இராமனை வீதியில் கண்டார் உற்ற வருத்தம் 1788. | அந்தணர், அருந் தவர், அவனி காவலர், நந்தல் இல் நகருளார், நாட்டுளார்கள், தம் சிந்தை என் புகல்வது? தேவர் உள்ளமும் வெந்தனர், மேல் வரும் உறுதி வேண்டலர்.* |
அருந்தணர்-; அருந்தவர்- அரிய முணிவர்கள்; அவனிகாவலர்- பூமிஅரசர்கள்; நந்தல் இல் நகருளார் -கெடுதலில்லாத அயோத்தி நகரில் உள்ளவர்கள்; நாட்டுளார்கள் -கோசல நாட்டில் உள்ளவர்கள்; தம் சிந்தை புகல்வது என்?- மனம்பட்டதுன்பத்தைச் சொல்வது எவ்வாறு; மேல்வரும் உறுதி வேண்டலர் -(இராமன்காடு செல்வதால்தங்களுக்கு) எதிர்காலத்தில் வரும் நன்மையும் விரும்பாதவர்களாய்; தேவர்உள்ளமும் வெந்தனர் -(இராமனது மரவுரிக் கோலம் கண்டும்) தேவர்களும் உள்ளம் வெந்துபோனார்கள். தேவர்களுக்காகவே இராமன் மரவுரி தரித்துக் காடு சென்றானாகத் தேவர்களே அக்கோலம் கண்டு தரியாதவர்களாக மனம் வெந்தனர் ஆயின் மற்றவர் நிலையைச்சொல்வது எவ்வாறு? என்றாராம். 183 |