1782. | ‘புகழ் இடம், கொடு வனம் போலும், என்று, தம் மகன்வயின் இரங்குறும் மகளிர் வாய்களால், அகல் மதில் நெடு மனை, அரத்த ஆம்பல்கள் பகலிடை மலர்ந்தது ஓர் பழனம் போன்றவே. |
‘புகல் இடம் கொடு வனம் போலும் என்று’- இராமனுக்கு இனித் தங்கும் இடம்கொடிய வனம் என்று சொல்லி; தம் மகன் வயின் - தம்முடைய மகனாகிய இராமனிடம்; இரங்குறும் - அவலிக்கின்ற; மகளிர் வாய்களால் - அத்தேவியரது அமுது மேலும்சிவந்த வாய்களால்; அகல் மதில் நெடு மனை - அகன்ற மதிலை உடைய பெரிய அரண்மனை; அரத்த ஆம்பல்கள் - செவ்வாம்பற் பூக்கள்; பகலிடை - பகற்காலத்தில்; மலர்ந்தது - மலர்ந்துள்ளதான; ஓர் பழனம் போன்ற - ஒரு வயலைப் போன்று ஆயின. வாய்க்கு ஆம்பல் உவமை. அழுதலால் மேலும் சிவந்த வாய் செவ்வாம்பல் மலர்ந்தாற் போலும், பல்லாயிரம் தேவியர் அழுதலால் பல செவ்வாம்பல்கள்பகலில் மலர்ந்த வயல் போன்றாயிற்று அரண்மனை என்றார். ‘ஏ’ காரம் ஈற்றசை. 177 |