1669.‘மெய் ஆர் தவமே செய்து, உன்
     மிடல் மார்பு அரிதின் பெற்ற செய்யாள்
என்னும் பொன்னும்,
     நிலமாது என்னும் திருவும்,
உய்யார்! உய்யார்! கெடுவேன்;
     உன்னைப் பிரியின், வினையேன்,
ஐயா! கைகேசியை
     நேராகேனோ நான்? என்றான்.

     ஐயா! - ஐயனே; மெய் ஆர் தவமே செய்து- உண்மை பொருந்திய
தவத்தைச்செய்து; உன் மிடல் மார்பு அரிதின் பெற்ற - உன்னுடைய
வலிய மார்பைக் கிடைத்தற்கருமையாகப் பெற்ற; செய்யாள் என்னும்
பொன்னும்-
திருமகள் என்னும் பெண்ணும்; நிலமாது என்னும் திருவும்-
நிலமகள் என்னும் செல்வியும்; உய்யார் உய்யார் - நீவனம் செல்லப்
பிழைக்கமாட்டார்; கெடுவேன் - பாவியாகியவனும்; வினையேன் நான் -
தீவினை உடையவனுமாகிய நான்; உன்னைப் பிரியின் - உன்னைப்
பிரிந்து (உயிர்வாழ்ந்தால்); கைகேசியை நேராகேனோ' - கைகேயிக்கு
ஒப்பாகிவிட மாட்டேனா;' என்றான்-

     உன்னைப் பிரிந்து உயிர்தரித்தால் கைகேயிக்கும் எனக்கும் என்ன
வேறுபாடு? நானும் அவள்போல வன்கண்மை உடையவனாய்விடுவேன்
அல்லவா - என்றான்.                                         64