1692. | ‘சிந்தை தளர்வுற்று, அயர்தல் சிறிதும் இலெனாய், “இன் சொல் மைந்தன் உளன்ழு என்றதனால், மகிழ்வோடு இவண் வந்தனெனால்; அந்த முனி சொற்றமையின், அண்ணல் வனம் ஏகுதலும், எம்தம் உயிர் வீகுதலும், இறையும் தவறா’ என்றான். |
‘சிந்தை தளர்வுற்று அயர்தல் சிறிதும் இலெனாய் - மனம் தளர்ந்து சோர்வடைதல்சிறிதும் இல்லாமல்; இன் சொல் மைந்தன் உளன்’ என்றதனால் - இனிய சொற்களைப்பேசும் மகன் பிறப்பான்’ என்பது அவன் சாபத்தால் ஏற்பட்டதனால்; இவண் -நகரத்துக்கு; மகிழ்வோடு வந்தனென் - மகிழ்ச்சியோடு வந்து சேர்ந்தேன்; அந்த முனி சொற்றமையின் - அந்த முனிவன் சொன்னபடியால்; அண்ணல் வனம் போகுதலும் -இராமன் (என்னைப்) பிரிந்து காடு செல்லுதலும்; எம்தம் உயிர் வீகுதலும் - என்னுடைய உயிர் போவதும்; இறையும் தவறா’ - சிறிதளவும் மாறா; என்றான் - மகன் இன்றி இருந்த தயரதனுக்கு முனிவன் சாபம் மகன் உண்டு என்பதை உணர்த்திற்று என்பதால் அப்போதைக்கு அது மகிழ்ச்சியானதாகவே ஆயிற்று என்றானாம் - மகன் பிறப்பது முனிவன் சாபத்தால் உண்மையாகி நிறைவேறியமையின் மகன்பிரிவதும், தன்னுயிர் போவதும்கூட அச்சாபப்படி நிறைவேறுவது உறுதி என்றான். ‘ஆல் ’ அசை.‘என்றா ன்’ என்றமையவேண்டியது எதுகை நோக்கி எந்தம் என நின்றது. 87 |