தயரதன் கைகேயியின் மாளிகைக்கு வருதல்  

1495.நாழிகை கங்குலின் நள் அடைந்த பின்றை,
யாழ் இசை அஞ்சிய அம் சொல் ஏழை கோயில்,
‘வாழிய’ என்று அயில் மன்னர் துன்ன, வந்தான் -
ஆழி நெடுங் கை மடங்கள் ஆளி அன்னான்.

     ஆழிநெடுங் கை - ஆணைச் சக்கரம் ஏந்தும் நீண்ட கைகளை
யுடைய; ஆளி மடங்கள்அன்னான் - சிங்க ஏறுபோன்றவனான தயதன்;
கங்குலின் நாழிகை நள் அடைந்த பின்றை -இராப்பொழுது நடுவை
அடைந்த பின்னர்; வாழிய என்று அயில் மன்னர் துன்ன- ‘வாழ்க’
என்று கூறிக்கொண்டு வேலேந்திய அரசர்கள் பக்கத்தில் சூழ்ந்துவர;  யாழ்
இசை அஞ்சிய அம்சொல்ஏழை கோயில் -
  யாழினது
ஒலியும்
அஞ்சப்பெற்ற அழகிய மொழியையுடைய கைகேயியின் மாளிகைக்கு;
வந்தான் - வந்தடைந்தான்.

     மறுநாள் இராமனுக்கு முடிசூட்டுவதற்குரிய  விழா எற்பாடுகளைச்
செய்வதில் காலம் கழிந்தமையால்இரவில் காலந் தாழ்த்துக் கைகேயியின்
இருப்பிடம் நோக்கி  மகிழ்ச்சியோடு தயரதன் சென்றான். ஏழை - பெண்;
பிறர் பேச்சைக் கேட்டு ஆராயாது  நடத்தலின் அறிவில்லாதவள் என்னும்
குறிப்பும் புலப்பட வைத்தார். மடங்கல் - பிடரிமயிர் மடங்கியிருக்கப்
பெற்றது;  காரணப் பெயர்.                                       5