1393. | ‘தானமும், தருமமும், தகவும், தன்மை சேர் ஞானமும், நல்லவர்ப் பேணும் நன்மையும் - மானவ! - வையம், நின் மகற்கு; வைகலும், ஈனம் இல் செல்வம் வந்து இயைக என்னவே. |
‘மானவ - மனுவின் குலத்தில் தோன்றியவனே!; நின் மகற்கு - உன் மகனிடத்தில்;ஈனம் இல் செல்வம் -தாழ்வில்லாத அரசச் செல்வம்; வந்து இயைக என்ன - வந்துபொருந்தக் கடவது என்று சொல்வது போல; தானமும் - கொடைத் தன்மையும்; தருமம் -அறநெறியும்; தகவும் - ஒழுக்கமும்; தன்மை சேர் ஞானமும் - மேன்மை பொருந்திய மெய்யுணர்வும்; நல்லவர்ப் பேணும் நன்மையும் - பெரியோரைப் போற்றிக் காக்கும் நற்பண்பும்; நின்மகற்கு வைகலும் வைகும் - உன் மகனுக்கு என்றும் நிலையாகத் தங்கியுள்ளன.’ இதனால் இராமனுக்கு அரசனாதற்குரியஅனைத்துத் தகுதிகளும் உள்ளன என்றனர் அரசர்கள் . தானம்- அறநெறியால் வந்த பொருளைத் தக்கார்க்கு. உவகையொடுங்கொடுத்தல். நல்லவர்ப் பேணும் நன்மை - இரண்டன் தொகை. 80 |