9998. | மண்டல மதியின் நாப்பண் மான் இருந்தென்ன, |
| மானம் |
| கொண்டனர் ஏற்றி, வான மடந்தையர் தொடர்ந்து |
| கூட, |
| உண்டை வானரரும் ஒள் வாள் அரக்கரும் புறம் |
| சூழ்ந்து ஓட, |
| அண்டர் நாயகன்பால், அண்ணல் வீடணன் அருளிச் |
| சென்றான். |
|
அண்ணல் வீடணன் - தலைமையான வீடணன் (பிராட்டியை); மண்டல மதியின் நாப்பண் மான் இருந்தென்ன- வட்டமான சந்திரன் நடுவே மான் இருப்பதைப் போல; கொண்டனர் மானம் ஏற்றி - அழைத்துக் கொண்டு வந்தவர்களாய் விமானத்தில் ஏற்றி வைத்து; வான மடந்தையர் தொடர்ந்து கூட- தேவப் பெண்கள் பின் பற்றி உடன் வர; உண்டை வானரரும் ஒள்வாள் அரக்கரும் புறம் சூழ்ந்து ஓட- உருண்ட வடிவமைப்புடைய குரக்கு வீரரும் ஒளிபடைத்த வாள் ஏந்திய அரக்கரும் புறத்தே சுற்றிக் கொண்டு ஓடிவர; அண்டர் நாயகன் பால் - தேவதேவனாகிய இராமபிரானிடத்து; அருளின் சென்றான் - அவன் கட்டளையிட்டருளியபடி சென்று சேர்ந்தான். |
குரங்குகளின் உருண்ட வடிவமைப்பு நோக்கி 'உண்டை' என்பது வந்தது. வீடணச் சார்புடைய அரக்கர்கள் பிழைத் திருப்பவர் உனராதலின் 'அரக்கரும்' என்றார். |
(47) |