1824.‘துறந்து போம்’ எனச் சொற்ற சொல் தேறுமோ -
உறைந்த பாற்கடற் சேக்கை உடன் ஓரீஇ,
அறம் திறம்பும் என்று ஐயன் அயோத்தியில்
பிறந்த பின்பும், பிரியலள் ஆயினாள்?

     (நாமும் உடன் அவதரிக்காவிட்டால்) ‘அறம் திறம்பும்’ என்று -
தருமம் நிலைகெடுமே என்று கருதி; உறைந்த பாற்கடல் சேக்கை தாம்-
வசித்த பாற்கடலில் உள்ளஆதிசேடனாகிய படுக்கையை;  உடன் ஓரீஇ -
ஒன்றாக விட்டு நீங்கி; ஐயன்-திருமால்; அயோத்தியில் பிறந்தபின்பும் -
அயோத்தியில் அவதரித்த பிறகும்;  பிரியலள் ஆயினாள் - அவனைப்
பிரியாது உடன் உறைய வந்தவள் ஆகிய சீதை; துறந்துபோம் எனச்
சொற்ற சொல் -
தன்னைப் பிரிந்து விட்டுப் போவேன்’ எனப்
பொருள்படுமாறுஅவன் சொன்ன சொல் கேட்டு;  தேறுமோ? -
ஆற்றவளோ?

     ஐயன் மட்டும் அவதாரம் செய்தால் ‘அறம் திறம்பும்’ என்று  கருதி,
அதற்காகவே  தானும்உடன் அவதரித்தவள்,  இப்போது  பிரிவதைத்
தாங்க இசைவளோ?                                           219