1533.‘ஏண்பால் ஓவா நாண்,
     மடம், அச்சம், இவையே தம்
பூண்பால் ஆகக் காண்பவர் நல்லார்;
     புகழ் பேணி
நாண்பால் ஓரா நங்கையர்
     தம்பால் நணுகாரே;
ஆண்பாலாரே; பெண்பால்
     ஆரோடு அடைவு அம்மா?

     ‘ஏண்பால்ஓவா - பெருமையின் பகுதியிலிருந்து நீங்காத; நாண்,
மடம் அச்சம்-
நாணம், மடம்,  அச்சம் முதலிய;  இவைதம் பூண்பால்
ஆக
- இவற்றைத் தம்முடையஅணிகலன்களாக; காண்பவர்நல்லார் -
கருதுபவர் நற்பெண்டிர் ஆவர்; புகழ் பேணி-புகழை விரும்பி; நாண்பால்
ஓரா நங்கையர் -
நாணத்தின் தன்மையை அறியாத மகளிர்; தம்பால்
நணுகாரே
- தம் இனத்தில் சேர்ந்தவர் ஆகார்;
ஆண்பாலாரே-
(அவர்கள்) ஆண்மக்களே;  பெண்பால் ஆரோடு அடைவு அம்மா-
பெண்ணினத்தில் யாரோடுசார்ந்தவர் ஆவார்?’ (ஒருவரோடும் சார்ந்தவர்
அல்லர்)

     பெண்களுக்குரிய சிறந்த பண்புகள் நாணம்,  மடம், அச்சம், பயிர்ப்பு
என்பன. உபலட்சணத்தால் பயிர்ப்பும் கொள்ளத் தக்கது. நாணம் -
தகாதவற்றின்கண்உள்ளம் ஒடுங்குதல்; மடம் - அனைத்தும் அறிந்தும்
அறியாதது போல் இருத்தல்; அச்சம் - என்றும்காணாததைக் கண்டவிடத்து
அஞ்சுதல்; பயிர்ப்பு - தன் கணவன் அல்லாதவரின் கைமுதலியன மேற்படின்
அருவருத்தல்.  ஆண்பாலாரே - ஏகாரம் தேற்றம்; நணுகாரே - ஏகாரம்
அசை;  அம்மா - வியப்பிடைச்சொல்.                            43