1420. | ‘கோளும் ஐம்பொறியும் குறைய, பொருள் நாளும் கண்டு, நடுக்குறு நோன்மையின் ஆளும் அவ் அரசே அரசு; அன்னது, வாளின் மேல் வரு மா தவம், மைந்தனே! |
‘மைந்தனே - மகனே; கோளும் ஐம்பொறியும் - தத்தமக் கேற்ற புலன்களைக்கொள்ளும் தன்மையில் வல்ல ஐந்து பொறிகளும்; குறைய - அடங்கியிருக்க; பொருள்நாளும் கண்டு - அரசுக்கு வரும் வருவாயை நாள்தோரும் ஆராய்ந்து; நடுக்குறு நோன்மையின்- பகைவர் அஞ்சத்தகும் வலிமையோடு கூடி; ஆளும் - ஆட்சிபுரிகின்ற; அவ் அரசே- அந்த அரசாட்சியே; அரசு - அரசாகும்; அன்னது - அத்தகைய அரசாட்சி; வாளின் மேல் வரு மா தவம் - வாளின் கூரிய முனைமேல் நின்றுகொண்டு செய்யும் பெருந்தவம்எனலாகும்.’ நாள்தோறும் வருவாய் பெருக்கி, ஐம்புலன்களை அடக்கி, வலிமையும் மன உறுதியும் உடையவராய்அரசாளுவோர் தவம் செய்வர் ஆவர். அரசராவரும் ஒருவகையில் தவம் செய்வோரே ஆவர், நல்லரசர்ஆவர். நல்லரசர் ஆக ஆட்சிபுரியின் என்பது கருத்து. ‘ஏ’ காரம் விளி. 22 |