1793. | ‘திரு அரை சுற்றிய சீரை ஆடையன், பொரு அருந் துயரினன், தொடர்ந்து போகின்றான். இருவரைப் பயந்தவள் ஈன்ற கான்முளை ஒருவனோ, இவற்கு இவ் ஊர் உறவு?’ என்றார் - சிலர் |
சிலர் -; ‘திரு அரை சுற்றிய சீரை ஆடையன் - அழகிய இடுப்பின்கண் கட்டிய மரவுரி உடையை உடையவனாய்; பொரு அருந்துயரினன் - ஒப்பற்ற பெரும் துன்பத்தோடு; தொடர்ந்து போகின்றான் - (இராமனைப் ) பின்பற்றித் துணையாகச் செல்கின்ற; இருவரைப் பயந்தவள் - (இலக்குமண சத்துருக்கனராகிய) இரு பிள்ளைகளைப் பெற்றசுமித்திரையானவள்; ஈன்ற - பெற்றெடுத்த; கான்முளை - மகனாகிய இலக்குவன்; ஒருவனோ? - ஒருவன் மட்டும்தானா?; இவற்கு இவ்ஊர் உறவு’ - இராமனுக்கு இந்தஊரில் உறவாக இருப்பவர் (வேறு யாரும் இலரோ);’ என்றார் -. தாம் இவ்வளவு பேர் இருக்கவும் இலக்குவன் மட்டு்மே பின் தொடர்ந்து, செல்வது கண்டு தம்மைத் தாமே நொந்துகொண்டவர் பேசிய பேச்சுஇது. 188 |