1707. | ‘ஆளான் பரதன் அரசு’ என்பார்; ‘ஐயன், இனி மீளான்; நமக்கு விதி கொடிதேகாண்’ என்பார்; ‘கோள் ஆகி வந்தவா, கொற்ற முடிதான்’ என்பார்; ‘மாளாத நம்மின் மனம் வலியார் ஆர்?’ என்பார். | ‘பரதன்அரசு ஆளான் - பரதன் அரசாட்சியை ஏற்கமாட்டான்;’ என்பார் - ; ‘ ஐயன் இனி மீளான் - இராமன்இனிமேல் நாடு திரும்ப மாட்டான்; நமக்கு விதி கொடிதே காண்’- நமக்கு ஊழ் வினை மிகவும் கொடுமையானது;’ என்பார் - ; ‘ கொற்ற முடிதான்- வெற்றியுடைய மகுடம்; கோள் ஆகி வந்தவா‘ - தீய இடையூறாகிவந்து சேர்ந்தபடி என்னே;’ என்பார் - ; மாளாத நம்மின் மனம் வலியார்ஆர்?’ - (இத்தனையும் கேட்டு வைத்தும் கண்டு வைத்தும் ) இறந்துபடாத நம்மைக் காட்டிலும் உலகில் கொடுமனம் உடையவர்கள்யார் உளர்;’ என்பார் -. முடிசூடுதல் என்ற பேச்சு வரவில்லையானால் வனம் செல்லும் துயர்நிலை இராமனுக்கு வந்திராதேஎன்னும் ஆதங்கத்தால் முடியே இடையூறாகித் தீங்கு செய்தது என்பாராயினர். |