கோசலை மகனைக் கான் ஏகாது தடுக்கத் தயரதனிடம் சேறல் 1631. | இத் திறத்த எனைப் பல வாசம் உய்த்து உரைத்த மகன் உரை உட்கொளா, ‘எத் திறத்தும் இறக்கும் இந் நாடு’ எனா, மெய்த் திறத்து விளங்கிழை உன்னுவாள். |
மெய்த் திறத்து விளங்கிழை - சத்தியமாகிய அணிகலனை அணிந்த கோசலை; இத்திறத்து எனைப் பல வாசகம் உய்த்து உரைத்த மகன் உரை - மேற் கூறியவாறு பலவார்த்தைகளைக் கொண்டு வந்து சொல்லித் தேற்றிய இராமனது சொற்களை; உட்கொளா -மனத்தில் கொண்டு; ‘எத் திறத்தும் இந்நாடு இறக்கும்’ எனா - எப்படியும் இவன்இந்நாட்டைக் கடந்து காடு செல்வான் என்று; உன்னுவாள் - மனத்தில் கருதுபவளாகி, தடுக்கத் தயரதன்பால் சென்றாள் என்று அடுத்த செய்யுளில் முடியும். உன்னுவாள் -முற்றெச்சம். காடு செல்லாமல் தயரதன் மூலம் ஆணையை மாற்றலாம் என்பது கோசலைகருத்து. 26 |