கோசலை வேண்டுகோள் 1623. | ‘ஆகின், ஐய! அரசன்தன் ஆணையால் ஏகல் என்பது யானும் உரைக்கிலென்; சாகலா உயிர் தாங்க வல்லேனையும், போகின் நின்னொடும் கொண்டனை போகு’ என்றான். |
‘ஐய! - இராமனே!; ஆகின் - அப்படியானால்; அரசன்தன் ஆணையால் -அரசன் இட்ட கட்டளை என்பதால்; யானும் ஏகல் என்பது உரைக்கிலென் - நானும் நீ வனம் போகாதே என்பதைச் சொல்லவில்லை; போகின் - (நீ) வனம் போவதாயின்; சாகலா உயிர் தாங்க வல்லேனையும் - சாகாத இவ்வியிரத் தூக்கமாட்டால் சுமக்கின்றவளாகிய என்னையும்; நின்னொடும் கொண்டனை போகு’ - உன்னோடு அழைத்துக்கொண்டு போவாயாக;’ என்றான் -. ‘அரசன் கட்டளையைக்குடிமகன் மறுத்தல் கூடாது; ஆகையால், அதை நான் மறுக்கவில்லை,உன்னைப் பிரிந்து உயிரைச் சுமந்து என்னால் வாழ முடியாது; உயிர்போகவும் போகாது; ஆகையால்உன்னோடு என்னையும் காட்டிற்கு அழைத்துச் செல்’ என்றாள் கோசலை. ‘பரதன் அரசளாளுதல், இராமன் வனம்போதல்’என்ற இரண்டையும் கோசலை ஏற்றுக்கொள்ளச் செய்வதில் இராமன் வெற்றிஅடைந்தான் என்பது இதனால் போதரும். 18 |