1466.மந்தரை, பின்னரும் வகைந்து கூறுவாள்;
‘அந்தரம் தீர்ந்து உலகு அளிக்கும் நீரினால்
தந்தையும் கொடியன்; நற்றாயும் தீயளால்;
எந்தையே! பரதனே! என் செய்வாய்?’ என்றான்.

     மந்தரை -;  பின்னரும் - மறுபடியும்;  வகைந்து கூறுவாள் -
வகைப்படுத்திச்சொல்பவளாகி;  ‘எந்தையே!  பரதனே! - என்தந்தையே!
பரதனே!;  அந்தரம் தீர்ந்து- நடுவுநிலைமை  விலகி;  உலகு அளிக்கும்
நீரினால் -
அரசை இராமனுக்குக்கொடுக்கும் தன்மையால்;  தந்தையும்
கொடியன் -
தயரதனும் கொடியவன்; (அச்செயலுக்கு மகிழும்காரணத்தால்);
நற்றாயும் தீயளால் - உன்னைப் பெற்ற கைகேயியும் பொடியவள்;
என்செய்வாய்- (இவர்களுக்கிடையில் நீ) யாது செய்வாய்?;’ என்றாள் -

     கைகேயிக்குக்கூறுவதனால் பயனில்லை என்று கருதிப் பரதனை
நோக்கிமுறையிட்டாற் போலக் கூ.றுகிறாள் மந்தரை. ‘எந்தையே!’  என்பது
என்செல்வயே! என் அப்பா!’என்று பரிவு காட்டித் தன்னோடு
நெருக்கிக்கொண்டாற் போலப் பேசும் மொழி. கைகேயிக்குத் தன்மகன்மேல்
அன்பு இல்லாதது  போலவும்,  இவளுக்குப் பரதன்மேல் அளவிறந்த பரிவு
பெருகிவிட்டது போலவும் இல்
அழைப்புகள்காட்டும். ‘உலகு அளிக்கும்’
என்பதற்கு, உலகைக் காப்பாற்றும் என்று பொதுவாகப்பொருள் உரைத்தலும்
ஒன்று, ‘ஆல்’ தேற்றம்.                                        68