1521. | ‘வானோர் கொள்ளார்; மண்ணவர் உய்யார்; இனி, மற்று என் ஏனோர் செய்கை? யாரொடு நீ இவ் அரசு அள்வாய் யானே சொல்ல, கொள்ள இசைந்தான்; முறையாலே தானேநல்கும் உன் மகனுக்கும் தரை’ என்றான் |
‘வானோர் கொள்ளார் - ‘இராமனைக் காட்டுக்குத் துரத்தி விட்டுப் பரதன் அரசாள்வதைத்தேவர்களும் எற்றுக் கொள்ளார்; மண்ணவர் உய்யார் - மண்ணுலகத்தவர் எவரும் உயிர்வாழார்; இனிமற்று ஏனோர் செய்கை என் - இனிமேல் பிறர் செய்கையைப் பற்றிச் சொல்லவேண்டுவது என்ன?; நீ இவ் அரசு யாரொடும் ஆள்வாய் - (அவ்வாறாயின்) நீஇந்த அரசினை யாரோடிருந்து ஆட்சி புரிவாய்?; யானே சொல்ல- நானே அவனை அரசேற்குமாறுசொல்ல; கொள்ள இசைந்தான் -ஏற்றுக்கொள்ள உடன்பட்டான்; முறையாலே - முறைப்படி; உன்மகனுக்கும் தானே தரை நல்கும் - உன் பிள்ளைக்கும் தானே நாட்டைக்கொடுப்பான்;’ என்றான் -. யான் வற்புறுத்த இராமக் அரசினை ஏற்க இசைந்தான்; அவன் ஆசை கொண்டு முயலவில்லை.பரதன் நாட்டைப் பெறுவதற்காக இராமனைக் காட்டிற்குத் துரத்த வேண்டுவதில்லை. நீ விரும்பினால்தானாகவே பரதனுக்கு நாட்டை அளித்துவிடுவான். அப்பொழுது முறைகேடு யாதும் நேராது என்றான்தயரதன். எங்ஙனமாவது இராமன் காடு செல்வதைத் தவிர்க்க வேண்டும் என்று கருதினான். வானோரையும்மண்ணில் வாழ்வோரையும் முற்கூறினமையின் ஏனோர் என்றது பிற மக்களையும் கீழுலகத்தவரையும் குறித்தது. 31 |