இராமன் காடு செல்வது கேட்ட மக்கள் துயர்நிலை  

1697.வார் ஆர் முலையாரும்,
     மற்று உள்ள மாந்தர்களும்,
ஆராத காதல்
     அரசர்களும், அந்தணரும்,
பேராத வாய்மைப்
     பெரியோன் உரை செவியில்
சாராத முன்னம்,
     தயரதனைப்போல் வீழ்ந்தார்.

     பேராதவாய்மைப் பெரியோன் உரை - பிறழ்ந்து போகாத
உண்மைக்கு உறைவிடமானவசிட்ட முனிவனது  வார்த்தை;  செவியில்
சாராத முன்னம்
-(தங்கள்)  காதுகளில் சேர்வதற்கு முன்னமே; ஆராத
காதல் அரசர்களும்
- (இராமனதுமுடிசூட்டு விழாவில்) அடங்காத அன்பை
உடைய அரசர்களும்;  அந்தணரும் - வேதியரும்; மற்று உள்ள
மாந்தர்களும்
- வேறு உள்ள மனிதர்களும்;  வார்ஆர் முலையாரும் -
கச்சணிந்த தனத்தையுடைய  மகளிரும்;  தயரதனைப் போல்வீழ்ந்தார்-

     மற்றுள்ள மாந்தர்கள் - அமைச்சர்,  சேனைத் தலைவர்,  தூதுவர்
முதலியவர்.  பெண்டிர்துன்பம்  பெரிதாய்த் தோன்றுமாதலின் செய்யுளில்
முதற்கண் உரைக்கப்பட்டது.  தயரதன்தன்மகன் காரணமாகத் துன்பத்தில்
ஆழ்ந்தது  போலவே அத்தகைய அன்புடையவர்கள் இவர்களும்ஆதலின்
‘தயரதனைப் போல் ’ துன்புற்றார் என்றார்.  அதனையே ‘ஆராத காதல்’
எனவும் கூறினார்.                                             92