1774.விழுந்தனர் சிலர்; சிலர் விம்மி விம்மி மேல்
எழுந்தனர்; சிலர் முகத்து இழி கண்ணீரிடை
அழுந்தினர்; சிலர் பதைத்து, அளகவல்லியின்
கொழுந்து எரி உற்றென, துயரம் கூர்கின்றார்.

     சிலர் விழுந்தனர் -; சிலர் மேல் விம்மி விம்மி எழுந்தனர் -
சிலர் மேலும்மேலும் அழுதழுது எழுந்தார்கள்; சிலர் -; முகத்து இழி
கண்ணீரிடை அழுந்தினர்
-முகத்திலிருந்து இறங்குகின்ற கண்ணீரினிடத்து
அழுந்திப் போனார்கள்; சிலர்-; பதைத்து- துடித்து; அனகவல்லியின் -
மயிர்க் கொடியின்; கொழுந்து எரி உற்றென - நுனிதீப்பற்றியது போல;
துயரம் கூர்கின்றார் - துன்பம் மிகுகின்றார்.

     அனகம்  என்று பாடங்கொண்டு நீர் எனப் பொரு படுமாதலின்
தண்ணீரில்  உள்ள கொடியின் கொழுந்து  தீப்பற்றியது  போல என
உரைப்பினும்அமையும்.                                        169