1592.‘பாவமும் அருந் துயரும் வேர் பறியும்’ என்பார்;
‘பூவலயம் இன்று தனி அன்று; பொது’ என்பார்;
‘தேவர் பகை உள்ளன இவ் வள்ளல் தெறும்’ என்பார்;
‘ஏவல் செயும் மன்னர் தவம் யாவது கொல்?’ என்பார்.

     பாவமும் அருந் துயரும்- இவன் ஆளப்போவதால் தீ வினைகளும்
தீர்த்தற்கரியதுன்பங்களும்; வேர் பறியும் என்பார் - அடியோடு அழியும்
என்பார்;  பூவலயம் -இந்தப் பூமண்டலம்; இன்று தனி அன்று -
இப்பொழுது  இராமன் ஒருவனுக்கே தனியுரிமை உடையதுஅன்று;  பொது
என்பார் -
எல்லார்க்கும் பொதுவுடைமை ஆகும் என்பார்;  தேவர் பகை
உள்ளன -
தேவர்களுக்குப் பகையாய் உள்ள அரக்கர் கூட்டங்களை;  இவ்
வள்ளல் தெரும் என்பார் -
இவ் இராமன் அழிப்பான் என்பார்;  ஏவல்
செயும் மன்னர் -
இவனுக்குஏவல் செய்யும் அரசர்களது;  தவம் யாவது
கொல் என்பார் -
நல்வினை எத்தன்மையதோஎன்பார்.

     இராமன் ஆட்சியில் தம் பாவமும் துயரும் தீரும் என்றார் சிலர்.
இராமன் மக்கள்குறைகளைக் கேட்டறிந்து, அவர்கள் தாமே ஆட்சிபுரிந்தால்
எவ்வாறு நன்மையைப் பெறலாமோஅவ்வாறு நன்மையைப் பெறச்செய்வான்
என்னும் உறுதிப்பாட்டால் ‘பூவலயம் இன்று  தனி அன்று; பொது’ என்றார்
சிலர்.  இராமன் ஆளும்போது  தாங்களே ஆளுவதாகக் கருதினர்
என்பதாம்.                                                   102