(அங்ஙனம் காமதேனு மயிரைச் சிலிர்த்தவுடனே) பப்பரர்- பப்பரர்களும்; யவனர் - யவன தேசத்தார்களும்; சீனர் - சீனர்களும்; சோனகர் - சோனகர்களும்; முதல - முதலான; பல்லோர்- மிலேச்ச வீரர்கள் பலர்; கைப்படை அதனினோடும் - கைகளில் ஆயுதங்களோடும்; கபிலை மாட்டு உதித்து - அப் பசுவினிடம் தோன்றி; வேந்தன் துப்பு உடை அக் கௌசிக மன்னனுடைய வலிமையுள்ள; சேனை யாவும் - படைகளையெல்லாம்; தொலைவு உற - அழியும்படி; துணித்தலோடும் - கண்ட துண்டங்களாக்கின அளவிலே; வெப்பு உடை - (இயற்கையில்) சினம் கொண்ட; கொடிய மன்னன் தனயர்கள் - கொடியவர்களாகிய கௌசிக மன்னனுடைய மைந்தர்கள்; வெகுண்டு மிக்கார் - கோபித்துத் தாக்கலானார்கள். பப்பரம். சீனம். சோனகம் - மிலேச்ச சாதி பேதங்கள் - விளங்காத வேற்றுமொழிகள் பேசுகின்ற புற நாட்டவர். 99 |