1618.‘அறம் எனக்கு இலையோ?’ எனும்; ‘ஆவி நைந்து
இறவு அடுத்தது என், தெய்வதங்காள்?’ எனும்;
பிற உரைப்பது என்? கன்று பிரிந்துழிக்
கறவை ஒப்பக் கரைந்து கலங்கினாள்.

     ‘எனக்கு அறம் இலையோ’ எனும் - எனக்குத் தருமம் துணையாக
இல்லையோ என்பாள்; தெய்வதங்காள் - தெய்வங்களே!;  ஆவி நைந்து
இறவு அடுத்தது என்? எனும் -
உயிர்தேய்ந்து சாகும்படி வந்து நேர்ந்தது
என்ன காரணம் என்பாள்;  பிற உரைப்பது என்? -கோசலையின்
அப்போதைய மனநிலைக்கு வேறு உவமை சொல்வது  என்ன பயனுடைத்து;
கன்று பிரிந்துழி கறவை ஒப்பக் கரைந்து கலங்கினாள் - தன் கன்று
பிரிந்த பொழுது கறவை ஒப்பக்பசு துடிப்பதுபோல மனம் உருகித் கலங்கித்
துடித்தாள்.

     ‘இற அடுத்தது’ என அமைத்து ‘வ’ கரத்தை உடம்படுமெய்யாக்குதலே
நன்று. ‘இற’ செயவென்வாய்பாட்டு வினையெச்சம். மரத்துப் போன
பகக்கன்று பிரிந்துழிக் கலங்காது ஆதலின் ‘கறவை’என்னும் சொல்லால்
ஈன்றணிமை  உணர்த்தினார்  என்க.                              13