தூணம் - கல்தூண்கள்; மிடைந்து என - நெருங்கினாற் போல; தோள் மிடைந்தன - (வீரர்களின்) தோள்கள் நெருங்கின; வான்மின் - வானத்து மின்னல்கள்; மிடைந்து என - நெருங்கியிருந்தாற் போல; வாள் மிடைந்தன - (அவர்களின்) வாட்படைகள் நெருங்கின; தம்மி மிடைந்து என - தாமரைமலர் பின்னிய போல; தாள் மிடைந்தன - பாதம் நெருங்கின; ஆளி மிடைந்து என - யாளிகள் நெருங்கினாற் போல; ஆள் மிடைந்தன - காலாட் படைகள் நெருங்கின. வீரர்கள் ஒருவரோடு ஒருவர் கைகலந்தாற் போல அவர்கள் பாதங்களும் நெருங்கின. உவமையணியும். சொற்பொருள் பின்வரு நிலையணியும் சேர்ந்து அமைந்துள்ளன. தூணம் - தூண் (அம் - சாரியை) 29 |