மங்கையர் செயல்  

கலிவிருத்தம்

1558.குஞ்சரம் அனையார் சிந்தை கொள் இளையார்,
பஞ்சினை அணிவார்; பால் வளை தெரிவார்;
அஞ்சனம் என, வாள் அம்புகள் அடையே.
நஞ்சினை இடுவார்; நாள்மலர் புனவார்.*

     குஞ்சரம் அனையார் - யானைபோலும் பெருமிதமுடைய ஆடவர்
களின்; சிந்தைகொள்இளையார் - மனத்தைக் கவர்கின்ற இளைய
மங்கையர்; பஞ்சினை அணிவார் -செம்பஞ்சுக் குழம்பைக் கால்களில்
பூசுவர்; பால்வளை தெரிவார் - பால்போலும்சங்குவளையல் களைத்
தேர்ந்தெடுத்துக் கைகயில் அணிவர்; அஞ்சனம் என - மை என்று பேர்
சொல்லிக்கொண்டு; வாள் அம்புகள் இடையே - வாளும் அம்பும் போன்ற
கொடிய கண்களில்;நஞ்சினை இடுவார் - விடத்தை இடுவர்; நாள்மலர்
புனைவார் -
புதிய மலர்களைத்தலையில் சூடுவர்.

    இளையார் என்பது மகளிரைக் குறித்தது. ‘இளையவர் தம்மொடுஅவர்
தரும் கல்வியே கருதி ஓடினேன்’என்னும் திருமங்கையாழ்வார் பெரிய
திருமொழியிலும் (1) இச்சொல் இப்பொருளில் வருதல்காணலாம். ‘பந்தினை
இளையவர் பயில் இடம்’ (79) என்னும் இடத்தும் இப்பொருட்டாதல்
கருதத்தக்கது. கண்ணில் இடும மையினை நஞ்சு எனக் கற்பனை செய்தல்த
(1564) பின்னும்காணலாம்.                                     68