அறுசீர் ஆசிரிய விருத்தம்  

1635.‘பிறியார் பிரிவு ஏது?’ என்னும்;
     ‘பெரியோய் தகவோ!’ என்னும்;
நெறியோ, அடியேன் நிலை?
     நீ நினையா நினைவு ஏது?’ என்னும்,
‘வறியோர் தனமே!’ என்னும்;
     ‘தமியேன் வலியே!’ என்னும்;
‘அறிவோ; வினையோ?’ என்னும்;
     ‘அரசே! அரசே!’ என்னும்.

     (கோசலை தயரதன் நிலை கண்டு) ‘பிறியார் பிரிவு எது?’ என்னும்-
பிரியக்கூடாதவர்களுடைய  பிரிவுக்குக் காரணம் என்ன என்பாள்;
பெரியோய்! தகவே’ என்னும் - பெருமை உடையவனே! இது உனக்குத்
தகுதியோ என்பாள்;  நெறியோ,  ‘அடியேன்நிலை - அடியோங்களாகிய
எங்கள் தற்போதைய நிலை நீதியாகுமா?;  நீ நினையா நினைவுஏது’
என்னும் -
இந்த நிலையை நீ நினையாமல் இருப்பது என்ன காரணம்
என்பாள்; ‘வறியோர் தனமே!’ என்னும் - வறுமையுற்றவர்களுக்குச்
செல்வமானவே என்பாள்;  ‘தமியேன் வலியே!’ என்னும் - தனியளான
எனக்கு வலிமையான துணையே என்பாள்; ‘அறிவோ,வினையோ’
என்னும் -
இது உனக்கு அறிவு தானோ, அறிந்து செய்யாது
ஊழ்வினையால்ஏற்பட்டதோ என்பாள்; ‘அரசே! அரசே!’  என்னும் -
மன்னனே மன்னனே என்றுபுலம்புவாள்.

     ‘பிரியார்’என்பது  எதுகை நோக்கி ‘பிரியார்’ என வல்லினமாயிற்று
என்றும்பிரியாதவர்களாகிய நாம்  இன்று பிரிய நேருமோ என்று  கூறிக்
கோசசலை அஞ்சினாள் ஆயிற்று.‘அறிவு ஒலினையோ’ என்ற ஆக்கி,
அறிவு
நீங்கினையோஎன்று பொருள் உரைப்பதும் உண்டு, செய்யுளின்
போக்கிற்குத் தனித்தனி ‘அறிவோ,வினையோ’ என உரைப்பதே
சிறப்பாகும்.                                               30