1353. | ‘மனிதர், வானவர், மற்றுளோர் அற்றம் காத்து அளிப்பார் இனிய மன்னுயிர்க்கு இராமனின் சிறந்தவர் இல்லை ; அனையது ஆதலின், அரச! நிற்கு உறு பொருள் அறியின், புனித மா தவம் அல்லது ஒன்று இல்’ எனப் புகன்றான். |
‘அரச ! -மன்னனே ! ; மனிதர், வானவர், மற்றுளோர்- மக்களும், தேவரும், நரகரும் ஆகிய ; இனிய மன் உயிர்க்கு -இனிமை நிறைந்த நிலைபெற்ற உயிர்களுக்கு ; அற்றம் காத்து அளிப்பார்- கேடு வாராமல்பாதுகாத்து அருள்புரிபவர் ; இராமனின் சிறந்தவர் இல்லை- இராமனைப் போலச்சிறந்தவர் மற்றொருவர் இல்லை ; அனையது ஆதலின் - இராமனது சிறப்புஅத்தன்மையதாக இருத்தலின் ; நிற்குஉறு பொருள் அறியின் - உனக்குச்செய்தற்குரிய செயலை ஆராய்ந்தால் ; புனித மாதவம் அல்லது - தெய்வத்தன்மையுடைய துறவறம்அன்றி ; ஒன்று இல் - மற்றொரு செயல் இல்லை ;’ எனப்புகன்றான் - என்று சொன்னான் (வசிட்ட முனிவன்). ‘இராமனின் சிறந்தவர்’ என்பதில் இன் ஒப்புப் பொருளில் வந்தது. ஒப்பவர் இன்மை கூறவே மிக்கவர் இன்மை பெறப்படும். இயற்றுதற்கு அருமை பற்றித் துறவறம் ‘மாதவம்’ எனக் குறிக்கப்பட்டது. 40 தயரதன் மகிழ்ச்சி உரை |