1636. | ‘இருள் அற்றிட உற்று ஒளிரும் இரவிக்கு எதிரும் திகிரி உருளத் தனி உய்த்து, ஒரு கோல் நடையின் கடை காண் உலகம் பொருள் அற்றிட முற்றுறும் அப் பகலில் புகுதற்கு என்றோ, அருளக் கருதிற்று இதுவோ? அரசர்க்கு அரசே!’ என்னும். |
‘அரசர்க்கு அரசே!’ - சக்கரவர்த்தியே; இருள் அற்றிட உற்று ஒளிரும்இரவிக்கு - இருள் ஒழியும்படி பொருந்தி விளங்குகின்ற சூரியனுக்கு; எதிரும் திகிரி -ஒப்பாகிய ஆணைச் சக்கரத்தை; உருளத்தனி உய்த்து - உலகெங்கும் செல்லும்படி ஏகசக்ராதிபதியாகச் செலுத்தி; ஒரு கோல் நடையின் - ஒப்பற்ற செங்கோல் செலுத்தப் படுதலின்; கடைகாண் உலகம் - யாதொரு இடையூரும் இன்றி முடிவு அழியும்படி; முற்றுறும் அப்பகலில் - முடிவடைகின்ற அந்த ஊழிக்காலத்தில்; புகுதற்கு என்றோ அருளக்கருதிற்று - செல்லும்படி நுழைதற்காகவோ நீ அருள்கொண்டு செய்யக் கருதிய செயல்; இதுவோ? - இதுதானோ; என்னும் - என்பாள். மக்களது வறுமை, அறியாமை இருளகல விளங்குதல், நாட்டின் எல்லா இடங்களிலும் செல்லுதல்ஆகியவற்றால் சூரியனுக்கு ஒப்பானது ஆணைச் சக்கரம் என்பதாம். உன் அரசாட்சியில் நலம்பெற்றஉலகம் பிரளயகாலத்து அழியை அடையக் கருதியோ இத்தகைய செயலைச் செய்யக் கருதியது என்றுதயரதனை நோக்கிப் புலம்பினள் கோசலை. 31 |