1765.‘வெவ் வினையவள் தர விளைந்ததேயும் அன்று;
இவ் வினை இவன்வயின் எய்தற்பாற்றும் அன்று;
எவ் வினை நிகழ்ந்ததோ? ஏவர் எண்ணமோ?
செவ்விதின், ஒருமுறை தெரியும் பின்’ என்றான்.

     இவ்வினை - இச்சீரை சுற்றிக் காடுபோதலாகிய செயல்;
வெவ்வினையவள் தரவிளைந்ததேயும் அன்று - கொடு வினை படைத்த
கைகேயி கொடுக்க அவளால் உண்டாகியதும்அன்று;  இவன் வயின்
எய்தற்பாற்றும் அன்று
- வேறொரு வகையால் சத்துவகுண வடிவனாகிய
இவன்பால் வரக்கடவதும் அன்று;  எவ்வினை நிகழ்ந்ததோ? - எந்தச்
செயலால் இப்படிநடைபெற்றதோ?;  ஏவர் எண்ணமோ? - யாருடைய
மனக்கருத்தால் நடந்ததோ; பின்ஒருமுறை - பிற்காலத்தில் ஒரு படியாக;
செவ்விதின் தெரியும்’ - நன்குவிளங்கும்;  என்றான் - என மனத்துள்
சொல்லிக்கொண்டான்.

     மெய்யுணர் ஞானியாகிய வசிட்டன் முன்பு ‘ஈது முன் நிகழ்ந்த
வண்ணம் என இதயத்து எண்ணி’(208.) யவன் ஆதலின்,  இந்நிகழ்ச்சியின்
வித்து  அவனுக்குத் தெரியும்.  ஆயினும், அதுஅப்போது அவனுக்குத்
தெரிந்தது;  இப்போது  மாயையால்  ஒன்றும் அறிகிலன் ஆயினன்;
அறிவானாயின் இராமனை வேண்டலும், கைகேயியைக் கடிந்துரைத்தலும்
முதலியன அவனால்நடைபெறாவாம். அதனாலேயே ‘எவ்வினை
நிகழ்ந்ததோ ஏவர் எண்ணமோ’ என இறைமாயையால்முன்னறிந்ததனையே
மறந்து அறியாதவன் ஆயினான் என்க.                           160