மன்னர்கள் முடிசூட்டு மண்டபம் புகுதல் 1566. | சந்திரர் கோடி என்னத் தரள வெண் கவிகை ஓங்க, அந்தரத்து அன்னம் எல்லாம் ஆர்ந்தெனக் கவரி துன்ன, இந்திரற்கு உவமை சாலும் இருநிலக் கிழவர் எல்லாம் வந்தனர்; மௌலி சூட்டும் மண்டபம் மரபின் புக்கார். |
இந்திரற்குஉவமை சாலும் - தேவேந்திரனுக்கு உவமையாகத்தக்க; இரு நிலக்கிழவர் எல்லாம் - பெரிய நாடுகளுக்குத்தலைவர்களான அரசர்கள் எல்லாரும்; சந்திரர்கோடி என்ன -சந்திரர் எண்ணற்றோர் என்னும்படி; தரள வெண் கவிகை ஓங்க - முத்துகளால்ஆகிய வெள்ளியகுடைகள் மேலோங்கவும்; அந்தரத்து அன்னம் எல்லாம் ஆர்ந்தெனத- வானில் அன்னப்பறவைகள் எல்லாம் நிறைந்தன என்னும்படி; கவனி துன்ன - வெண்சாமரங்கள்நெருங்கவும்;வந்தனர் - வந்து; மௌலி சூட்டும் மண்டபம் -இராமபிரான் முடிபுனைதற்குரிய மண்டபத்துள்; மரபின் புக்கார் - முறைப்படிபுகுந்தனர். மன்னர்கள் தம் வரிசையோடு மண்டபத்தில் முறைப்படி புகுந்தனர் என்பது கருத்து. இன்பத்துய்ப்பில் இந்திரனுக்கு மேலானவர் என்பார். ‘இந்திரற்கு உவகை சாலும்’ என்றார்.வெண்சாமரைகள் அசைவு, நிறம் ஆகியவற்றால் அன்னம் போல்வன. வந்தனர் - முற்றெச்சம். 76 |