1615. கையைக் கையின் நெரிக்கும்; தன் காதலன்
வைகும் ஆல் இலை அன்ன வயிற்றினைப
பெய் வளைத் தளிரால் பிசையும்; புகை
வெய்து உயிர்க்கும்; விழுங்கும், புழுங்குமால்.

     (கோசலை),  கையைக் கையின் நெரிக்கும் - கையை மற்றொரு
கையால் நெரிப்பாள்;தன்காதலன் வைகும் - தன் மகளாகிய இராமன்
தங்கிய;  ஆல் இலை அன்ன வயிற்றினைப்பெய் வளைத்தளிரால்
பிசையும் -
ஆல் இலை போன்ற தன் வயிற்றைத் தனது வளையல்
அணிந்ததளிர் போன்ற கைகளால் விசைவாள்;  புகை வெய்து
உயிர்க்கும் -
உள் நெருப்பால்புகையோடு கூடிய வெப்ப மூச்சு விடுவாள்;
விழுங்கும் - அவ் உயிர்ப்பை அடக்குவாள்;  புழுங்கும் - வெம்பிப்
போவாள்.

     கோசலையின் துயரத் துடிப்பின் மெய்ப்பாடுகள் இங்கு அடுக்கியுள்ளன.
‘ஆல்’ஈற்றசை.                                               10