேல்
    விழுந்தது மணிப்பூண் மின்ன
வேக வான் கடுங்கால் எற்ற
    முற்றும்போய் விளியும் நாளில்
மேகம் ஆகாயத்து இட்ட
    வில்லொடும் வீழ்ந்தது என்ன.
44

உரை
   
 
துணிபட்ட இந்திரசித்தின் கை தரையில்
விழுந்து துடித்தல்

9297.படித் தலம் சுமந்த நாகம்
    பாக வான் பிறையைப் பற்றிக்
கடித்தது போல, கோல
    விரல்களால் இறுகக் கட்டிப்
பிடித்த வெஞ்சிலையினோடும்,
    பேர் எழில் வீரன் பொன் தோள்
துடித்தது, மரமும் கல்லும்
    துகள்படக் குரங்கும் துஞ்ச.
45

உரை
   
 
இந்திரசித்தின் கை யற்று வீழ்ந்தது கண்ட தேவர்கள் வியப்பு

9298.அந்தரம் அதனில் நின்ற
    வானவர், ‘அருக்கன் வீழா
சந்திரன் வீழா, மேரு மால்வரை
    தகர்ந்து வீழா;
இந்திர சித்தின் பொன் தோள்
    இற்று இடை வீழ்ந்தது என்றால்,
எந்திரம் அனைய வாழ்க்கை
    இனிச் சிலர் உகந்து என்? ‘என்றார்.
46

உரை
   
 
இந்திரசித்தின் கையற்றது கண்டு அரக்கர்
கலங்குதல்

9299.மொய் அறமூர்த்தி அன்ன
    மொய்ம்பினான் அம்பினால், அப்
பொய் அறச் சிறிது என்று எண்ணும்
    பெருமையான் புதல்வன், பூத்த
மை அறக் கரிது என்று எண்ணும்
    மனத்தினான், வயிரம் அன்ன,
கை அற, தலை அற்றார் போல்
    கலங்கினார், நிருதர் கண்டார்.
47

உரை
   
 
வானர சேனை அரக்கர் சேனையை அழித்தல்

9300.அன்னது நிகழும் வேலை,
    ஆர்த்து எழுந்து, அரியின் வெள்ளம்
மின் எயிற்று அரக்கர் சேனை
    யாவரும் மீளாவண்ணம்,
கொல் நகக் கரத்தால், பல்லால்,
    மரங்களால், மானக் குன்றால்,
பொன்நெடு நாட்டை எல்லாம்
    புதுக்குடி ஏற்றிற்று அன்றே.
48

உரை
   
 
இந்திரசித்தின் வீரப் பேச்சு

9301.காலம் கொண்டு எழுந்த மேகக்
    கருமையான், ‘செம்மை, காட்டும்
ஆலம் கொண்டு இருண்ட கண்டத்து
    அமரர் கோன் அருளின் பெற்ற
சூலம் கொண்டு எறிவல் ‘என்று
    தோன்றினான், ‘பகையில் தோற்ற
மூலம் கொண்டு உணரா நின்னை
    முடித்து அன்றி முடியேன் ‘என்றான்.
49

உரை
   
 
இந்திரசித்தின் தோற்றங்கண்ட இலக்குவன் அவனைக் கொல்லத் துணிதல்

9302.காற்று என, உரும் ஏறு என்ன,
    கனல் என, கடைநாள் உற்ற
கூற்றம் ஓர் சூலங்கொண்டு
    குறுகியது என்ன, கொல்வான்
தோற்றினான்; அதனைக் காணா,
    ‘இனி, தலைதுணிக்கும் காலம்
ஏற்றது ‘என்று, அயோத்தி வேந்தற்கு
    இளையவன் இதனைச் செய்தான்.
50

உரை
   
 
இந்திரசித்தின்மேல் பிறைவாய் அம்பினை எய்தல்

9303.‘மறைகளே தேறத்தக்க,
    வேதியர் வணங்கற் பால
இறையவன் இராமன் என்னும்
    நல் அறமூர்த்தி என்னின்,
பிறை எயிற்று இவனைக் கோறி ‘
    என்று, ஒரு பிறைவாய் வாளி
நிறை உற வாங்கி விட்டான்
    உலகு எலாம் நிறுத்தி நின்றான்.
51

உரை
   
 
இலக்குவன் விடுத்த அம்பு இந்திரசித்தின் தலையை யறுத்துத் தள்ளுதல்

9304.நேமியும், குலிச வேலும்,
    நெற்றியின் நெருப்புக் கண்ணான்
நாம வேல் தானும், மற்ற
    நான்முகன் படையும், நாண,
தீ முகம் கதுவ ஓடிச் சென்று,
    அவன் சிரத்தைத் தள்ளி,
பூமழை அமரர் சிந்த,
    பொலிந்தது அப் பகழிப் புத்தேள்.
52

உரை
   
 
இந்திரசித்தின் உடம்பு தரையில் வீழ்தல்

9305.அற்ற வன்தலை மீது ஓங்கி,
    அண்டம் உற்று அணுகா முன்னம்,
பற்றிய சூலத்தோடும்
    உடன்நிறை பகழியோடும்,
எற்றிய காலக் காற்றில்,
    மின்னொடும் இடியினோடும்
சுற்றிய புயல் வீழ்ந்து என்ன,
    வீழ்ந்தது, சோரன் யாக்கை.
53

உரை
   
 
இந்திர சித்தின் தலை தரையில் வீழ்தல்

9306.விண்தலத்து இலங்கு திங்கள்
    இரண்டொடும் மின்னு வீசும்
குண்டலத் துணைகேளாடும்
    கொந்தளக் குஞ்சிச் செங்கேழ்ச்
சண்டவெங் கதிரின் கற்றைத்
    தழையொடும் இரவிதான் இம்
மண்தலம் வீழ்ந்தது என்ன
    வீழ்ந்தது தலையும் மண்மேல்.
54

உரை
   
 
இந்திரசித்து வீழ்ந்ததும் அரக்கர்படை இரிந்தோடுதல்

9307.உயிர் புறத்து உற்ற காலை
    உள்நின்ற உணர்வினோடும்
செயிர் அறு பொறியும் அந்தக்
    கரணமும் சிந்துமாபோல்
அயில் எயிற்று அரக்கர் உள்ளார்,
    ஆற்றலர் ஆகி, ஆன்ற
எயில் உடை இலங்கை நோக்கி,
    இரிந்தனர், படையும் விட்டார்.
55

உரை
   
 
தேவர்கள் ஆடையை வீசி ஆரவாரித்தல்

9308.வில்லாளர் ஆனார்க்கு எல்லாம்
    மேலவன் விளிதலோடும்
‘செல்லாது அவ் இலங்கை வேந்தற்கு
    அரசு, எனக் களித்த தேவர்
எல்லாரும் தூசு வீசி
    ஏறிட ஆர்த்த போது,
கொல்லாத விரதத்தார்தம்
    கடவுளர் கூட்டம் ஒத்தார்
56

உரை
   
 
முதல் தேவர்கள் தரையிடைத் தோன்றி நிற்றல்

9309.வரந்தரு முதல்வன், மற்றை
    மான்மறிக் கரத்து வள்ளல்,
புரந்தரன் முதல்வர் ஆய,
    நான்மறைப் புலவர், பாரில்
நிரந்தரம் தோன்றி நின்றார்;
    அருளினால் நிறைந்த நெஞ்சர்
கரந்திலர் அவரை யாக்கை;
    கண்டன குரங்கும் கண்ணால்.
57

உரை
   
 
9310.‘அறந்தலை நின்றார்க்கு இல்லை
    அழிவு ‘எனும் அறிஞர் வார்த்தை
சிறந்தது சரங்கள் பாயச்
    சிந்திய சிரத்த ஆகி,
பறந்தலை அதனில் மற்று அப்
    பாதக அரக்கன் கொல்ல,
இறந்தன கவிகள் எல்லாம்
    எழுந்தன, இமையோர் ஏத்த.
58

உரை
   
 
அங்கதன் இந்திரசித்தின் தலையை முன்தூக்கிச் செல்ல இலக்குவன் அனுமன் தோள்மேல் செல்லுதல்

9311.ஆக்கையின் நின்று வீழ்ந்த
    அரக்கன்தன் தலையை அம்கை
தூக்கினன், உள்ளம் கூர்ந்த
    வாலி சேய் தூசி செல்ல,
மேக்கு உயர்ந்து அமரர் வெள்ளம்
    அள்ளியே தொடர்ந்து வீசும்
பூக்கிளர் பந்தர் நிழல்,
    அனுமன்மேல் இளவல் போனான்.
58

உரை
   
 
அங்கதன் கையில் இந்திரசித்தின் தலையைக் கண்ட இந்திரன் மகிழ்ச்சி

9312.வீங்கிய தோளன், தேய்ந்து
    மெலிகின்ற பழியன், மீதுற்று
ஓங்கிய முடியன், திங்கள்
    ஒளிபெறும் முகத்தன், உள்ளால்
வாங்கிய துயரன், மீப்போய்
    வளர்கின்ற புகழன், வந்துற்று
ஓங்கிய உவகை யாளன்,
    இந்திரன், உரைக்கலுற்றான்.
59

உரை
   
 
இந்திரன் மகிழ்ச்சி மொழி (9312-9313)

9313.“எல்லிவான் மதியின் உற்ற
    கறை என, என்மேல் வந்து
புல்லிய வடுவும் போகாது ‘‘
    என்று அகம் புலம்புகின்றேன்.
வில்லியர் ஒருவர் நல்க,
    துடைத்து உறும் வெறுமை தீர்ந்தேன்;
செல்வமும் பெறுதற்கு உண்டோ
    குறை? இனிச் சிறுமை யாதோ?
60

உரை
   
 
9314.சென்று அலை ஆழி தொட்டோர்
    சேய் அருள் சிறுவன் செம்மல்,
வென்று அலைத்து என்னை ஆர்த்துப்
    போர்த்தொழில் கடந்த வெய்யோன்,
தன்தலை எடுப்பக் கண்டு,
    தானவர் தலைகள் சாய,
என் தலை எடுக்கலானேன்;
    இனிக்குடை எடுப்பேன் ‘என்றான்
61

உரை
   
 
இராமன் அருகிலுள்ேளார் அங்கதனைப் புகழ்தல்

9315.‘வான்தலை எடுக்க, வேலை
    மண்தலை எடுக்க, வானோர்
கோன்தலை எடுக்க, வேதக்
    குலம் தலை எடுக்க, குன்றாத்
தேன்தலை எடுக்கும் தாராய்!
    தேவரை வென்றான் தீய
ஊன்தலை எடுத்தாய், நீ ‘என்று
    உரைத்தனர் உவகை மிக்கார்.
62

   
 
இராமன் இலக்குவன் வரவை எதிர்நோக்கியிருத்தல்

9316.வரதன், போய் மறுகாநின்ற
    மனத்தினன், ‘மாயத்தோனைச்
சரதம் போர் வென்று மீளும்,
    தருமமே தாங்க ‘என்பான்,
விரதம் பூண்டு, உயிரினோடும்
    தன்னுடை மீட்சி நோக்கும்
பரதன் போன்று இருந்தான், தம்பி
    வருகின்ற பரிவு பார்த்து.
63

உரை
   
 
மீளும் தம்பியைப் பார்த்து இராமன் கண்ணீர் சொரிதல்

9317.வன்புலம் கடந்து மீளும்
    தம்பிமேல் வைத்த மாலைத்
தன்புல நயனம் என்னும்
    தாமரை சொரியும் தாரை,
அன்புகொல்? அழு கணீர்கொல்?
    ஆனந்த வாரியே கொல்?
என்புகள் உருகிச் சோரும்
    கருணைகொல்? யார் அது ஓர்வார்?
64

உரை
   
 
இராமன் திருவடியில் இந்திரசித்தின் தலையை வைத்தல்

9318.விழுந்து இழி கண்ணின் நீரும்,
    உவகையும், களிப்பும், வீங்க,
எழுந்து எதிர் வந்த வீரன்
    இணை அடி முன்னர் இட்டான்
கொழுந்து எழும் செக்கர்க் கற்றை
    வெயில்விட, எயிற்றின் கூட்டம்
அழுந்துற மடித்த பேழ்வாய்த்
    தலை அடி உறை ஒன்றாக.
65

உரை
   
 
இந்திரசித்தின் தலையினை நோக்கிய இராமனது
மகிழ்ச்சி நிலை

9319.தலையினை நோக்கும்; தம்பி
    கொற்றவை தழீஇய பொன்தோள்
மலையினை நோக்கும்; நின்ற
    மாருதி வலியை நோக்கும்;
சிலையினை நோக்கும்; தேவர்
    செய்கையை நோக்கும்; செய்த
கொலையினை நோக்கும்; ஒன்றும்
    உரைத்திலன், களிப்புக் கொண்டான்.
66

உரை
   
 
தன் தாளின் மேல் வணங்கிய தம்பியை இராமன் தழுவிக் கொள்ளுதல்

9320.காள மேகத்தைச் செக்கர்
    கலந்து என, கரிய குன்றின்
நாள்வெயில் பரந்தது என்ன,
    நம்பி தன் தம்பி மார்பில்
தோளின்மேல் உதிரச் செங் கேழ்ச்
    சுவடு தன் உருவில் தோன்ற,
தாளின்மேல் வணங்கினானைத்
    தழுவினன், தனித்து ஒன்று இல்லான்.
67

உரை
   
 
தம்பியை இராமன் பாராட்டுதல்

9321.கம்ப மதத்துக் களியானைக்
    காவல் சனகன் பெற்றெடுத்த
கொம்பும் என்பால் இனிவந்து
    குறுகினாள் என்று அகம்குளிர்ந்தேன்;
வம்பு செறிந்த மலர்க்கோயில்
    மறையோன் படைத்த மாநிலத்தில்,
“தம்பி உடையான் பகை அஞ்சான் “
    என்னும் மாற்றம் தந்தனையால்.
68

உரை
   
 
தம்பியைப் பன்முறை தழுவுதல்

9322.தூக்கிய தூணி வாங்கி,
    தோெளாடு மார்பைச் சுற்றி
வீக்கிய கவச பாசம்
    ஒழித்து, அது விரைவின் நீக்கி,
தாக்கிய பகழிக் கூர்வாய்
    தடிந்த புண் தழும்பும் இன்றிப்
போக்கினன் தழுவிப் பல்கால்,
    பொன்தடந் தோளின் ஒற்றி.
69

உரை
   
 
இராமன் வீடணன் உதவியைப் புகழ்தல்

9323.‘ஆடவர் திலக! நின்னால்
    அன்று! இகல் அனுமன் என்னும்
சேடனால் அன்று; வேறு ஓர்
    தயெ்வத்தின் சிறப்பும் அன்று;
வீடணன் தந்த வென்றி,
    ஈது ‘என விளம்பி மெய்ம்மை,
ஏடு அவிழ் அலங்கல் மார்பன்
    இருந்தனன், இனிதின், இப்பால்.
70

உரை