1819.அழுது, தாயரோடு அருந் தவர்,
     அந்தணர், அரசர்,
புழுதி ஆடிய மெய்யினர்,
     புடை வந்து பொரும,
பழுது சீரையின்
     உடையினன் வரும்படி பாரா,
எழுது பாவை அன்னாள்,
     மனத் துணுகமொடு எழுந்தாள்.

     அந்தணர்- வேதியர்;  அருந்தவர் -அரிய முனிவர்;  அரசர் -;
(ஆகிய அனைவரும்) அழுது  -;  புழுதி ஆடிய மெய்யினர்- புழுதி
படிந்த உடம்புஉடையவராய்; புடை வந்து  பொரும - பக்கத்தில்வந்து
விம்மியழ;  பழுது சீரையின் உடையினன் -அழகற்ற  மரவுரி  உடை
உடையவனாய்; வரும்படி -(இராமன்) வரும்தன்மையை; பாரா- பார்த்து;
எழுது பாவை அன்னாள் -சித்திரத்தில் எழுதப்பெற்ற பாவையை ஒத்த
சீதை;  துணுக்கமொடு - மனத்தில்வெருவுதலுடனே; எழுந்தாள் -.

     இதுகாறும்  காணாததும்  எதிர்பாராததுமான காட்சியைக் கண்டாள்
ஆதலின, சீதைக்குத்திடுக்கீடு  நிகழ்ந்தது.                         214