1812. | ஆடினர் அழுதனர்; அழுத ஏழ் இசை பாடினர் அழுதனர்; பரிந்த கோதையர், டினர் அழுதனர்; உயிரின் அன்பரைக் கூடினர் அழுதனர் - குழாம் குழாம்கொடே. |
குழாம் குழாம் கொடு-கூட்டம் கூட்டமாகத் திரண்டு; ஆடினர்- நடனம்ஆடிக் கொண்டிருந்தவர்கள்;அழுதனர்-; அமுத ஏழ் இசை- அமுதம் போன்ற இனியஏழு சுரங்களை;பாடினர் அமுதனர்- பாடிக்கொண்டிருந்தவர்கள் அழுதனர்;பரிந்தகோதையர் ஊடினர்- அறுத்து வீசிய மாலையராய் ஊடிக்கொண்டிருந்தவர்கள்;அழுதனர்-; உயிரின் அன்பரைக் கூடினர்- உயிர்போலச் சிறந்த காதலரைக் கூடிய மகளிர்; அழுதனர்-. வெவ்வேறு இன்பமான தொழிலில் ஈடுபட்டிருந்தவர்கள் அத்தொழிலைக் கைவிட்டு அழுதனர்என்பதாம். ‘ஏ’ ஈற்றசை. 207 |