கைகேயி, ‘இராமனை அழைத்து வா’ எனல் 1573. | வின் தொட நிவந்த கோயில், வேந்தர்தம் வேந்தன் தன்னைக் கண்டிலன்; வினவக் கேட்டான்; கைகயள் கோயில் நண்ணி, தொண்டை வாய் மடந்தைமாரின் சொல்ல, மற்று அவரும் சொல்ல, பெண்டிரில் கூற்றம் அன்னாள், ‘பிள்ளையைக் கொணர்க’ என்றாள். |
விண்தொட நிவந்த கோயில் - வானை அளாவி உயர்ந்து நின்ற அரண்மனையில்; வேந்தர்தம் வேந்தன் தன்னை - அரசர்களுக்கு அரசனாகிய தயரதனை; கண்டிலன் -காணாதவானகி; வினவ - (அங்குள்ளாரைக்) கேட்க; கேட்டான் - (அவர்கள்)சொல்லக் கேட்டு; கைகயள் கோயில் நண்ணி - கைகேயியின் அரண்மனையை அடைந்து; தொண்டைவாய் மடந்தைமாரின் சொல்ல - கொவ்வைக் கனிபோன்ற வாயினையுடையதாதியரித்தில் தன் வருகையைத் தெரிவிக்க; அவரும் சொல்ல - அத்தாதியரும்கைகேயியிடத்துத் தெரிவிக்க; பெண்டிரில் கூற்றம் அன்னாள் - மகளிருள் யமனைப்போன்ற அவள்; ‘பிள்ளையைக் கொணர்க - இராமனை அழைத்து வருக;’ என்றாள் -என்று சுமத்திரனை நோக்கிக் கூறினாள். தயரதன், கைகேயியின் அரண்மனையில் இருத்தலைக் கேட்டுச் சுமந்திரன் அங்கே செல்ல, அவன் சக்கரவத்தியைக் காண்பதற்கு முன்னே கைகேயி அவனைப் பார்த்து இராமனை அழைத்துவரப்பணிந்தாள். கணவனைக் கொல்லத் துணிந்தவாளாதலின், ‘கூற்றம் அன்னாள்’ என்றார். கண்டிலன், கேட்டான் - முற்றெச்சங்கள். மற்று - அசை. 83 |