9912.

'ஆயிரம் தோளினாலும், வாலியும், அரிதின், ஐய!

மேயின வென்றி விண்ணோர் சாபத்தின் விளைந்த; 

மெய்ம்மை;

தாயினும் தொழத் தக்காள்மேல் தங்கிய 

காதல்-தன்மை

நோயும் நின் முனிவும் அல்லால், வெல்வரோ 

நுவலற்பாலார்?

 

ஐய - ஐயனே!   ஆயிரம் தோளினானும்-   ஆயிரம்
தோள்களையுடைய கார்த்தவீரியனும்; வாலியும்- வாலியாகிய
வானர அரசனும்;  அரிதின் மேயின வென்றி- அரிதில்
பெற்ற வெற்றிகள்;  விண்ணோர் சாபத்தின் விளைந்த-
(இராவணனுக்கு) தேவர்கள் இட்ட சாபங்களால் விளைந்தவை;
மெய்ம்மை- இஃது உண்மை; தாயினும் தொழத்தக்காள்
மேல்
- (இப்போது) உலகம் தாயினும் போற்றற்குரியவளாய்
வணங்கத்தக்க சீதையின் மேல்; தங்கிய காதல் தன்மை
நோயும் 
-  கொண்ட  ஆசையும்;  நின்   முனிவும்
அல்லால்
- உன் சீற்றமும் அல்லால்; நுவலற் பாலார் -
வீரர் என்று சிறப்பித்துச் சொல்லப்படுவார் யாரேனும்;
வெல்வரோ- (இவனை) வெல்ல வல்லார் ஆவாரோ?
 

(209)