1365.பணை நிரந்தன ; 
     பாட்டு ஒலி நிரந்தன ; அனங்கன்
சுணை நிரந்தன ; 
     நாண் ஒலி கறங்கின ; நிறைப்பேர்
அணை நிரந்தன,
     அறிவு எனும் பெரும் புனல் ; அனையார்,
பிணை நிரந்தெனப்
     பரந்தனர் ; நாணமும் பிரிந்தார்.

     பணைநிரந்தன - (இராமன் தெருவில் புக) வாத்தியங்களின் ஒலிகள்
நிரம்பின ;  பாட்டு ஒலி நிரந்தன - பாடல்களின்ஓசைகள் நிறைந்தன ;
அனங்கன் கணை நிரந்தன - மன்மதனின் மலரம்புகள்நிரம்பின ; நாண்
ஒலிகறங்கின
- வில் நாணின் ஒலிகள் ஒலித்தன; அறிவுஎனும் பெரும்
புனல்
-இராமனைப் பற்றிய எண்ணம் என்னும் மிக்க வெள்ளம் ; நிறை
பேர் அணை நிரந்தன
- மனஅடக்கம் என்னும் பெரிய அணையைக்
கடந்தன ; அனையார் - அவ்வாறானமகளிர்கள் ; நாணமும்பிரிந்தார்-
நாணத்தையும் விட்டவர்களாய் ;  பிணை நிரந்து
என- பெண்மான்கள்
நிரம்பினபோல ;  பரந்தனர் -தெருவில் வந்து நிறைந்தார்கள்.

     பணை - வாத்தியங்கள் ;  முரசு என்பாரும் உளர் ;  பணை -
கருவியாற் பிறப்பதற்கும், பாட்டு - கண்டத்தாற் பிறப்பதற்கும் கொள்க.
நிரத்தல் -பரத்தல். அனங்கன் - உருவமில்லாதவன். அறிவைப் புனல்
என்றதற்கு ஏற்ப நிறையை அணைஎன்றார் ;  உருவகம். நாணமும்
என்றதில் உம்மை இறந்தது தழுவியது.                             52