1792.வலம் கடிந்து, ஏழையர் ஆய மன்னரை
‘நலம் கடிந்து, அறம் கெட, நயக்கலீர்கள்; நும்
குலம் கடிந்தான் வலி கொண்ட கொண்டலை,
நிலம் கடிந்தாளொடு நிகர்’ என்றார் - சிலர்.

     சிலர் -;  வலம் கடிந்து - வலிமை போக்கி;  ஏழையர் ஆய
மன்னரை
-(ஏதும் செய்யாமல்) அறிவீனர்களாய் இருக்கும் அரசரைப்
பார்த்து;  ‘நலம் கடிந்து  அறம் கெட நயக்கலீர்கள் - நன்மை நீக்கி,
தருமம் அழியும்படி செயல் செய்ய விரும்பாதீர்கள்(அப்படிச் செய்தால்);
நும் குலம் கடிந்தான் வலி கொண்ட கொண்டலை- உம்முடையஅரசர்
குலத்தை (இருபத்தொரு தலைமுறை) கருவறுத்தவனாகிய  பரசுராமனது
பலிமையை வெற்றி கொண்டமேகவண்ண இராமனை;  நிலம்
கடிந்தானொடு
- அரசாட்சி நிலவுரிமையிலிருந்து  நீக்கியகைகேயியோடு;
நிகர்’ - நீங்களும் ஒப்பாவீர்;’  என்றார் -.

     அரசர்களை நோக்கி; ‘அறத்துக்குப் போராடுங்கள்; இராமனை மீண்டும்
ஆட்சியில்அமர்த்துங்கள்;  இல்லையேல் நீங்களும் கைகேயிக்குச்
சமானமாவீர்கள் என்றனர் சிலர்என்க.                            187