வசிட்டன் இராமனைத் தடுத்தல் 1766. | வில் தடந் தாமரைச் செங் கண் வீரனை உற்று அடைந்து, ‘ஐய! நீ ஒருவி, ஓங்கிய கல் தடம் காணுதி என்னின், கண் அகல் மல் தடந் தானையான் வாழ்கிலான்’ என்றான். |
(வசிட்டன்) வில் தடந் தாமரைக் செங்கண் வீரனை - வில் ஏந்திய பெரிய தாமரைமலராகிய சிவந்த கண்களையுடைய இராமனை; உற்று அடைந்து - நெருங்கி வந்து; ‘ஐய!-; நீ ஒருவி - அரண்மனையை விட்டு நீங்கி; ஓங்கிய கல் தடம் காணுதி என்னின் - உயர்ந்த மலை வழியில் செல்லக் காணுவாய் எனில்; கண் அகல் - இட மகன்ற; மல் தடந் தானையான்- வலிமிக்க பெருஞ்சேனையையுடைய தசரதன்; வாழ்கிலான்’- வாழ மாட்டான்; (இறந்துபடுவான்); என்றான் -. 161 |