அரத்த நோக்கினர்- சிவந்த கண்களையுடையவர்களும்; அல் திரள் மேனியர் - இருள் சேர்ந்தாற் போன்ற மேனியை உடையவர்களுமாகிய; பப்பரர் - பப்பர தேசத்தவர்; திருத்து கூடத்தை - தன்னைக் கட்டி வைத்திருக்கும் கட்டுத் தறியையும்; திண் கணையத் தோடும் - வேகமாகச் செல்லமுடியாதபடி தடைசெய்யும் வலிய கணையமரத்தையும்; எருத்தின் ஏந்திய - (தம்) பிடரியில் தாங்கிய; மால் களிறு என்ன - மதயானை போல; பரித்த காவினர் - காவடித் தண்டினைச் சுமந்தவர்களாய்; ஏகினார் - சென்றார்கள். தோளில் காவடித் தண்டினைத் தூக்கிய பப்பரர்களுக்குக் கணைய மரத்தைத் தூக்கிய யானை உவமையாயிற்று. கா: காவடித் தண்டு. கணையம்: யானைகள் ஒன்றோடு ஒன்று முட்டிக் கொள்ளாதபடி குறுக்காக இடப்படும் மரம். 37 |