1795. பொன் அணி, மணி அணி, மெய்யின் போக்கினர்,
மின் என மீன் என விளங்கும் மெய் விலைப்
பல் நிறத் துகிலினைப் பறித்து நீக்கினர்,
சின்ன நுண் துகிலினைச் செறிக்கின்றார் - சிலர்.*

    சிலர்-;  மெய்யின் - தம் உடம்பிலிருந்து;  பொன்அணி, மணி
அணிபோக்கினர்
- பொன்னாலும் மணியாலும் இயன்ற அணிகலன்களைக்
கழற்றி எறிந்தனராகி;  மின் என விளங்கும் மெய் -மின்னலைப்
போல விட்டுவிளங்கும் தமது  உடம்பில்; மீன் என விலைப்பல்நிறத்
துகிலினை
- விண்மீனைப்போன்ற சிறந்த விலை படைத்த பல நிறமுள்ள
உயர்ந்த ஆடைகளைப்;  பறித்து நீக்கினர் -பிடித்திழுத்து அப்பால் வீசி
எறிந்து;  சின்ன நுண்துகிலினைச் செறிக்கின்றார்-சிறிய நுண்ணிய
ஆடையை இறுகக் கட்டுகின்றார்.

     இராமன் அணிதுறந்து  மரவுரி கொண்டு செல்லும்போது  தமக்கு
அலங்யையும்,  மீன்என -ஆடையையும் குறித்ததாகக் கொள்க.       190